11TH TAMIL அருஞ்சொற்பொருள்

11TH TAMIL அருஞ்சொற்பொருள்

11TH TAMIL அருஞ்சொற்பொருள்
11TH TAMIL அருஞ்சொற்பொருள்

11TH TAMIL அருஞ்சொற்பொருள்

  • பால் – வகை
  • இயல்பு – இலக்கணம்
  • மாடம் – மாளிகை
  • அமை – மூங்கில்
  • ஙனம் – விதம்
  • ஆரளி – மொய்க்கின்ற வண்டு
  • இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
  • இடங்கணி – சங்கிலி
  • உளம் – உள்ளான் என்ற பறவை
  • சலச வாவி – தாமரைத் தடாகம்
  • தரளம் – முத்து
  • வட ஆரிநாடு – திருமலை
  • கா – சோலை
  • முகில்தொகை – மேகக் கூட்டம்
  • மஞ்ஞை – மயில்
  • கொண்டல் – கார்கால மேகம்
  • மண்டலம் – உலகம்
  • வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
  • அளியுலாம் – வண்டு மொய்க்கின்ற
  • தென் ஆரிநாடு – குற்றாலம்
  • கங்காணம் – நெல் அளவு
  • காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்
  • போது – மொட்டு
  • அலர்ந்து – மலர்ந்து
  • கவினி – அழகுற
  • கயம், அரசுவா, அல்லியன், அனுபமை, வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம் – யானை
  • பண்டுவர் – மருத்துவர்
  • தமிழ் – இனிமை, பண்பாடு, அகப்பொருள், மொழி, கவிதை, பல்கலைப் புலமை, கலைப்புலமை, அழகும் மென்மையும், பாட்டு
  • வரை – கோடு, மலை, சிகரம், விளிம்பு, கரை, எல்லை, நுனி
  • கோடு – மலையுச்சி, சிகரம், மலை, வல்லரண், கோட்டை
  • புயம் – தோள்
  • வரை – மலை
  • வன்னம் – அழகு
  • கழுகாசலம் – கழுகு மலை
  • துஜஸ் தம்பம் – கொடி மரம்
  • சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
  • விலாசம் – அழகு
  • நூபுரம் – சிலம்பு
  • மாசுணம் – பாம்பு
  • இஞ்சி – மதில்
  • புயல் – மேகம்
  • கறங்கும் – சுழலும்.
  • சிதவல் – தலைப்பாகை
  • தண்டு – ஊன்றுகோல்
  • தமியர் – தனித்தவர்
  • முனிதல் – வெறுத்தல்
  • துஞ்சல் – சோம்பல்
  • அயர்வு – சோர்வு
  • மாட்சி – பெருமை
  • நோன்மை – வலிமை
  • தாள் – முயற்சி
  • பிரசம் – தேன்
  • புடைத்தல் – கோல்கொண்டு மிரட்டுதல்
  • கொழுநன் குடி – கணவனுடைய வீடு
  • வறன் – வறுமை
  • கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
  • உள்ளாள் – நினையாள்
  • மதுகை – பெருமிதம்
  • இகக்கும் – நீக்கும்
  • இழுக்கு – குற்றம்
  • வினாயவை – கேட்டவை
  • இறுத்தல் – தங்குதல்
  • வரை – மலை
  • கம்பலை – பேரொலி
  • புடவி – உலகம்
  • எய்தல் – அடைதல்
  • துன்ன – நெருங்கிய
  • வாரணம் – யானை
  • பூரணம் – நிறைவு
  • நல்கல் – அளித்தல்
  • வதுவை – திருமணம்
  • கோன் – அரசன்
  • மறுவிலா – குற்றம் இல்லாத
  • தெண்டிரை – தெள்ளிய நீரலை
  • விண்டு – திறந்து
  • மண்டிய – நிறைந்த
  • தீன் – மார்க்கம்.
  • கொத்து – பூமாலை
  • குழல் – கூந்தல்
  • கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
  • வரிசை – சன்மானம்
  • நாங்கூழ் – மண்புழு.
  • காயில் – வெகுண்டால்
  • அயன் – பிரமன்
  • மால் – விஷ்ணு
  • ஆலாலம் – நஞ்சு
  • அந்தம் – முடிவு
  • கடிநகர் – காவல் உடைய நகரம்
  • காண்டி – காண்க
  • பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
  • ஆசு இலா – குற்றம் இலாத
  • தோட்டி – துறட்டி
  • அயம் – ஆடு, குதிரை
  • புக்க விட்டு – போகவிட்டு
  • சீரியதூளி – நுண்ணிய மணல்
  • சிறுகால் – வாய்க்கால்
  • பரல்-கல்
  • முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
  • அண்டயோனி – ஞாயிறு
  • சாடு – பாய்
  • ஈட்டியது – சேகரித்தது
  • எழிலி – மேகம்
  • நாங்கூழ்ப்புழு – மண்புழு
  • ஓவா – ஓயாத
  • பாடு – உழைப்பு
  • வேதித்து – மாற்றி
  • பதி – நாடு
  • பிழைப்பு – வாழ்தல்
  • நிரையம் – நரகம்
  • ஒரீஇய – நோய் நீங்கிய
  • புரையோர் – சான்றோர்
  • யாணர் – புது வருவாய்
  • மருண்டெனன் – வியப்படைந்தேன்
  • மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
  • தண்டா – ஓயாத
  • கடுந்துப்பு – மிகுவலிமை
  • ஏமம் – பாதுகாப்பு
  • ஒடியா – குறையா
  • நயந்து – விரும்பிய
  • ஓதுக – சொல்க
  • முழக்கம் – ஓங்கி உரைத்தல்
  • கனிகள் – உலோகங்கள்
  • மணி – மாணிக்கம்
  • படிகம்-பளபளப்பானகல்
  • படி – உலகம்
  • மீட்சி – விடுதலை
  • நவை – குற்றம்

 

Leave a Reply