10 ஆம் வகுப்பு பரிதிமாற் கலைஞர்
10 ஆம் வகுப்பு பரிதிமாற் கலைஞர்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர்.
பரிதிமாற்கலைஞர் ஆசிரியர் குறிப்பு
- சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
- மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
- பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்.
- தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கல்வி கற்றல்
- தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
- மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.
- சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
- இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
இயற்றமிழ் மாணவர்
- தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை “இயற்றமிழ் மாணவர்” எனப் பெயரிட்டு அழைத்தார்.
மதுரைச் தமிழ்ச்சங்கம்
- மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
- பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
திராவிட சாஸ்திரி
- யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.
- பரிதிமாற்கலைஞரை “திராவிட சாஸ்திரி” என்று அழைத்தவர் = சி.வை.தாமோதரனார்.
தனிப்பாசுரத்தொகை
- பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
- இந்நூலினை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
கம்பராமாயண உவமை
- பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த போது நடந்த நிகழ்வு.
- கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய “ஆர்தரின் இறுதி” என்னும் நூலில் இருந்து ஒரு பாடலை சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
- தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.
தமிழின் சிறப்பை உணர்த்தல்
- வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.
- தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.
தமிழ்த்தொண்டு
- பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
- ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.
பரிதிமாற்கலைஞர் படைப்புகள்
- “ரூபாவாதி, கலாவதி” முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
- அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
- “சித்திரக்கவி” என்னும் நூலைப் படைத்தார்.
- குமரகுருபரரின் “நீதிநெறிவிளக்கம்” நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
இதழ்ப் பணி
- மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த :ஞானபோதினி” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
- மும்மொழிப் புலமை உடையவர்.
- மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் “செந்தமிழ்” இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.
- தமிழ்மொழி “உயர்தனிச் செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டினார்.
மறைவு
- தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் இயற்கை எய்தினார்.
- நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
பரிதிமாற்கலைஞர் உருவாக்கிய சொல்லாக்கங்கள்
- Aesthetic = இயற்கை வனப்பு
- Biology = உயிர்நூல்
- Classical Language = உயர்தனிச் செம்மொழி
- Green Rooms = பாசறை
- Instinct = இயற்கை அறிவு
- Order of Nature = இயற்கை ஒழுங்கு
- Snacks = சிற்றுணா
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்
- இராசமாணிக்கனார்