11TH TAMIL திருக்குறள்
11TH TAMIL திருக்குறள்
- திருக்குறள், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியமாகும்.
- இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்தமையால் அவ்வாறு போற்றப்படுகிறது.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல்.
- 1330 குறள்பாக்களால் ஆனது.
- உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இப்பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பா வகையால் ஆனவை.
- பாவின் வகையைத் தன் பெயராகக்கொண்டு உயர்வு விகுதியாகத் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் திருக்குறள் என்று அழைக்கப்படுகிறது.
- ஏழு சீர்களில் வாழ்வியல் நெறிகளைப் பேசும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- திருக்குறளுக்குப் பத்துப் பேருடைய உரை இருப்பதாகப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
- அவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகியோர்.
- நாளது வரையிலும் பலர் உரை எழுதும் சிறப்புப் பெற்றது இந்நூல்.
- திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை.
- தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருவள்ளுவரைப் பற்றிய அறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
வினாக்கள்
- துன்பப்படுபவர் = நாவைக் காக்காதவர்
- ஒப்புரவு என்பதன் பொருள் = ஊருக்கு உதவுவது
- வாழ்பவன் = ஒத்த அறிபவன்
- வாழாதவன் = இசை ஒழித்தவன்
- தோன்றுபவன் = புகழ் தரும் பண்புடையவன்
- வெல்ல நினைப்பவன் = காத்திருப்பவன்
- பெரும் பண்புடையவன் = மருந்தாகும் மரமானவன்
- இலக்கணக்குறிப்பு
- சுடச்சுடரும் = வினையெச்சம்
- சுடச்சுடரும் பொன் = பெயரெச்சம்
- சடச்சுட = அடுக்குத்தொடர்
- விரைந்து கெடுபவன் = பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
- “வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதன் பொருள் = உதவி செய்வதற்காக