12ஆம் வகுப்பு மணிமேகலை
12ஆம் வகுப்பு மணிமேகலை
- மணிமேகலை பௌத்த சமய காப்பியம்
- காப்பியத்தின் தலைவி = மணிமேகலை
- கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்தவள் மணிமேகலை
- இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்
- மணிமேகலையில் உள்ள காதைகள் = 3௦
- முதல் காதை = விழாவறை காதை
- கடைசி காதை = பவத்திரம் அறுகெனப் பாவை நோற்ற காதை
- “காண்டம்” என்ற பெரும் பிரிவுகள் இதில் இல்லை.
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும் “இரட்டை காப்பியங்கள்” என்பர்.
- மணிமேகலை நூலினை “மணிமேகலை துறவு” என்றும் கூறுவார்.
மணிமேகலை காப்பியச் சுருக்கம்
- மாதவி, மணிமேகலையை பௌத்த துறவியாக மாற்றுகிறாள்.
- இந்திரவிழா காணவந்த மணிமேகலா தெய்வம், மணிமேகலையை தூக்கி கொண்டு மணிபல்லத்தீவிற்கு செல்கிறது.
- அங்கு புத்தபீடிகையை தொழுது, மனிமேகலை தனது பிறப்பின் ரகசியத்தை அறிகிறாள்.
- அமுதசுரபியை பெறுகிறாள்.
- பூம்புகாருக்கு செல்கிறாள் மணிமேகலை.
- மணிமேகலையை விரும்பும் உதயகுமாரன் கொல்லப்படுகிறான்.
- வஞ்சி மாநகரை அடைந்து கண்ணகியை வணங்கி வீடு பேறு அடைகிறாள்.
மணிமேகலை முக்கிய அடிகள்
- பசியை கொடிய நோய் என்று கூறுகிறது,
குடிபிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் |
- வறுமையில் உள்ளோருக்கு உணவு வழங்குவோரை,
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே |
மணிமேகலை காப்பியச் சிறப்புகள்
- கதைத் தலைவியால் பெயர் பெற்றது இந்நூல்.
- பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு என்னும் கருத்துக்களை கூறும் “சமுதாய சீர்திருத்த காப்பியமாக” திகழ்கிறது மணிமேகலை.
-
மணிமேகலை நூலை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு மணிமேகலை
- 12 ஆம் வகுப்பு மணிமேகலை
- 12 ஆம் வகுப்பு மணிமேகலை
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக