29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS
29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29 செப்டம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்தியாவின் முதல் விளையாட்டு நடுவர் மையம்
- இந்தியாவின் முதல் விளையாட்டு நடுவர் மையம், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில், மத்திய சட்ட அமைச்சர் கிர்ரன் ரிஜ்ஜு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
- இம்மையத்தை “ட்ரான்ஸ் ஸ்டெடியா” என்ற அமைப்பு உருவாக்கி உள்ளது
- இம்மையம் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
- டிரான்ஸ்ஸ்டேடியா என்பது ஒரு விளையாட்டை மையமாகக் கொண்ட அமைப்பாகும், இது இந்தியாவில் விளையாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
இந்திரா நூயியின் நினைவு குறிப்புகள் புத்தகம்
- உலகப் புகழ் பெற்ற பெப்சி குளிர்பான நிறுவனத்தின் முன்னால் தலைவர் மற்றும் முதன்மை அதிகாரியான “இந்திரா நூயி”, “என் வாழ்க்கை முழுமையாக: வேலை, குடும்பம் மற்றும் நமது எதிர்காலம்” எனப் பொருள்படும் “My Life in Full: Work, Family and Our Future” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
- இவர் பெப்சி நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதில் 12 ஆண்டுகள் தலைமை பொறுப்பை ஏற்று, 35 பில்லியனாக இருந்த நிறுவனத்தின் வருவாயை, 63.5 பில்லியன் டாலராக உயர்த்தினார்
இராணுவ பொறியியல் சேவைகள் தினம்
- இராணுவ பொறியியல் சேவைகள் தினம் அல்லது இராணுவ பொறியியல் சேவைகள் உதய தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது
- இந்த வருடம் 99-வது இராணுவ பொறியியல் சேவைகள் தினம் கொண்டாடப்பட்டது
- மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் (எம்இஎஸ்) என்பது அதன் அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்களின் இராணுவ மற்றும் சிவில் கூறுகளைக் கொண்ட ஒரு இடை-சேவை நிறுவனமாகும்.
- MES இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் பராமரிப்பு முகமையாகும், இது ஆண்டுக்கு சுமார் 30000 கோடி மதிப்பிலான வேலைகளை மேற்கொள்கிறது
உலக இருதய தினம்
- உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
- இத்தினத்தின் நோக்கம், இதய நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்
- மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதனுடன் தொடர்புடைய வேறு எந்த இருதய நோய்களையும் தவிர்ப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது
உணவு இழப்பு மற்றும் கழிவு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம்
- ஐக்கிய நாடுகள் போதுசபையானது, கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒவ்வொரு ஆடநின் செப்டம்பர் 29 ஆம் தேதியை “உணவு இழப்பு மற்றும் கழிவு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம்” கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது
- உலகளவில், அறுவடை மற்றும் சில்லறை விற்பனையில் 14 சதவிகித உணவுகள் வீணாகின்றது என்றும், மொத்த உலகளாவிய உணவு உற்பத்தியில் 17 சதவிகிதம் வீணாகிறது (வீடுகளில் 11 சதவீதம், உணவு சேவையில் 5 சதவீதம் மற்றும் சில்லறை விற்பனையில் 2 சதவீதம்) என்றும் தெரிவித்துள்ளது
குவாண்டம் தொழில்நுட்பத்திற்கான “மேலாண்மை மையம்”
- இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) டெல்லி அதன் வளாகத்தில், வளர்ந்து வரும் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக புதிய “மேலாண்மை மையத்தை” துவக்கி உள்ளது
- இந்திய அரசின் சார்பில் சமிபத்தில், குவாண்டம் தொழில்நுட்ப பணிகளுக்காக எட்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட 157 கலைப்பொருட்கள்
- இந்தியப் பிரதமர் மோடியின் சமிபத்திய அமெரிக்க பயணத்தின் பொழுது, அமெரிக்க அரசாங்கம் சார்பில் இந்தியாவிற்கு சொந்தமான 157 புராதான கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை ஒப்படைத்தது
- இந்தியப் பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனும் திருட்டு, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கலாச்சார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்
- இதில் 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த நடராஜர் சிலை, 10 நூற்றாண்டை சேர்ந்த ரேவண்டாவின் மணல் சிற்பம் போன்றவை அடங்கும்.
- இதில் 71 பொருட்கள் கலாசாரம் சார்ந்தவை என்றும், 60 பொருட்கள் இந்து மதத்தை சார்ந்தது என்றும், 16 பொருட்கள் புத்த மதத்தை சார்ந்தது என்றும், 9 பொருட்கள் சமண மதத்தை சார்ந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக தனியாக சைக்கிள் ஓட்டி புதிய கின்னஸ் சாதனை
- இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் ஸ்ரீபாத ஸ்ரீராம், காஸ்மீரின் மணாலி முதல் லே வரையிலான 472 கிலோமீட்டர் தூரத்தை, தனியாகவும், வேகமாகவும் சைக்கிளில் ஓட்டி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
- அவர், இத்தூரத்தை 34 மணி நேரம் 54 நிமிடங்களில் கடந்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கி உள்ளார்
35 புதிய பயிர் வகைகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்
- இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட 35 வகையான பயிர் விதிகளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்
- இந்நிகழ்ச்சியில், டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துக் கொண்டார். 35 வகையான பயிர் விதிகளை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவர்
- காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- காவிரி நதி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றாகவும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், மூத்த குடிமக்களுக்காக புதிய உதவி எண் சேவை துவங்கப்பட்டுள்ளது. “14567” என்ற இந்த பாண் இந்தியா உதவி எண், ஒரு கட்டணமில்லா சேவை எண்ணாகும்.
- மூத்த குடிமக்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு, உதவி புரியும் வகையில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 17-வது உதய தினம்
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA – National Disaster Management Authority) 17 வது உருவாக்கும் நாள் செப்டம்பர் 28 அன்று கொண்டாடப்பட்டது.
- இது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மூலம் நிறுவப்பட்ட, இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான உச்ச சட்டரீதியான அமைப்பாகும்.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 28,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 27,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 26,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 23,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 22,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 21,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 19,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 18,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17,2021