12TH STANDARD TAMIL புறநானூறு
12TH STANDARD TAMIL புறநானூறு
- குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே சிறந்த அரசன். மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்படுவது நாட்டின் வளர்சிகுக் கேடு விளைவிக்கும்.
- அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சங்கப் புலவர்கள் மேற்கொண்டனர்.
அருஞ்சொற்பொருள்
- காய் நெல் – விளைந்த நெல்
- மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)
- செறு – வயல்
- தமித்து – தனித்து
- புக்கு – புகுந்து
- யாத்து – சேர்த்து
- நந்தும் – தழைக்கும்
- வரிசை – முறைமை
- கல் – ஒலிக்குறிப்பு
- பரிவு – அன்பு
- தப – கெட
- பிண்டம் – வரி
- நச்சின் – விரும்பினால்
இலக்கணக்குறிப்பு
- காய்நெல் – வினைத்தொகை
- புக்க – பெயரெச்சம்
- அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பாடான் திணை
- ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்
செவியறிவுறூஉ துறை
- அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ துறை ஆகும்.
புறநானூறு
- இப்பாடப்பகுதி புறநானூற்றின் 184ஆவது பாடல் ஆகும்.
- புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது.
- பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
- முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உவே.சா. அச்சில் பதிப்பித்தார்.
- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
பிசிராந்தையார்
- இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார்.
- பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
- ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்.
- இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி.
- பிசிரந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்
- 12TH STANDARD TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- 12TH STANDARD TAMIL அதிசய மலர்
- 12TH STANDARD TAMIL புறநானூறு