முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு

நூல் அமைப்பு

  • பொருள் = ஆற்றியிருத்தல்
  • திணை = அகத்திணை(முல்லை)
  • பா வகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 103(பத்துப்பாட்டு நூல்களில் சிறியது)

நூல் பெயர்க்காரணம்

  • முல்லைத் தினையை பாடியதால் முல்லைப் பாட்டு எனப்பட்டது.
  • “இல் இருத்தல் முல்லை” என்பது இதன் இலக்கணம்.

முல்லைப்பாட்டு வேறு பெயர்கள்

  • நெஞ்சாற்றுப்படை
  • முல்லை

முல்லைப்பாட்டு ஆசிரியர்

  • இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்
  • இவர் எட்டு தொகை நூல்களுள் ஒரு பாடலையும் பாடாதவர்.

தலைவன்

  • முல்லைப் பாட்டு அகநூல் என்பதால் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
  • இந்நூலில் வரும் “கானம் நந்திய செந்நிலப் பெருவழி” என்னும் தொடரை கொண்டு இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று சிலர் கூறுவர்.

உரை

  • இந்நூலுக்கு மறைமலையடிகள் ஆராய்ச்சி உரை எழுதி உள்ளார்.

முல்லைப்பாட்டு விளக்கம்

  • பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.
  • முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாக கூறப்பட்டுள்ளன.
  • முதல் 23 அடிகள் = தலைவியின் பிரிவித் துயர் கூறப்பட்டுள்ளது.
  • அடுத்த 55 அடிகள் = அரசனின் பாசறை அமைப்பு, பாசறையின் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளது.
  • அடுத்த பத்து அடிகள் தலைவியின் அவல நிலை கூறப்பட்டுள்ளது
  • இறுதியில் முல்லை நிலத்தின் இயல்பும், தலைவன் நிலையும், கார் காலத்திற்குப் பிறகு கூதிர் காலத்தில் அவன் திரும்புதல் கூறப்பட்டுள்ளது

முக்கிய அடிகள்

  • நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை

            அரும்பு அவிழ் அலறி தூஉய்க் கைதொழுது

            பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

  • நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்குதடக்கை

            நீர்செல நிமிர்ந்த மாஅல் போல

  • குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுரத்து

           இரவுபகல் செய்யும் திண்பிடி ஒண்வாள்

           விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்

 

 

 

2 thoughts on “முல்லைப்பாட்டு”

Leave a Reply