10TH TAMIL புயலிலே ஒரு தோணி

10TH TAMIL புயலிலே ஒரு தோணி

10TH TAMIL புயலிலே ஒரு தோணி
10TH TAMIL புயலிலே ஒரு தோணி

10TH TAMIL புயலிலே ஒரு தோணி

  • மெபின் நகரம் = இந்தோனேசிய நாட்டில் உள்ள ஒரு நகரம்.
  • “தொங்கான்” என்பதன் பொருள் = கப்பல்
  • “கப்பித்தான்” என்பதன் பொருள் = தலைமை மாலுமி (கேப்டன்)
  • “பிலவான்” என்பது = இந்தோனேசியாவில் உள்ள இடம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

புயலுக்கு பெயர் சூட்டுதல்

  • புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
  • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • இந்த அமைப்பில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை = எட்டு
  • வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
  • இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை).
  • இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.

இடம்புரிப் புயலும் வலம்புரிப் புயலும்

  • மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர்போல, காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து, குறைவான இடத்துக்குக் காற்று வீசும்.
  • இப்படி வீசும் காற்றின் போக்கை, புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கையில் மாற்றும்.
  • நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும்.
  • தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும்.
  • காற்றின் வேகம் கூடினால் இந்த விலக்கமும் கூடும்.
  • வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்!
  • ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்!

கொரியாலிஸ் விளைவு என்றால் என்ன

  • பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார்.
  • புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.

புயலிலே ஒரு தோணி

10TH TAMIL புயலிலே ஒரு தோணி
10TH TAMIL புயலிலே ஒரு தோணி
  • புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் = புயலிலே ஒரு தோணி.
  • இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 – 1997), இந்தோனேசியாவில் இருந்த போது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
  • அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ப.சிங்காரம் ஆசிரியர் குறிப்பு

  • ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
  • வேலைக்காக இந்தோனேசியா சென்றார்.
  • மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்.
  • இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

 

 

 

10TH TAMIL

Leave a Reply