11TH TAMIL மனோன்மணீயம்

11TH TAMIL மனோன்மணீயம்

11TH TAMIL மனோன்மணீயம்
11TH TAMIL மனோன்மணீயம்

11TH TAMIL மனோன்மணீயம்

  • 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது.
  • இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்.
  • நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த நாடக நூல் = மனோன்மணீயம்
  • காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குவது = மனோன்மணியம்.
  • இயற்கையில் ஈடுபாடுகொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ள நூல் = மனோன்மணியம்.

கதை மாந்தர்

  • அரண்மனையில் உள்ள சுந்தர முனிவரின் அறையில் இருந்து ஆசிரமம் வரை ரகசிய அறை அமைக்க நினைக்கிறார்.
  • இதற்கான பணியை நடராசனுக்கு அளிக்கிறார்.

அருஞ்சொற்பொருள்

  • கடிநகர் – காவல் உடைய நகரம்
  • காண்டி – காண்க
  • பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
  • ஆசு இலா – குற்றம் இலாத
  • தோட்டி – துறட்டி
  • அயம் – ஆடு, குதிரை
  • புக்க விட்டு – போகவிட்டு
  • சீரியதூளி – நுண்ணிய மணல்
  • சிறுகால் – வாய்க்கால்
  • பரல்-கல்
  • முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
  • அண்டயோனி – ஞாயிறு
  • சாடு – பாய்
  • ஈட்டியது – சேகரித்தது
  • எழிலி – மேகம்
  • நாங்கூழ்ப்புழு – மண்புழு
  • ஓவா – ஓயாத
  • பாடு – உழைப்பு
  • வேதித்து – மாற்றி

இலக்கணக்குறிப்பு

  • கடி நகர், சாலத் தகும் – உரிச்சொற்றொடர்கள்
  • உருட்டி – வினையெச்சம்
  • பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
  • இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
  • பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
  • ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
  • பார்த்துப் பார்த்து, நில் நில், உழுதுழுது – அடுக்குத் தொடர்கள்
  • வாய்க்கால் – இலக்கணப் போலி (முன் பின் தொக்கியது)
  • செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
  • மலையலை, குகைமுகம் – உவமைத்தொகைகள்
  • நெறுநெறு – இரட்டைக்கிளவி
  • புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
  • காலத்தச்சன் – உருவகம்
  • ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
  • புழுக்களும் பூச்சியும்-எண்ணும்மை
  • தங்குதல் – தொழிற்பெயர்

பிரித்து எழுதுக

  • காலத்தச்சன் = காலம் + தச்சன்
  • உழுதுழுது = உழுது + உழுது
  • பேரழகு = பெருமை + அழகு

தமிழ் நாடக இலக்கண நூல்கள்

  • அகத்தியம்
  • செயன்முறை
  • செயிற்றியம்
  • குணநூல்
  • கூத்தநூல்
  • முறுவல்
  • சந்தம்
  • மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்
  • சயந்தம்
  • நாடகவியல்

மனோன்மணியம் நூல் குறிப்பு

  • தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் = மனோன்மணீயம்.
  • லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார்.
  • இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது.
  • இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது.
  • நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
  • மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை ‘சிவகாமியின் சரிதம்’.

பேராசிரியர் சுந்தரனார் குறிப்பு

  • பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855 இல் பிறந்தார்.
  • திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
  • சென்னை – மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
  • இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.

 

Leave a Reply