12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்

  • உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்கள் “அற இலக்கியங்கள்” என்றும், அறம் கூறும் கவிதைகளை “அறக்கவிதைகள்” என்றும் கூறுவர்.
  • அறம் = அற + அம்
  • தீமையை அறுப்பது, தீமையை நீக்குவது, அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

  • சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
  • இவற்றில் அறநூல்கள் = 11, அக நூல்கள் = 6, புறநூல்கள் = 1
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மணிமகுடமாக கருதப்படும் நூல் = திருக்குறள்
  • நானூறு என்ற எண்களை கொண்ட நூல்கள் = 2 (நாலடியார், பழமொழி நானூறு)
  • மருந்து பெயரால் அமைந்த அறநூல்கள் = 3 (திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி)
  • திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி
  • சிறுபஞ்சமூலம் = கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
  • ஏலாதி = ஏலம், இலவங்கம், நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு

மணிமொழிக்கோவை என்பது யாது

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்று நூல்களையும் “மணிமொழிக்கோவை” என்பர்

அறநூல்கள்

நூல்கள்

ஆசிரியர்
திருக்குறள்

திருவள்ளுவர்

நாலடியார்

சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை

விளம்பிநாகனார்

இன்னா நாற்பது

கபிலர்
இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார்

திரிகடுகம்

நல்லாதனார்
ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார்

பழமொழி நானூறு

முன்றுறையரையனார்
சிறுபஞ்சமூலம்

காரியாசான்

ஏலாதி

கணிமேதாவியார்
முதுமொழிக்காஞ்சி

கூடலூர் கிழார்

களவழி நாற்பது

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்
  • கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையில் அடைத்ததால், அவனை மீட்க பொய்கையார் பாடியது இந்நூல்
  • யானைப் போர் பற்றிக் குறிப்பிடுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பர்.
  • இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் “அட்டக்களத்து” என்று முடியும்.

பிற்கால நீதிநூல்கள்

நூல்கள்

ஆசிரியர்
அருங்கலச்செப்பு

அறநெறிச்சாரம்

முனைப்பாடியார்
நறுந்தொகை

அதிவீரராமபாண்டியர்

நீதிநெறிவிளக்கம்

குமரகுருபரர்
நன்னெறி

சிவப்பிரகாசர்

உலகநீதி

உலகநாதர்
முதுமொழி வெண்பா

—-

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி

ஔவையார்
விவேக சிந்தாமணி

—–

கபிலரகவல்

கபிலர்
நீதி சிந்தாமணி

வேதகிரியார்

பெண்மதிமாலை, நீதிநூல், நீதிபேதம்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை
புதிய ஆத்திச்சூடி

பாரதியார்

மெய்யியல்

  • இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி, தொடர்பான சிக்கல்களைப் பற்றி ஆராய்வதே மெய்யியல் ஆகும்.

 

 

 

 

 

Leave a Reply