குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே சிறந்த அரசன். மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்படுவது நாட்டின் வளர்சிகுக் கேடு விளைவிக்கும்.
அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சங்கப் புலவர்கள் மேற்கொண்டனர்.
அருஞ்சொற்பொருள்
காய் நெல் – விளைந்த நெல்
மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)
செறு – வயல்
தமித்து – தனித்து
புக்கு – புகுந்து
யாத்து – சேர்த்து
நந்தும் – தழைக்கும்
வரிசை – முறைமை
கல் – ஒலிக்குறிப்பு
பரிவு – அன்பு
தப – கெட
பிண்டம் – வரி
நச்சின் – விரும்பினால்
இலக்கணக்குறிப்பு
காய்நெல் – வினைத்தொகை
புக்க – பெயரெச்சம்
அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பாடான் திணை
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்
செவியறிவுறூஉ துறை
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ துறை ஆகும்.
புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது.
பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உவே.சா. அச்சில் பதிப்பித்தார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
பிசிராந்தையார்
இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார்.
பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்.
இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி.
பிசிரந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்