30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

Table of Contents

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

       30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS  TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30 செப்டம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சர்வதேச அணுசக்தி முகமையின் வெளிப்புற தணிக்கையாளர்

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • சர்வதேச அணுசக்தி முகமையின் வெளிப்புற தணிக்கையாளராக, இந்திய தலைமை தணிக்கை கணக்காயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தலைமை கணக்க்காயவர் ஜி.சி.முர்மு அவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்
  • 2022 முதல் 2027 வரை , இப்பதவியில் அவர் நீடிப்பார். வியன்னாவில் நடந்த IAEA இன் பொது மாநாட்டில் IAEA (International Atomic Energy Agency) இன் அடுத்த வெளிப்புற தணிக்கையாளராக முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஐக்கிய நாடுகளின் “நான்சன் அகதிகள் விருது”

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • ஏமன் நாட்டை சேர்ந்த மனிதநேய அமைப்பிற்கு, 2021 ஆம் ஆண்டிற்கான UNHCR நான்சன் அகதிகள் விருது வழங்கப்பட்டது
  • UNHCR என்பது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் ஆகும்.
  • 2017 ஆம் ஆண்டில் அமீன் ஜுப்ரான் என்பவரால் நிறுவப்பட்ட “மனிதாபிமான வளர்ச்சிக்கான ஜீல் அல்பேனா அசோசியேஷன்” என்ற அமைப்பு, ஏமன் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு சேவைகளை மனிதாபிமான அடிப்படையில் மேற்கொண்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • சர்வதேச மொழி பெயர்ப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • இத்தினம் 1953 ஆம் ஆண்டு, முதன் முதலில் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்கள் கூட்டமைப்பால் இத்தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கரு = மொழிபெயர்ப்பில் ஐக்கியம் (United in translation)
  • “மொழிபெயர்ப்பாலர்களின் புரவலர்” எனப்போற்றப்படுபவர் = பைபிளை மொழி பெயர்த்த செயின்ட் ஜெரோமின்

டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல்

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • விரைவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்பாடலில் இந்தியக் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகளின் கேயரன் போலார்ட் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளது. இது ஒரு அனிமேசன் பாடல் ஆகும்.
  • இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் = அமித் திரிவேதி
  • இந்தப் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும், இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும்.

உலக கடல்சார் தினம்

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • உலக கடல்சார் தினம் (அல்லது) உலக கடல் தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வியாழக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும்
  • 2021 இல், இது சர்வதேச கடல்சார் அமைப்பால் (IMO) செப்டம்பர் 30 அன்று அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • இந்த ஆண்டிற்கான கரு = கடற்படையினர்: கப்பல் வருங்காலத்தின் மையத்தில் / Seafarers: at the core of shipping’s future என்பதாகும். உலக கடல் தினம் முதல் முறையாக மார்ச் 17, 1978 அன்று கடைபிடிக்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவனத்தின் “படைப்பாளர் கல்வி மற்றும் செயல்படுத்தல் திட்டம்”

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • பேஸ்புக் இந்தியா நிறுவனம் சார்பில் இந்தியாவில் “படைப்பாளர் கல்வி மற்றும் செயல்படுத்தல் திட்டம்” (creator education and enablement programme) என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது
  • இதன் நோக்கம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில், படைப்பாளிகள் தங்களின் கருத்துக்கள் மூலம் சம்பாதிக்கவும், சமூகத்தை வளர்க்கவும் வாய்ப்பளிக்கிறது

சாகித்திய அகாடமியின் “அகில இந்திய கவிதை திருவிழா”

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • சாகித்திய அகாடமியின் சார்பில், வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி “அகில இந்திய கவிதை திருவிழா” நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் மற்றும் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியின் உள்ள ஜெயின் கல்லூரி கலையரங்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது
  • இந்த திருவிழாவில், சாகித்திய அகாடமியின் புத்தகத் திருவிழாவும் நடைபெறும்.

