6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்

Table of Contents

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்

உலகின் தொன்மையான நாகரிகங்கள்

  • மெசபடோமியா நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3500 – 2000
  • எகிப்து நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3100 – 1100
  • சீன நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 1700 – 1122
  • சிந்துவெளி நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3300 – 1900
  • உலகில் பழமையான நாகரிகம் = மெசபடோமியா நாகரிகம்

நதிக்கரை நாகரிகங்கள்

  • மெசபடோமியா, எகிப்து, சீன மற்றும் சிந்துவெளி நாகரிகங்கள் அனைத்தும் “நதிக்கரை நாகரிகங்கள்” ஆகும்.
  • உலகின் நான்கு பழம்பெரும் நாகரிகங்களில் மிகப் பழமையானது = மெசபடோமியா நாகரிகம்.

நாகரிகம் என்றால் என்ன

  • நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது.
  • இதன் பொருள் ‘நகரம்’ ஆகும்.

மக்கள் நதிக்கரையில் குடியேறியதர்கான காரணங்கள்

  • வளமான மண்
  • ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும் கால்நடைகளின் தேவைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டன.
  • போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

6.3x

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்

  • உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்று = சிந்துவெளி நாகரிகம்.
  • பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது = சிந்துவெளி நாகரிகம்.
  • உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள் இருந்த நாகரிகம் = சிந்துவெளி நாகரிகம்.
  • மேம்பட்ட சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்பு இருந்த நாகரிகம் = சிந்துவெளி நாகரிகம்.
  • சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உணர்வு மேலோங்கியிருந்த நாகரிகம் = சிந்துவெளி நாகரிகம்.

ஹரப்பா நகரம்

  • ஹரப்பா நகர இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர் = சார்லஸ் மேசன்.
  • சார்லஸ் மேசன் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியில் முதன் முதலில் செங்கல் திட்டுகளை கண்டறிந்தவர் = சார்லஸ் மேசன்.
  • ஹரப்பா நகரத்தை பற்றி “அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டை உயரமானசுவர்களுடனும்,கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” என்று கூறியவர் = சார்லஸ் மேசன்.
  • ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்றை பதிவு செய்தவர் = சார்லஸ் மேசன்.

ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

  • கி.பி (பொ.ஆ) 1920இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
  • அப்பொழுது நீண்டநாள் மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.

இந்தியத் தொல்லியல் துறை

  • இந்தியத் தொல்லியல் துறை – ASI = ARCHAELOGICAL SOCIETY OF INDIA.
  • இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு = 1861.
  • இந்தியத் தொல்லியல் துறையை உருவாக்கியவர் = சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
  • இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் = புது தில்லி.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர்

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • 1924ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனராக இருந்தவர் = சர் ஜான் மார்ஷல்.
  • ஹரப்பாவிற்கும் – மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்களை முதன் முதலில் கண்டறிந்தவர் = ஜான் மார்ஷல்.

ஹரப்பா நகரம் பழமையானது

  • மொகஞ்சதாரோ நகரத்தை விட பழமையான நகரம் = ஹரப்பா நகரம்.
  • காரணம் = இரண்டு நகரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மண் பாண்டங்களில் வேறுபாடுகள் காணப்படல்.

ஹரப்பா நகர காலவரையறை

  • புவி எல்லை = தெற்கு ஆசியா
  • காலப்பகுதி = வெண்கலக்காலம்
  • காலம் = கி.மு (பொ.ஆ.மு) 3300 – 1900
    • கதிரியக்க கார்பன் வயதுக் கணிப்பு முறை மூலம் முடிவு செய்யப்பட்டது
  • பரப்பு = 13 லட்சம் சதுர கி.மீ
  • நகரங்கள் = 6 பெரிய நகரங்கள்
  • கிராமங்கள் = 200க்கும் மேற்பட்டவை

ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு

  • மேற்கில் = பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரை வரை
  • கிழக்கில் = காகர் – ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை
  • வடகிழக்கில் = ஆப்கானிஸ்தான் வரை
  • தெற்கில் = மகாராஷ்ரா வரை
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்

வெண்கலக் காலம் என்றால் என்ன

  • மக்கள் வெண்கலத்தால் ஆன பொருள்களை மக்கள் பயன்படுத்திய காலம் = வெண்கலக் காலம்.

