6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட முதல் நகரங்கள்
- பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள் = ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ.
- ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் “சிந்துவெளி நாகரிகத்தை” சார்ந்த நகரங்கள் ஆகும்.
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
- உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் = மெசபடோமியா நாகரிகம்.
- இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
7.6x
6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
- தமிழகத்தின் மிகவும் தொன்மையான நகரங்கள் = மதுரை, கொடுமணல், கீழடி, கருவூர் (கரூர்), உறையூர், காஞ்சிபுரம்.
- தமிழகத்தின் புகழ்பெற்ற தொன்மையான நகரங்கள் = மதுரை, காஞ்சிபுரம்.
தமிழகத்தின் தொன்மையான துறைமுகங்கள்
- தமிழகத்தின் மிகவும் தொன்மையான துறைமுகங்கள் = மாமல்லை, அரிக்கமேடு, பூம்புகார், தொண்டி, அழகன்குளம், காயல்பட்டினம், கொற்கை.
- தமிழகத்தின் புகழ்பெற்ற தொன்மையான துறைமுகம் = பூம்புகார்.
பூம்புகார் நகரம்
- சிலப்பதிகார காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர்.
- துறைமுக நகரம்.
- இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.
பூம்புகார் துறைமுகம்
- பூம்புகார் நகரின் வேறு பெயர்கள் = புகார், காவிரிபூம்பட்டினம்.
- சோழ அரசர்களின் துறைமுகம் = பூம்புகார்.
- பூம்புகார் நகரில் நடைபெற்ற வணிகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல்கள் = பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் (புகார் காண்டம்), மணிமேகலை.
- சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை = மாநாய்கன்.
- “மாநாய்கன்” என்பதன் பொருள் = பெருங்கடல் வணிகன்.
- கோவலனின் தந்தை = மாசாத்துவான்.
- “மாசாத்துவான்” என்பதன் பொருள் = பெருவணிகன்.
- கிரேக்கன், ரோம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வணிகர்கள் இங்கு வந்து தங்கி வணிகம் செய்துள்ளனர்.
- அதனால் வெளிநாட்டவர் குடியிருப்புகளும் தோன்றின.
பட்டினப்பாலை ஆசிரியர்
- “பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினார்கள். மிகச் சரியான விலைக்கே பொருள்களை விற்றனர். கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று அவர்கள் கருதினர்” என்று கூறும் சங்க இலக்கிய நூல் = பட்டினப்பாலை.
- பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 2-ம் நூற்றாண்டு.
பூம்புகார் நகரில் இறக்குமதி செய்யபப்ட்ட பொருள்கள்
- குதிரைகள் = கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டன.
- கருமிளகு = தரைவழியாக இறக்குமதி செய்யபப்ட்டன.
- தங்கம் = வடமலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
- சந்தனம் = மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
- முத்து = தென்கடல் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
- பவளம் = கிழக்குப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
- உணவுப் பொருள்கள் = ஈழத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
பூம்புகாரில் கப்பல் கட்டும் தளம்
- பூம்புகார் நகரில் கப்பல் கட்டும் தளம் மற்றும் கப்பல் செப்பனிடும் தளம் இருந்ததாக கூறப்படுகிறது.
பூம்புகார் நகரின் அழிவு
- கி.பி (பொ.ஆ). 200 வரை சிறப்புற்றுத் திகழ்ந்த புகார் நகரம் கடற்கோள் அல்லது கடற்சீற்றங்களால் அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மதுரை நகரம்
- சங்கம் வளர்த்த நகரம் = மதுரை நகரம்.
- பண்டைய காலத்தில் மதுரை நகரை ஆண்டவர்கள் = பாண்டியர்கள், சோழர்கள், களப்பிரர்கள்.
- இடைக்காலத்தில் மதுரை நகரை ஆண்டவர்கள் = பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், நாயக்கர்கள்.
பண்பாட்டுக் கலப்பு
- பல்வேறு மன்னர்கள் ஆண்டதன் விளைவாக மதுரையில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பிற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்ற இடம் = கீழடி.
