11TH TAMIL இலக்கணக்குறிப்பு

11TH TAMIL இலக்கணக்குறிப்பு

11TH TAMIL இலக்கணக்குறிப்பு
11TH TAMIL இலக்கணக்குறிப்பு

11TH TAMIL இலக்கணக்குறிப்பு

  • காட்டல், கேட்டல் = தொழிற்பெயர்கள்
  • ஐந்தும் = முற்றும்மை
  • கேட்போர் = வினையாலணையும் பெயர்
  • மாநகர் = உரிச்சொற்றொடர்
  • புலமைக் கதிரவன் = உருவகம்
  • செங்கயல், வெண்சங்கு = பண்புத்தொகைகள்
  • அகிற்புகை = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • மஞ்ஞையும் கொண்டலும் = எண்ணும்மை
  • கொன்றைசூடு = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • ஆல் = அசைநிலை
  • கண்ணி = அண்மைய விளிச்சொல்
  • ஆடுகம் = தன்மைப் பன்மை வினைமுற்று
  • தாவி = வினையெச்சம்
  • மாதே = விளி
  • பிரிந்தோர் = வினையாலணையும் பெயர்
  • நன்றுநன்று = அடுக்குத்தொடர்
  • அம்ம = அசைநிலை
  • உண்டல், துஞ்சல் = தொழிற்பெயர்கள்
  • முயலா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • வெண்சுவை, தீம்பால் = பண்புத்தொகைகள்
  • விரிகதிர், ஒழுகுநீர் = வினைத்தொகைகள்
  • பொற்கலம், பொற்சிலம்பு = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
  • கொண்ட = பெயரெச்சம்
  • அறிவும் ஒழுக்கமும் = எண்ணும்மை
  • பந்தர் = பந்தல் என்பதன் ஈற்றுப்போலி.
  • அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் = தொழிற்பெயர்கள்
  • நனிஇகக்கும் = உரிச்சொற்றொடர்
  • மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த = பெயரெச்சங்கள்
  • இடன் = ஈற்றுப் போலி
  • பெரும்புகழ், தெண்டிரை = பண்புத்தொகைகள்
  • பொன்னகர் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாநகர், உறுபகை = உரிச்சொல் தொடர்கள்
  • தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் = எண்ணும்மைகள்
  • மாண்ட தவளை = பெயரெச்சம்
  • சுடுகாடு, கொல்புலி, குரைகடல் = வினைத்தொகைகள்
  • நல்லாடை = பண்புத்தொகை
  • கடி நகர், சாலத் தகும் – உரிச்சொற்றொடர்கள்
  • உருட்டி – வினையெச்சம்
  • பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
  • இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
  • பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
  • ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
  • பார்த்துப் பார்த்து, நில் நில், உழுதுழுது – அடுக்குத் தொடர்கள்
  • வாய்க்கால் – இலக்கணப் போலி (முன் பின் தொக்கியது)
  • செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
  • மலையலை, குகைமுகம் – உவமைத்தொகைகள்
  • நெறுநெறு – இரட்டைக்கிளவி
  • புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
  • காலத்தச்சன் – உருவகம்
  • ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
  • புழுக்களும் பூச்சியும்-எண்ணும்மை
  • தங்குதல் – தொழிற்பெயர்
  • கற்றேன் = தண்மை ஒருமை வினைமுற்று
  • உடை அணிந்தேன் = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • உரைத்தாய் = முன்னிலை இருமை வினைமுற்று.
  • துய்த்தல் – தொழிற்பெயர்
  • ஒரீஇய – சொல்லிசை அளபெடை
  • புகழ்பண்பு – வினைத்தொகை
  • நன்னாடு – பண்புத்தொகை
  • மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
  • ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
  • அலைகடல் – வினைத்தொகை
  • தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • பேரன்பு, நெடுங்குன்று – பண்புத்தொகைகள்
  • ஒழிதல் – தொழிற்பெயர்
  • உழுதுழுது – அடுக்குத்தொடர்

 

 

3 thoughts on “11TH TAMIL இலக்கணக்குறிப்பு”

  1. blank

    மஞ்ஞையும் கொண்டலும் என்பதன் இலக்கணக்குறிப்பு

    1. blank

      மஞ்ஞையும் கொண்டலும் = எண்ணும்மை

Leave a Reply