12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள்

  • “செவ்வியல்” என்ற பொருள் கொண்ட சொல் “கிளாசிசம்” (CLASSISM) என்ற என்ற இலத்தின் சொல்லின் இருந்து பெறப்பட்டுள்ளது.
  • தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் = செம்மை ஆகும்
  • செம்மை என்பதன் பொருள் = செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல்

செவ்வியலுக்கான தன்மைகள்

  • செவ்வியலுக்கான தன்மைகள் = தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப்பண்பு, நடுவு நிலைமை, பண்பாடு, பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை வெளிப்பாடு, மொழிக்கோட்பாடு

செவ்வியல் இலக்கியங்கள்

  • பழைமையும் இலக்கிய இலக்கணப் பாரம்பரியமும் உள்ள மொழிகள், செவ்வியல் மொழிகள் எனப்படும்.
  • செவ்வியல் இலக்கியங்களை பெற்றிருக்கும் மொழிகளே செவ்வியல் மொழிகள் எனப்படும்.

செவ்வியல் இலக்கியங்களின் காலக்கட்டம்

  • கிரேக்க மொழி = கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை
  • இலத்தீன் மொழி = கி.மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை
  • சீன மொழி = கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை
  • சம்ஸ்கிருத மொழி = கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை
  • தமிழ் மொழி = கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள்

  • உலக மொழியியல் அறிஞர்கள் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொண்டனர்.
  • தனித்தண்மை, தூயநிலை, செப்பமான ஒழுங்கு, சிறப்பான பொருள் புலப்பாடு எனப் போற்றத்தகுந்த பண்புகள் எல்லாம் நிறைந்திருந்ததால், தமிழைச் “செந்தமிழ்” என்றும், தமிழ் இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்கள் என்றும் அழைத்தனர்.

சங்க இலக்கியம்

  • சங்க இலக்கியங்களை “சான்றோர் இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள்” என்றும் கூறுவார்.
  • சங்க இலக்கியங்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல்கள்
  • பதினெண்மேற்கணக்கு நூல்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல்கள்
  • சங்கப்பாடல்களின் எண்ணிக்கை = 2381
  • அகத்தினைப் பாடல்கள் = 1862
  • புறத்திணைப் பாடல்கள் = 519
  • சங்கப் புலவர்கள் எண்ணிக்கை = 473
  • சங்ககால பெண்பால் புலவர்களின் எண்ணிக்கை = 49
  • சங்க இலக்கியத்தில் மிக அதிகப் பாடல்களை பாடியவர் = கபிலர் (235 பாடல்கள்)
  • சங்ககாலப் புலவர்களை “சான்றோர்” எனச்சுட்டுவது தமிழர் மரபு.
  • சங்க இலக்கிய காலத்தை, “இயற்கை நெறிக்காலம்” என்பர்.

ஒரையாடுதல்

  • ஓரை என்பது சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டுக்களில் ஒன்றாகும்.
  • ஓரை என்றால், “ஒலி எழுப்புதல்” என்று பொருள்.

 

 

Leave a Reply