12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள்
“செவ்வியல்” என்ற பொருள் கொண்ட சொல் “கிளாசிசம்” (CLASSISM) என்ற என்ற இலத்தின் சொல்லின் இருந்து பெறப்பட்டுள்ளது.
தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் = செம்மை ஆகும்
செம்மை என்பதன் பொருள் = செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல்
செவ்வியலுக்கான தன்மைகள்
செவ்வியலுக்கான தன்மைகள் = தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப்பண்பு, நடுவு நிலைமை, பண்பாடு, பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை வெளிப்பாடு, மொழிக்கோட்பாடு
செவ்வியல் இலக்கியங்கள்
பழைமையும் இலக்கிய இலக்கணப் பாரம்பரியமும் உள்ள மொழிகள், செவ்வியல் மொழிகள் எனப்படும்.
செவ்வியல் இலக்கியங்களை பெற்றிருக்கும் மொழிகளே செவ்வியல் மொழிகள் எனப்படும்.
செவ்வியல் இலக்கியங்களின் காலக்கட்டம்
கிரேக்க மொழி = கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை
இலத்தீன் மொழி = கி.மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை
சீன மொழி = கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை
சம்ஸ்கிருத மொழி = கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை
தமிழ் மொழி = கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள்
உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டனர்.
தனித்தண்மை, தூயநிலை, செப்பமான ஒழுங்கு, சிறப்பான பொருள் புலப்பாடு எனப் போற்றத்தகுந்த பண்புகள் எல்லாம் நிறைந்திருந்ததால், தமிழைச் “செந்தமிழ்” என்றும், தமிழ் இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்கள் என்றும் அழைத்தனர்.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களை “சான்றோர் இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள்” என்றும் கூறுவார்.
சங்க இலக்கியங்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல்கள்
பதினெண்மேற்கணக்கு நூல்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல்கள்
சங்கப்பாடல்களின் எண்ணிக்கை = 2381
அகத்தினைப் பாடல்கள் = 1862
புறத்திணைப் பாடல்கள் = 519
சங்கப் புலவர்கள் எண்ணிக்கை = 473
சங்ககால பெண்பால் புலவர்களின் எண்ணிக்கை = 49
சங்க இலக்கியத்தில் மிக அதிகப் பாடல்களை பாடியவர் = கபிலர் (235 பாடல்கள்)
சங்ககாலப் புலவர்களை “சான்றோர்” எனச்சுட்டுவது தமிழர் மரபு.
சங்க இலக்கிய காலத்தை, “இயற்கை நெறிக்காலம்” என்பர்.
ஒரையாடுதல்
ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுக்களில் ஒன்றாகும்.