12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்
12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்
- கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார்.
- அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
- இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதைக்கு வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
- வான்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தை தழுவித் தமிழ் மொழியில் காப்பியம் செய்துள்ளார் கம்பர்.
- கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
- கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
- கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது.
- “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கனன்கீடும் உள்ளது.
- கம்பர் கூறும் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை = 96.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
காப்பிய வளர்ச்சியில் உச்ச நிலை
- தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
- கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது.
- அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
- ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.
- காண்டம் = பெரும்பிரிவு
- படலம் = உட்பிரிவு
சுந்தரகாண்டம் குறிப்பு
- கம்பராமாயணத்தில் ஐந்தாவது காண்டம் = சுந்தரகாண்டம்.
- கம்பராமாயண “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குவது = சுந்தர காண்டம்.
- “திருவடி தொழுத படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = சுந்தரகாண்டம்.
- “சிறிய திருவடி” என்று அழைக்கப்படுபவர் = அனுமன்
- அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு.
- இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி
- சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி
சொற்பொருள்
- ஏந்தல் = சிறந்தோன் (இராமன்)
- கழல் = திருவடி (கழலணிந்தகால்)
- முளரி = தாமரை
- தையல் = (திருமகளாகிய) சீதாப்பிரட்டி
- வையகம் = தரை
- வையகம் தழீஇ = தரையில் வீழ்ந்து
- இறைஞ்சி = வணங்கி
- திண்டிறல் = (பேராற்றல் மிக்கவனாகிய) இராமபிரான்
- ஓதி = கூந்தல் (கூந்தலையுடையளாகிய சீதை)
- தெரிய = (செயலின் நோக்கத்தைத் தேர்ந்து) அறிந்து
- வலியள் = (உடல், மனம் இரண்டின் உறுதியால் பகைவன் ஊரிலும்) உயிருடன் உள்ளாள், உறுதியள்
- மற்று = மேலும்
- துறத்தி = கைவிடுக
- பன்னுவான் = உரைப்பானாயினான்
- திரை = அலை
- மன் = தயரதன்
- மருகி = மருமகள்
- தனயை = மகள்
- கேட்டி = கேட்பாயாகுக
- தடந்தோள் = அகன்றதோள்
- இரும்பொறை = வலிய பொறுமை (பெருமைக்குரிய பொறுமை)
- வீங்கு நீர் = பரந்து பெருகிய கடல் (சூழ்ந்த இலங்கை) வெற்பு = மலை (இலங்கைத் தீவின் ஒரு பகுதி)
- உம்பி = உன்தம்பி (இலக்குவன்)
- வேலை = கடல்
- விண்தோய் = வானளாவிய
- களி நடம் = ஆனந்த நடனம்
- கனகம் = பொன்
- சாலை = பர்ணசாலை
- பொதுவற = தனித்தனியாக
- அணங்கு அன்னாள் = தெய்வம் போல்வாள்
- அலங்கு = அசைதல்; ஒளிமிகுந்த
- இடைபெறுந்தன்மை = தகுந்த காலம் வாய்க்கும் தன்மை
- கோறல் = கொல்லுதல்
- அலங்கல் = மாலை
- ஏயினன் = ஏவினான்
- உறைப்ப = அழுத்தமாக
- சார்த்தும் அளவை = மாட்டும் பொழுது
- உன்னினள் = நினைந்தனள்
- புகன்ற போழ்தின் = சொன்ன பொழுது
- திருக்கம் = வஞ்சனை
- முறிவு = வேறுபாடு
- மருந்து = அமிழ்தம்
- இயம்பலள் = (உணர்ச்சிப் பெருக்கால்) பேச்சொன்றும் பேசினாளல்லள்
- எய்த்தமேனி = இளைத்த உடம்பு
- வீங்கினள் = பூரித்தாள்
- ஆழி = மோதிரம்
- விண்டாள் = வெளிப்படுத்தினாள்
- உயிர்ப்புவிண்டாள் = பெருமூச்சு விட்டாள்
- அடுத்த = நிகழ்ந்தவை
- வருத்தப்பாடு = துன்பம்
- உயிர்ப்பு = பெருமூச்சு
- தோகை = மயில் போலும் சாயலாள் (சீதை)
- இயைபுளி = பொருத்தமுற, முறையாக
- திருவுளம் தீர்ந்தபின்னை = மனமில்லையாயின்
- திங்கள் ஒன்று = ஒரு மாதம்
- மாமணிக்கரசு = சூடாமணி
- வித்தக = அறிஞனே
- காண்டி = காணுக
இலக்கணக்குறிப்பு
- எய்தினன் = முற்று
- மொய்கழல் = வினைத்தொகை
- தொழுகிலன் = எதிர்மறைவினைமுற்று
- கழல் = தானியாகுபெயர்
- தழீஇ = சொல்லிசையளபெடை
- திண்டிறல் நோக்கினான் = பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
- வண்டுறை ஓதியும் வலியள் = வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
- வலியள் = குறிப்பு வினைமுற்று
- தெண்டிரை = பண்புத் தொகை
- அலைகடல் = வினைத்தொகை
- துறத்தி = (முன்னிலை) ஏவல் வினைமுற்று
- கேட்டி = முன்னிலை ஏவல் வினைமுற்று
- பெருந்தடந்தோள் = பண்புத்தொகை
- வீங்குநீர் = வினைத் தொகை
- தடந்தோள் = உரிச்சொற்றொடர்
- பெருந்தவம் = பண்புத்தொகை
- இற்பிறப்பு = ஏழாம் வேற்றுமைத்தொகை
- களிநடம் = வினைத்தொகை
- விரிநகர் = வினைத்தொகை
- உம்பி = முறைப்பெயர்
- ஐய = விளி
- உம்பி = உன்தம்பி என்பதன் மருஉ
- பொலங்குழை = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- கண்ணின் நீர்க்கடல் = உருவகம்
- கோறல் = தொழிற்பெயர்
- சொல்லுமின் = ஏவல் வினைமுற்று
- அறன் = (அறம்) இறுதிப் போலி
- எலாம் = எல்லாம் என்பதன் இடைக்குறை.
- ஆருயிர் = பண்புத்தொகை
- பொன்னடி = உவமத்தொகை
- வண்ண மோதிரம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பேர் அடையாளம் = உம்மைத்தொகை
- உணர்த்தினென் = தன்மை ஒருமை வினைமுற்று
- நிற்பிரிந்த = இரண்டாம் வேற்றுமைத் தொகை
- மலரடி = உவமத்தொகை
- மாமணி = உரிச்சொற்றொடர்
- கைத்தலம் = இருபெயரொட்டுப் பண்புத்தொகை.