ஹரப்பா நகரம் ஓர் நகர நாகரிகம்

  • ஹரப்பா நகரம் ஓர் நகர நாகரிகம் என்பதற்கான சான்றுகள்,
    • சிறப்பான நகரத் திட்டமிடல்
    • சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
    • தூய்மைக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
    • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
    • விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கானத் திடமான அடித்தளம்

ஹரப்பா நகரத்தின் தனித்தன்மை

  • ஹரப்பா நகரத்தின் தனித்தன்மை = திட்டமிட்ட நகர அமைப்பு.
  • நகரம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது = மேல்னகரம், கீழ் நகரம்
  • மேல்நகர அமைப்பு
      • நகரத்தின் மேற்கு பகுதி சற்று உயரமானது. அது கோட்டை எனப்பட்டது.
      • நகர நிர்வாகிகள் இதனைப் பயன்படுத்தினர்.
      • பெருங்குளமும், தானியக் களஞ்சியமும் இருந்த இடம் = மேல்நகரம்.
  • கீழ் நகர அமைப்பு
      • நகரத்தின் கிழக்குப் பகுதி சற்று தாழ்ந்த உயரமுடையது.
      • அதிக பரப்பு கொண்ட நகரம் = கீழ் நகரங்கள்.
      • பொதுமக்கள் வசிக்கும் இடம் = கீழ் நகரம்.

ஹரப்பா நகர தெருக்களும் வீடுகளும்

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • ஹரப்பா நகர தெருக்கள் “சட்டக வடிவமாக” கட்டப்பட்டு இருந்தன.
  • தெருக்கள் நேராக அமைக்கப்பட்டு இருந்தது.
  • அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன.
  • ஒன்றை ஒன்று “செங்கோணத்தில்” வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
  • தெருக்களின் இரு ஓரங்களில் வீடுகள் வரிசையாக இருந்தன.
  • வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாகக் காணப்படுகின்றன.
  • பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும் ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், இருந்திருக்கின்றன.
  • வீடுகள் சுண்ணாம்புக் குளியலறையும் சுட்ட செங்கற்களாலும் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.
  • கூரைகள் சமதளமாக இருந்தன.
  • அரண்மனைகளோ, வழிப்பாட்டுத்தலங்களோ இருந்ததைத் தீர்மானிக்க கூடிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஹரப்பா நகர கழிவு நீர் அமைப்பு

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • பெரும்பாலான நகரங்களில் கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்துள்ளது.
  • செங்கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கான துளைகளும் இருந்துள்ளன.
  • வீட்டில் இருந்து கழிவு நீர் தெருக்களில் உள்ள கழிவு நீர் குழாய்க்கு செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தன.
  • திடக் கழிவுகளை தேக்குவதற்கான குழிகளும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தன.

பெருங்குளம் – மொகஞ்சதாரோ

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • மொகஞ்சதாரோ என்பதன் பொருள் = இறந்தோர் மேடு.
  • பெருங்குளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.
  • செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கம்.
  • நீர் கசியாத கட்டுமானத்துக்கான உலகின் பழமையான சான்று = மொகஞ்சதாரோ பெருங்குளம் ஆகும்.
  • குளத்தின் பக்கவாட்டின் மூன்று பக்கங்களிலும் அறைகள் இருந்தன.
  • அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டன.
  • மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உலகின் முதல் முதலில் கட்டப்பட்ட பொதுக் குளம் = மொகஞ்சதாரோ பெருங்குளம்.

தானியக் களஞ்சியம் – ஹரப்பா

  • தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = ஹரப்பா.
  • தானியக் களஞ்சியத்தின் தள வெடிப்புகளில் இருந்து “கோதுமை, பார்லி, திணை வகைகள், எள், பருப்பு வகைகளின் மிச்சங்கள்” கண்டிபிடிக்கப்பட்டுள்ளன.

தானியக் களஞ்சியம் – ராகிகர்கி

  • செங்கற்களால் கட்டபப்ட்ட மற்றொரு தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = ராகிகர்கி (ஹரியானா).
  • ஹரியான மாநிலம் ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் களஞ்சியம், “முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தை” சார்ந்தது ஆகும்.

