11TH TAMIL கவிதையியல்

11TH TAMIL கவிதையியல்

11TH TAMIL கவிதையியல்
11TH TAMIL கவிதையியல்

11TH TAMIL கவிதையியல்

  • தமிழ் தொன்மையான கவிதை மரபைக் கொண்டது.
  • நாட்டுப்புறப்பாடல்கள் = மக்கள் மொழியில் வாழ்க்கை நிகழ்வுகளை நமக்குள் இசைக்கிறது.
  • சித்தர் பாடல்கள் = மெய்யியல் சிந்தனையை வளர்க்கிறது.
  • தனிப்பாடல்கள் = கருத்துக் கருவூலமாகவும் சொற்களஞ்சியத் திறனைப் பெருக்குவதாகவும் அமைந்துள்ளன.
  • சிற்றிலக்கியப் பாடல்கள் = அன்பின் மேன்மையை பேசுகின்றன.

கவிதை என்பது யாது

  • ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு = கவிதை
  • மொழியின் அணைத்து கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை = கவிதை
  • ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதைகளைக் கொண்டார் மதிப்பிடப்படுகின்றன.
  • இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வியலைக் கொண்ட கவிதைகள் முதன் முதலில் எழுதப்பட்ட மொழி = தமிழ்.

சங்ககாலக் கவிதைகள்

  • சங்ககாலக் கவிதைகள் தமிழரின் உயர்ந்த நாகரிகச் செழுமைக்கு அடிப்படையாக அமைந்தவை.
  • இவை அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், கலைகள், கல்வி, அரசியல், பொருளாதாரம், வணிகம், வேளாண்மை குறித்த பதிவுகளை வெளிப்படுத்துகின்றன.
  • அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அகத்திணை என்றால் என்ன

  • மாந்தர், அகமனத்தில் துய்க்கின்ற காதல், அன்பு, கருணை முதலான உணர்வுகளை வெளிப்படுத்துவது அகத்திணை.

புறத்திணை என்றால் என்ன

  • மாந்தர், புறவாழ்வில் கொண்டாடுகின்ற வீரம், கொடை, புகழ் முதலான பண்புகளை வெளிப்படுத்துவது புறத்திணை.

குடபுலவியனார்

  • எட்டுத்தொகையில் ஒன்றான புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது ஒரு பாடல்.
11TH TAMIL கவிதையியல்
11TH TAMIL கவிதையியல்
  • “நீர் இன்றி அமையா யாக்கை” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு
  • “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு
  • “உண்டி முதற்றே உணவின் பிண்டம்’ என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு
  • “உணவெனப் படுவது நிலத்தோடு நீரே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு

அறநிலைக் கவிதைகள்

  • சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வாழ்வியல் அறங்களைக் கற்பிப்பவை.
  • இவை வெண்பா என்னும் யாப்பு வகைமையில் அமைந்தவை.

காப்பியக் கவிதைகள்

  • மன்னர்களைப் பாடிய காலம் மாறிக் குடிமக்களைக் கவிதையின் பாடுபொருளாய்க் கொண்டெழுந்தவை தமிழ்க்காப்பியங்கள்.
  • காப்பியக்கவிதைகள் காதல், வீரம், அறம் என அனைத்தையும் பாடிச் செல்கின்றன.
  • உரையொடு கலந்த கவிதைகளை அறிமுகம் செய்தவை = காப்பியக் கவிதைகள்.
  • “மாந்தருக்கு அறமே நிலையானது’ என்பதை கூறும் காப்பியம் = மணிமேகலை
  • “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை

பக்திக் கவிதைகள்

  • கடவுளை நோக்கியதாக அமைந்த கவிதைகள் = பக்திக் கவிதைகள் ஆகும்.
  • இறையுணர்வோடு அன்பையும் அறத்தையும் இக்காலக்கவிதைகள் வெளிப்படுத்தின.

சிற்றிலக்கியக் கவிதைகள்

  • விமர்சனப்பாங்கு கொண்ட புதியவடிவம் = சிற்றிலக்கிய கவிதைகள்
  • சிற்றிலக்கியத்தின் வடிவங்களான, கோவை, உலா, அந்தாதி போன்றவை கடவுள், அரசன், சிற்றரசர்கள், வள்ளல்களைப் புகழ்ந்தன.
  • பள்ளு, குறவஞ்சி போன்றவை எளிய மக்களின் வாழ்வியலையும் எடுத்தியம்பின.

தனிப்பாடற் கவிதைகள்

  • சிலேடை, விடுகதை, சொற்புதிர் போன்ற சிந்தைக்கு விருந்தாகும் வகையில் புலவர் பெருமக்கள் பாடிச்சென்ற பாடல்கள் தனிப்பாடற் திரட்டுகளாக நமக்குக் கிடைக்கின்றன.

மரபுப்பாடல் என்றால் என்ன

  • தமிழ் யாப்பிலக்கணத்தின்படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய கூறுகளுடன் அமைந்த பாவினங்களை மரபுப்பாடல் என்பர்.

மரபுப் பாடல்களில் புதுமை

  • காலத்திற்குக் காலம் செய்யுள் வடிவில் மாற்றங்கள் நேரலாம்;தமிழ்மொழிவளர்ச்சிக்கு இத்தகைய மாற்றங்கள் பயன்படுமானால் அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதியே தொல்காப்பியர்,

விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (தொல் – செய். 231)

  • ‘விருந்து’ என்பதைப் ‘புதுமை’ என்னும் பொருளில் கூறியுள்ளார்.
  • தற்காலத்தின் சிறுகதை, நாவல், புதுக்கவிதை முதலியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

Leave a Reply