இலங்கையின் தேசிய கீதமான “ஸ்ரீ லங்கா மாதா”வையும் தாகூர் அவர்கள் வங்க மொழியில் எழுதினார். இதனை இலங்கையை சேர்ந்த ஆனந்த சமரக்கோன் என்பவர் சிங்கள மொழியில் மொழிபெயர்த்தார். இவர் தாகூரின் மாணவர் ஆவார்.
ரவீந்திரநாத் தாகூர் தனது நோபல் பரிசுத் தொகையை சாந்திநிகேதனில் “விஸ்வபாரதி” பள்ளியைக் கட்டுவதில் முதலீடு செய்தார்.
தாகூர் சிவப்பு-பச்சை நிற குருடு நோய் பாதிப்பு கொண்டவர் ஆவார்.
2004 ஆம் ஆண்டு, சாந்திநிகேதனில் நடந்த திருட்டில் தாகூரின் நோபல் பரிசுப் பதக்கம் திருடப்பட்டது. ஸ்வீடிஷ் அகாடமி அவருக்கு இரண்டு பிரதிகள், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வடிவத்தில் மீண்டும் விருதை வழங்கியது.
காந்தியை முதன் முதலில் “மகாத்மா” என்று அழைத்தவர் = இரவீந்தரநாத்தாகூர்
குருதேவ், கோபிகுரு, பிஸ்வகோபி, க்ரிஷி ஜாக்ரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுபவர் = இரவீந்தரநாத்தாகூர்
தாகூர் சுமார் 50 நாடகங்கள், 100 கவிதை புத்தகங்கள் மற்றும் 40 நாவல்கள் தொகுதிகளை எழுதினார். அவரது ஓவியங்கள் 1930 இல் பாரிஸ் மற்றும் லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
விவேகானந்தருக்கு பிறகு உலக சமயப் பாராளுமன்றத்தில் இரு முறை உரையாற்றிய இந்தியர் = இரவீந்தரநாத்தாகூர்