2021 இடான் விருது

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • 2021 ஆம் ஆண்டிற்கான இடான் விருது, இந்தியாவை சேர்ந்த ருக்மணி பானர்ஜிக்கு வழங்கப்பட்டது.
  • இடான் பரிசு அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இவருடன் சேர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் எரிக் ஹனுஷெக்கிற்கும் இடான் விருது வழங்கப்பட்டுள்ளது
  • “கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அளவில் பயிலும் மாணவர்களுக்கான விளைவுகளை” என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான கல்வி புதிரை நிவர்த்தி செய்யும் அவர்களின் சிறந்த வேலைக்கான அங்கீகாரத்திற்காக இருவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

வியாழனின் ட்ரோஜன் விண்கற்களை ஆய்வு செய்ய தனது முதல் விண்கலத்தை அனுப்பிய நாசா

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வியாழன் கோளில் உள்ள ட்ரோஜன் சிருகோள்களை ஆராய தனது முதல் விண்கலமான “லூசி” யை அனுப்ப உள்ளது
  • வருகின்ற அக்டோபர் 16, 2021 அன்று “புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து”, இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது
  • “மிசன் லூசி”, 12 வருட பயணத்திணை மேற்கொள்ள உள்ளது.
  • ட்ரோஜன் என்பது, சிறிய வான உடல்கள் அல்லது சிறுகோள்கள் ஆகும், அவை ஒரு பெரிய சுற்றுப்பாதையை பகிர்ந்து கொள்கின்றன.

துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமர்

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக நஜ்லா பூடன் ரோம்தேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • ஜனாதிபதி கைஸ் சயீத் பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஜனாதிபதி பாராளுமன்றத்தை நிறுத்தி வைத்ததால் ஏற்பட்ட சர்வதேச எதிர்ப்புகளை சமாளிக்க இவரை தேர்வு செய்துள்ளனர்.

ஸ்வீடனின் மாற்று நோபல் பரிசு

  • Right Livelihood Award 2021 எனப்படும் 2021 ஆம் ஆண்டின் “வாழ்வுரிமை விருது”, இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
  • ஸ்வீடன் வாழ்வுரிமை அறக்கட்டளை என்ற பெயரில் உருவாக்கிய “சோக்கப் வோன் உக்ஸ்கல்”, வாழ்வுரிமை விருதை வழங்கி வருகிறார். இவ்விருது “ஸ்வீடனின் மாற்று நோபல் பரிசு” என போற்றப்படுகிறது
  • இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த LIFE என்ற வனம் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட நடவடிக்கை அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • LIFE = Legal Initiative for Forest and Environment
  • LIFE என்ற இந்த அமைப்பை உருவாக்கியவர்கள், வழக்கறிஞர்கள் ரித்விக் தத்தா மற்றும் ராகுல் சவுத்திரி ஆகியோர் ஆவர்.

இந்தியாவின் முதல் பாலினம்-நடுநிலை HPV தடுப்பூசி

30 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இந்தியாவின் முதல் பாலினம் நடுநிலை மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) தடுப்பூசி, “GARDASIL-9” என்ற பெயரில் எம்.எஸ்.டி நிறுவனம் உருவாக்கி உள்ளது
  • இது முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • GARDASIL-9 மூன்று டோஸ் நானோ வாலண்ட் (9-வாலண்ட்) மனித பாப்பிலோமாவைரஸ் அல்லது HPV தடுப்பூசி ஆகும், இது HPV தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய்களைக் குறைக்க உதவுகிறது.

பி.எம். – போஜன்

  • அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் “பி.எம்-போஜன்” என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • தற்போது பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் தேசிய மதிய உணவு திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்
  • இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
  • ஆனால் அரசு மற்றும் அரசு தொடக்கப் பலிகளில் இயங்கும் மழலையர் வகுப்புகள் மற்றும் அங்கன்வாடிகள் தற்போது இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி

  • இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் 27 வயதான கல்யாணி பொடேகர்.
  • சமிபத்தில் என்.சி.ஆ.ரின் புத்த இண்டர்நேசனல் சர்க்கியுட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில்,08 நிமிடங்களில் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார்.
  • இதன் மூலம் இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஜப்பானின் புதிய பிரதமர்

  • ஜப்பான் பிரதமராக இருந்து ஷின்சோ அபே உடல் நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து, யோஷிகிடே சுகா பிரதமராக பதவி ஏற்றார்.
  • இவரைத் தொடர்ந்து தற்போது வெளியுறவுத் துறை அமைச்சரான “புமியோ கிஷிடோ” ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 29,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 28,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 27,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 26,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 23,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 22,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 21,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 19,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 18,2021

Leave a Reply