தமிழ்ப் பணி செய்த புலவர்கள்
- சங்கம் அமைத்து தமிழை வளர்த்த நகரம் = மதுரை.
- கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்களின் எண்ணிக்கை = 49.
அகில், சந்தனம்
- தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
- கிழக்கு கடற்கரையில் அமைந்தள்ளது தொண்டி நகரம்.
பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமன்
- பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமன், பாண்டியர் துறைமுகமான கொற்கைக்கு அருகேயுள்ள “உவரி” என்னும் இடத்தில் இருந்து முத்தினை இறக்குமதி செய்துள்ளார்.
- ரோமானிய நாணயங்கள் அடிக்கும் தொழிற்சாலை மதுரையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூங்கா நகரம் என அழைக்கப்படக் காரணம்
- நாளங்காடி, அல்லங்காடி என்ற இரண்டு வகை அங்காடிகள் மதுரையில் இருந்தன.
- நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும்.
- அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.
- இரவு – பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.
காஞ்சி நகரம்
- கல்வி கற்பதற்கான பள்ளிகள் அதிகளவில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட இடம் = காஞ்சி நகரம்.
- சீனப்பயனை யுவான் சுவாங், கூடுதல் படிப்பிற்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து பயின்றுள்ளார்.
நகரங்களில் சிறந்தது காஞ்சி
- “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கூறியவர் = காளிதாசர்.
- “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று கூறியவர் = திருநாவுக்கரசர் நாயன்மார்.
- “புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று” என்று கூறியவர் = சீனப் பயணி யுவான் சுவாங்.
கோயில்களின் நகரம்
- “கோவில்களின் நகரம்” என்று அழைக்கப்படுவது = காஞ்சி நகரம்.
- காஞ்சியில் உள்ள “கைலாசநாதர் கோவிலை” கட்டியவர் = பல்லவ மன்னன் இராஜசிம்மன்.
- பௌத்த பெண் துறவியான “மணிமேகலை”, தனது இறுதிக் காலத்தை காஞ்சியில் கழித்தார்.
ஏரிகளின் மாவட்டம்
- “ஏரிகளின் மாவட்டம்” என்று அழைக்கப்படுவது = காஞ்சிபுரம் மாவட்டம்.
- காஞ்சி நகரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டுள்ளன.
- நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் நகரம் = காஞ்சிபுரம் நகரம்.
புகார், மதுரை, காஞ்சி நகரம்
- புகார் நகரம் = துறைமுகம் நகரம்
- மதுரை நகரம் = வணிக நகரம்
- காஞ்சி நகரம் = கல்வி நகரம்
சேர சோழ பாண்டிய தொண்டை நாடுகள்
- சேர நாடு = கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்
- சோழ நாடு = தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்
- பாண்டிய நாடு = மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்
- தொண்டை நாடு = காஞ்சிபுரம், திருவள்ளுர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி.
- சோழ நாடு = சோறுடைத்து
- பாண்டிய நாடு = முத்துடைத்து
- சேர நாடு = வேழமுடைத்து
- தொண்டை நாடு = சான்றோருடைத்து.
புத்தக வினாக்கள்
- 6500 ஆண்டுகளுக்கும் பழமையான நாகரிகத்தின் நகரம்? = ஈராக்
- இவற்றுள் எது தமிழக நகரம்? = காஞ்சி நகரம்
- வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்? = காஞ்சிபுரம்.
- தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது? = கல்லணை, காஞ்சிபுரம் ஏரிகள்.
- பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரம் அல்ல? = சென்னை.
- கீலடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்? = மதுரை.
- கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _________? = பல்லவ மன்னன் இராஜசிம்மன்
- கோவில்களின் நகரம் என அழைக்கப்படுவது ______________? = காஞ்சிபுரம்
- மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _______________? = பெருவணிகன்.
- பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாகப் பண்பாட்டுப் பரிமாற்றம் நடைபெற்றது? = சரி.
- மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்? = சரி.
- பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன? = சரி.
- போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்? = சரி.
- வரலாறு என்றால் என்ன
- மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
- சிந்துவெளி நாகரிகம்
- 6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
- 6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
- 6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
- 6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்