11TH TAMIL திருக்குறள்

11TH TAMIL திருக்குறள்

11TH TAMIL திருக்குறள்

11TH TAMIL திருக்குறள்

  • திருக்குறள், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியமாகும்.
  • இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்தமையால் அவ்வாறு போற்றப்படுகிறது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல்.
  • 1330 குறள்பாக்களால் ஆனது.
  • உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
  • இப்பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பா வகையால் ஆனவை.
  • பாவின் வகையைத் தன் பெயராகக்கொண்டு உயர்வு விகுதியாகத் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் திருக்குறள் என்று அழைக்கப்படுகிறது.
  • ஏழு சீர்களில் வாழ்வியல் நெறிகளைப் பேசும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • திருக்குறளுக்குப் பத்துப் பேருடைய உரை இருப்பதாகப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
  • அவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகியோர்.
  • நாளது வரையிலும் பலர் உரை எழுதும் சிறப்புப் பெற்றது இந்நூல்.
  • திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை.
  • தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருவள்ளுவரைப் பற்றிய அறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

11TH TAMIL திருக்குறள்

வினாக்கள்

  • துன்பப்படுபவர் = நாவைக் காக்காதவர்
  • ஒப்புரவு என்பதன் பொருள் = ஊருக்கு உதவுவது
  • வாழ்பவன் = ஒத்த அறிபவன்
  • வாழாதவன் = இசை ஒழித்தவன்
  • தோன்றுபவன் = புகழ் தரும் பண்புடையவன்
  • வெல்ல நினைப்பவன் = காத்திருப்பவன்
  • பெரும் பண்புடையவன் = மருந்தாகும் மரமானவன்
  • இலக்கணக்குறிப்பு
    • சுடச்சுடரும் = வினையெச்சம்
    • சுடச்சுடரும் பொன் = பெயரெச்சம்
    • சடச்சுட = அடுக்குத்தொடர்
  • விரைந்து கெடுபவன் = பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
  • “வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதன் பொருள் = உதவி செய்வதற்காக

Leave a Reply