மாபெரும் கட்டடங்கள் – மொகஞ்சதாரோ

  • மொகஞ்சதாரோ நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு மிகப்பெரிய பொதுக் கட்டடம் = கூட்ட அரங்கம்.
  • இது 20 தூண்கள் 4 வரிசைகள் கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.

ஹரப்பா நகர வணிகம் மற்றும் போக்குவரத்து

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • ஹரப்பா நகர மக்கள் = வணிகர்கள்.
  • ஹரப்பா மக்கள் பயன்படுத்தியது = தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள்.
  • நீளத்தை அளக்க, “அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளை” பயன்படுத்தினர்.
  • ஆரக்கால் இல்லாத சக்கரங்களை கொண்ட வண்டிகளை பயன்படுத்தியுள்ளனர்.
  • மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்று இருக்கிறது.
    • மெசபடோமியா என்பது = தற்போதைய ஈராக், குவைத், சிரியா பகுதிகள்
  • சிந்துவெளி முத்திரைகள், மெசபடோமியாவின் “சுமேர்” பகுதியில் கிடைத்துள்ளன.
  • சிந்துவெளி முத்திரைகள் “பாரசீக வளைகுடா” பகுதிகளில் கிடைத்துள்ளன.
  • சுமேரியாவின் அக்காடியப் பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக நாரம் – சின் குறித்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
  • போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட விலங்கு = காளை.

கப்பல் கட்டும் தளம் – லோத்தல்

  • தற்கால குஜராத்தின் “லோத்தல்” என்னும் இடத்தில கண்டுபிடிக்கப்பட்டவை = கப்பல் கட்டும் தளம், கப்பல் செப்பனிடும் தளம்.
  • லோத்தல் = சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி.

மொகஞ்சதாரோ தலைவர்

  • அமர்ந்த நிலையில் உள்ள “ஆண் சிலை” கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.

ஹரப்பா தொழில்நுட்பம்

  • சிந்துவெளி நகர மக்கள் தரப்படுதபப்ட்ட எடைகள் அம்ற்றும் அளவைகளை பயன்படுத்தி உள்ளனர்.
  • தந்தத்தினால் ஆன அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = லோத்தல் (குஜராத்).
  • குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்)

மனிதர்கள் பயன்படுத்திய முதல் உலோகம்

  • மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் = செம்பு.
  • மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட முதல் உலோகம் = செம்பு.

நடனமங்கை சிலை

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • வெண்கலத்தால் ஆன “நடனமங்கை சிலை” கண்டுபிடிக்கப்பட்ட இடம் = மொகஞ்சதாரோ.
  • நடனமங்கை சிலை பற்றி சர் ஜான் மார்ஷல் கூறியது = “இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இது வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச்சிலைகள் அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன”.

கே.வி.டி வளாகம்

  • கே.வி.டி (கொற்கை – வஞ்சி – தொண்டி) வளாகம்
  • பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன.
  • ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.

சிந்துவெளி மக்களின் உடை

  • சிந்துவெளி மக்கள் பருத்தி ஆடைகளை பயன்படுத்தினர்.
  • உலகில் முதன் முதலில் பருத்தி செடியை வளர்த்தவர்கள் = சிந்து வெளி மக்கள்.
  • உலகில் முதன் முதலில் பருத்தியை பயன்படுத்தியவர்கள் = சிந்து வெளி மக்கள்.
  • கம்பிளி ஆடைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அமைதி வாழ்க்கை

  • சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கை முறையை வாழ்ந்துள்ளனர்.
  • படைகள் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை.

அணிகலன்கள்

  • சிந்துவெளி மக்கள் ஆண், பெண்கள் இருவருமே அணிகலன்களை விரும்பி அணிந்துள்ளனர்.
  • கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவற்றையும் அணிந்தனர். தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.
  • சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய ஆபரண மணிகள் = சிவப்பு நிற மணிக்கற்கள் (CARNELIAN).

இரும்பு, குதிரை

  • சிந்துவெளி மக்கள் அறிந்திராத உலோகம் = இரும்பு.
  • சிந்துவெளி மக்கள் அறிந்திராத விலங்கு = குதிரை.

