இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்னூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை பயின்றார்
இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார்
தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்
மா இராசமாணிக்கனார் பெற்ற சைவத் தமிழ் பட்டங்கள்
சைவ சமயத்தில் இவர் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து இவருக்குச் சைவ சமயத் தலைவர்களின் வாயிலாகப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. அவை,
சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் – 1951ல் திருவாடுதுறை ஆதீனம் வழங்கினார்.
ஆராய்ச்சிக் கலைஞர் – 1955ல் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் வழங்கினார்.
சைவ இலக்கிய பேரறிஞர் – 1963ல் தருமபுர ஆதீனம் வழங்கினார்.
சைவ நெறிக் காவலர் – சைவ சித்தாந்த சமாஜ்.
மா இராசமாணிக்கனார் படைப்புகள்
நாற்பெரும் வள்ளல்கள் (முதல் நூல்)
பொற்கால வாசகம் (முதல் பாடநூல்)
ஹர்ஷவர்த்தனன் (1930)
முடியுடை மூவேந்தர் (1931)
பொற்கால வாசகம் (1932) பாடநூல்.
ஏப்ரஹாம் லிங்கன் (1934)
முசோலினி (1934)
பெரியபுராண ஆராய்ச்சி
பல்லவர் வரலாறு
பல்லவப் பேரரசர்
சோழர் வரலாறு
தமிழர் திருமண நூல்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி
சங்க காலத் தமிழ்ச் சமுதாயம்
இலக்கிய அமுதம்
கால ஆராய்ச்சி
புதிய தமிழகம்
சேக்கிழார் – ஆராய்ச்சி நூல்
சேக்கிழார்
சைவ சமய வளர்ச்சி
சைவ சமயம்
சிலப்பதிகாரக் காட்சிகள்
மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
தமிழ் அமுதம்
தமிழ் இனம்
தமிழ்நாட்டு வட எல்லை
தமிழ்மொழி இலக்கிய வரலாறு
தமிழக ஆட்சி
தமிழகக் கலைகள்
தமிழர் திருமணத்தில் தாலி
மா இராசமாணிக்கனார் நூல்கள்
நாற்பெரும் வள்ளல்கள் 1930
ஹர்ஷவர்த்தனன் 1930
முடியுடை வேந்தர் 1931
நவீன இந்திய மணிகள் 1934
தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934
முசோவினி 1934
ஏப்ரஹாம் லிங்கன் 1934
அறிவுச்சுடர் 1938
நாற்பெரும் புலவர்கள் 1938
தமிழர் திருமண நூல் 1939
தமிழர் திருமண இன்பம் 1939
மணிமேகலை 1940
மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941
பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941
பல்லவர் வரலாறு 1944
மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944
சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945
இரண்டாம் குலோத்துங்கள் 1945
கட்டுரை மாலை 1945
செய்யுள் – உரைநடைப் பயிற்சி நூல் 1945
முத்தமிழ் வேந்தர் 1946
காலியம் செய்த கவியரசர் 1946
விசுவநாத நாயக்கர் 1946
சிவாஜி 1946
சிலப்பதிகாரக் காட்சிகள் 1946
இராஜேந்திர சோழன் 1946
பல்லவப் பேரரசர் 1946
கட்டுரைக் கோவை 1946
சோழர் வரலாறு 1947
ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947
பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947
வீரத் தமிழர் 1947
இருபதாம் நூற்றாண்டுப் புலவர் பெருமக்கள் 1947
இந்திய அறிஞர் 1947
தமிழ்நாட்டு வடஎல்லை 1948
பெரியபுராண ஆராய்ச்சி 1948
கதை மயர் மாலை (மலர் ஒன்று) 1948
இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948
சிறுகதைக் களஞ்சியம் (பகுதி ஒன்று) 1949
சிறுகதைக் களஞ்சியம் (பகுதி இரண்டு) 1949
சிறுகதைக் களஞ்சியம் (பகுதி மூன்று) 1949
மேனாட்டுத் தமிழறிஞர் 1950
தென்னாட்டுப் பெருமக்கள் 1950
இந்தியப் பெரியார் இருவர் 1950
தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950
நாற்பெரும் புலவர் 1950
மறைமலையடிகள் 1951
அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951
சங்கநூற் காட்சிகள் 1952
இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953
விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953
பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953
சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954
திருவள்ளுவர் காலம் யாது? 1954
சைவ சமயம் 1955
கம்பர் யார்? 1955
வையை 1955
தமிழர் திருமணத்தில் தாலி 1955
பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955
இலக்கிய அறிமுகம் 1955
அருவிகள் 1955
தமிழ் மொழிச் செல்வம் 1956
பூம்புகார் நகரம் 1956
தமிழ் இனம் 1956
தமிழர் வாழ்வு 1955
வழிபாடு 1957
இல்வாழ்க்கை 1957
தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957
வழியும் வகையும் 1957
ஆற்றங்கரை நாகரிகம் 1957
தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957
என்றுமுள தென்றமிழ் 1957
சைவ சமய வளர்ச்சி 1958
பொருநை 1958
அருள்நெறி 1958
தமிழரசி 1958
இலக்கிய அமுதம் 1958
எல்லோரும் வாழவேண்டும் 1958
தமிழகக் கலைகள் 1959
தமிழக ஆட்சி 1959
தமிழக வரலாறு 1959
தமிழர் நாகரிகமும் பண்பாடும் 1959
தென்பெண்ணை 1959
புதிய தமிழகம் 1959
நாட்டுக்கு நல்லவை 1959
தமிழ் அமுதம் 1959
பேரறிஞா இருவர் 1959
துருக்கியின் தந்தை 1959
தமிழகக் கதைகள் 1959
குழந்தைப் பாடல்கள் 1960
கட்டுரைச் செல்வம் 1960
தமிழகப் புலவர் 1960
தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1954
தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965
சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969
பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970
கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978
இலக்கிய ஓவியங்கள் 1979
பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள்
சிறுவர் சிற்றிலக்கணம்
பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும்
பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி-2)
ஆங்கில நூல்
The Development of Saivism in South India 1964
மா இராசமாணிக்கனார் பார்வைக்குக் கிடைக்காத நூல்கள்
பதிற்றுப்பத்துக் காட்சிகள்
செந்தமிழ்ச் செல்வம்
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள்
பள்ளித் தமிழ் இலக்கணம்
செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்)
செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)
மா இராசமாணிக்கனார் குறிப்புக்கள்
எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று பி.ஓ.எல், எல்.டி., எம்.ஓ.எல் ஆகிய பட்டங்களை முறையே 1939, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் பெற்றார்
1947 முதல் 1953 வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்
1953ல் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பொறுப்பேற்றார்
1959 முதல் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழக துணைத்தமிழ் பேராசிரியராகவும் மா இராசமாணிக்கனார் பணியாற்றியுள்ளார்
மா இராசமாணிக்கனாரின் முதல் நூல் = நாற்பெரும் வள்ளல்கள்
மா இராசமாணிக்கனாரின் முதல் பாடநூல் = பொற்கால வாசகம்
மா இராசமாணிக்கனார் சிறப்புகள்
1935இல் இராசமாணிக்கனார் வித்துவான் பட்டம் பெற்றார்
இவர் முனைவர் பட்டம் பெற காரணமாக இருந்த நூல் = சைவ சமய வளர்ச்சி
2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
தருமபுர ஆதினம் இவரது “சைவ சமய வளர்ச்சி” என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்
தமிழில் முதன் முதலாக சிந்துவெளி நாகரிகம் பற்றி நூல் எழுதியவர் மா இராசமாணிக்கனார். இவரின் நூல் = மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
முதன் முதலில் தமிழில் சங்க காலம் தொடங்கி, பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ச்சி நோக்கில் எழுதியவர் மா இராசமாணிக்கனார்.
ஹீராஸ் பாதிரியார் = “தென்னிந்திய வரலாறு பற்றியும் இலக்கியம் பற்றியும் வித்துவான் மா. இராசமாணிக்கம் எழுதியுள்ள நூல்கள் பலவும் அவரது மகத்தான சாதனைகளாகும். பல்லவர், சோழர் வரலாறுகளின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றி அவர் இயற்றிய இந்த நூல்கள் அயராத அவர் உழைப்புக்கு அழியாச் சின்னங்களாகும்” என்றார்
இராசமாணிக்கனாரின் மாணவர் ஐராவதம் மகாதேவன் = இராசமாணிக்கனார் ஒரு தலைசிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல; சிறந்த பண்பாளர்; நிதானப் போக்குப் படைத்தவர்; மாணவர்களிடம் அவர் காட்டிய பரிவையும் மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் நான் நேரில் அறிவேன். சமூக சீர்திருத்தங்களைப் பற்றிய அவரது கொள்கைகள் தீவிரமானவை; அவற்றைத் தம் வாழ்வில் கடைபிடித்தார், ஆனால் பிறர் மீது திணிக்க முயலவில்லை. அவரது தமிழறிவும் சீரிய வாழ்வும் இராசமாணிக்கனாருக்கு அழியாப் புகழைத் தேடி தந்துள்ளன.
திரு.வி.க = இராசமாணிக்கத்தின் உரைநடை எளிமையானது; ஆராய்சிக்கு ஏற்றது. அதில் வெற்றுரையோ சொல்லடுக்கோ பொருளற்ற மொழியோ கிடையாது.