12 ஆம் வகுப்பு அகநானூறு
12 ஆம் வகுப்பு அகநானூறு
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- பா வகை = அகவற்பா
- அடி எல்லை = 13 முதல் 31
- நானூறு பாடல்கள் உள்ளன.
- தொகுத்தவர் = மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருதிரசன்மனார்
- தொகுபித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அகநானூறு நூல் குறிப்பு
- அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் ‘அகம்’ என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் இது மட்டுமேயாகும்
- வேறுபெயர்கள் = அகம், நெடுந்தொகை
- இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன.
- முதல் 120 பாட்டுகள், “களிற்றியானை நிறை” எனப்படும்.
- அடுத்த 180 பாட்டுகள், “மணிமிடை பவளம்” எனப்படும்.
- கடைசி 100 பாட்டுகள் “நித்திலக்கோவை” எனப்படும்.
- 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
- 2,8 என வரும் பாடல்கள் = குறிஞ்சித்திணை பாடல்கள்
- 4,14 என வரும் பாடல்கள் = முல்லைதினைப் பாடல்கள்
- 6,16 என வரும் பாடல்கள் = மருதத்திணை பாடல்கள்
- 10,20 என வரும் பாடல்கள் = நெய்தல் திணை பாடல்கள்.
சொற்பொருள்
- பசை = ஒட்டும் பசை (ஈரம்)
- பச்சை = தோல்
- நெய் தோய்த்தன்ன = எண்ணெயில் நனைத்து எடுத்தது போன்ற
- மாச்சிறைப் பறவை = கரிய சிறகுகளையுடைய வௌவால்
- சேய்உயர் = மிக உயர்ந்த
- சினைய = கிளைகளையுடைய
- முதுமரம் = பழையமரம்
- புலம்ப = தனித்திட
- முகை = மொட்டு
- முகைவாய் திறந்த = மொட்டவிழ்ந்த
- நகைவாய் முல்லை = ஒளிபொருந்திய முல்லை மலர்கள்
- கடிமகள் = மணமகள்
- கதுப்பு = கூந்தல்
- தண்பதம் = குளிர்பதம்
- மழைக்கண் = குளிர்ந்த கண்
- நல்லகம் = நல்ல உட்புறம்
- புல்லார் = புல்லை நிரம்பத்தின்ற
- புரவி = குதிரை
- வலவ = தேர்ப்பாகனே
- முன்னிய = கருதி வந்த
- வினை = செயல்
- ஊர்மதி = செலுத்துவாயாக
இலக்கணக்குறிப்பு
- உயர்சினை – வினைத்தொகை
- சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பகலுறை – ஏழாம் வேற்றுமைத்தொகை
- முதுமரம் – பண்புத்தொகை
- கடிமகள் – உரிச்சொற்றொடர்
- புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி
- 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 11 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 9 ஆம் வகுப்பு தமிழ்
- 8 ஆம் வகுப்பு தமிழ்
- 7 ஆம் வகுப்பு தமிழ்
- 6 ஆம் வகுப்பு தமிழ்