சிந்துவெளி மக்களின் தொழில்

  • சிந்துவெளி மக்களின் முதன்மையான தொழில் பற்றி தகவல் கிடைக்கப் பெறவில்லை.
  • சிந்துவெளி மக்கள் தொழில்கள் = வேளாண்மை, கைவினைப் பொருள்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல், கால்நடை வளர்ப்பு.

மட்பாண்டங்கள்

  • தீயினால் சுடப்பட்ட மட்பாண்டங்களை செய்தனர்.
  • சிவப்பு வண்ண மட்பாண்டங்களை உருவாக்கினர்.

தாய் தெய்வ வழிபாடு

  • சிந்துவெளி மக்களின் வழிபாடு = தாய்தெய்வ வழிபாடு.

சிந்துவெளி மக்களின் கலைத்திறன்

6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
  • கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவற்றையும் அணிந்தனர். தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.

ஹரப்பா நாகரிகத்தின் சரிவிற்கான காரணங்கள்

  • கி.மு (பொ.ஆ.மு) 1900 முதல் ஹரப்பா நாகரிகம் சரியத் துவங்கியது.
  • அதற்கான காரணங்களாக கூறப்படுபவை,
    • ஆற்றின்கரையில்உள்ளஅதன்நகரங்களில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
    • சுற்றுச்சூழல் மாற்றம்
    • படையெடுப்பு
    • இயற்கைச் சீற்றங்கள்
    • காலநிலை மாற்றம்
    • காடுகள் அழிதல்
    • தொற்று நோய்த் தாக்குதல்

கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை

  • கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன்முறை அல்லது கார்பன்14 (C14)முறை என்றுஅழைக்கப்படுகிறது.

உலகின் முதல் எழுத்து வடிவம்

  • உலகின் முதல் எழுத்து வடிவம் = சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.

இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நகரங்கள்

  • தொல்பொருள் ஆய்வாளர்கள், இந்திய எல்லையில் கண்டுபிடித்த சிந்துவெளி நகரங்கள் = மொகஞ்சதாரோ, அம்ரி, கோட்டிஜி, லோத்தல், தோலவிரா, கன்வேரிவாலா, காலிபங்கன், ஹரப்பா, மந்தா, ராகிர்கி, மிட்டதாய்.

சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி – மெஹர்கர்

  • மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.
  • இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
  • இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று.
  • மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
  • கி.மு (பொ.ஆ.மு) 7000-ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலகம் அந்நாளில்

  • கிசா பிரமிடு = கி.மு (பொ.ஆ.மு) 2500 இல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டது.
  • உர் ஜிகுராட் = மெசபடோமியா (சுமேரியர் காலம்) உர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்டது.
  • அபு சிம்பல் = எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்.

புத்தக வினாக்கள்

  1. சிந்துவெளி மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்? = செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்.
  2. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது? = உலோகக் காலம்.
  3. ஆற்றங்கரைகள் “நாகரிகத் தொட்டில்கள்” என அழைக்கப்படக் காரணம்? = பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரையில் தோன்றியதால்.
  4. _________ மிகப் பழமையான நாகரிகம்? = மெசபடோமியா நாகரிகம்.
  5. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது? = அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்.
  6. _________ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.? = தானியக் களஞ்சியம்
  7. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து __________ தை உருவாக்கினர்? = சமூகம்
  8. மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும் = சரி.
  9. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது = தவறு.
  10. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது = சரி.
  11. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது = தவறு (சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது).
  12. சிந்துவெளி மக்கள் ஆடை தயாரிக்க எதைப் பயன்படுத்தினர்? = பருத்தி
  13. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிக நகரம் எது? = ஹரப்பா
  14. சிந்துவெளி நாகரிகம் எங்கு இருந்தது? = சிந்து நதிக்கரை.
  15. எந்த விலங்கு வண்டி இழுக்கப் பயன்பட்டது? = காளை மாடு.
  16. சிந்து வெளி மக்களுக்கு எந்த உலோகம் தெரியாது? = இரும்பு.
  17. பானை செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர்? = களிமண்
  18. உலகின் நான்கு பழம்பெரும் நாகரிகங்களில் மிகப் பழமையானது எது? = மெசபடோமியா நாகரிகம்.

 

 

 

Leave a Reply