இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

இடைக்கால இந்திய வரலாறு

  • இந்திய வரலாற்றில் இடைக்காலம் என்பது = கி.பி. 700 முதல் கி.பி. 1700 வரை.
  • இடைக்கால இந்திய வரலாறு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
    • தொடக்க இடைக்கால இந்திய வரலாறு
    • பின் இடைக்கால இந்திய வரலாறு.
  • தொடக்க இடைக்கால இந்திய வரலாறு என்பது = கி.பி. 700 முதல் கி.பி. 1200 வரை.
  • பின் இடைக்கால இந்திய வரலாறு என்பது = கி.பி. 1200 முதல் கி.பி. 1700 வரை.

சான்றுகள் என்றால் என்ன

  • கடந்த காலத்தை மறுபதிவு செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.
  • சான்றுகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றது. அவை,
    1. முதல்நிலைச் சான்றுகள்
    2. இரண்டாம் நிலைச் சான்றுகள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

முதல்நிலைச் சான்றுகள்

  • முதல்நிலைச் சான்றுகள் = பொறிப்புகள் (கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள்), நினைவுச்சின்னங்கள், நாணயங்கள்.

இரண்டாம் நிலைச் சான்றுகள்

  • இரண்டாம் நிலைச் சான்றுகள் = இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள்.

பொறிப்புகள் (கல்வெட்டுகள்) என்றால் என்ன

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
  • பொறிப்புகள் = பொறிப்புகள் என்பன பாறைகள், கற்கள், கோயிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்.
  • செப்புப்பட்டயங்களின் விலை அதிகமாக இருந்ததன் காரணமாக பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
  • பிற்காலச் சோழர்களின் செப்புப்பட்டயக் கொடை ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட குருமார்களுக்கோ, துறவிகளுக்கோ அல்லது புகழ்பெற்ற மனிதர்களுக்கோ வழங்கப்பட்ட கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • முதலாம் ராஜேந்திர சோழனின் செப்பேடு = திருவாலங்காடு செப்பேடுகள்.
  • சுந்தரச் சோழனின் செப்பேடுகள் = அன்பில் செப்பேடுகள்.
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

  • சோழர்கள் ஆட்சியில் கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்ற கல்வெட்டுகள் = காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூர் கல்வெட்டுகள்.
  • உத்திரமேரூர் கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

சோழர்கள் கால நிலக்கொடைகள்

  • வேளாண் வகை = பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்.
  • பிரம்மதேயம் = பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • சாலபோகம் = கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக  வழங்கப்பட்ட நிலங்கள்.
  • தேவதானம் = கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • பள்ளிச் சந்தம் = சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள்.

நினைவுச் சின்னங்கள்

  • டெல்லி சுல்தான்களின் கட்டிடக் கலையின் முக்கிய கூறுகள் யாவை = வளைவுகள், ஒடுங்கிய வடிவக் கோபுரங்கள், குவிமாடங்கள்.
  • வடஇந்தியாவில் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள சான்றுகளாக உள்ள நினைவுச் சின்னங்கள் = கஜுராகோ (மத்தியப்பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள், கொனாரக்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள்.
  • பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரமாண்டமான கட்டடங்களுக்கு எடுத்துக்காட்டுகள் = தஞ்சாவூரிலுள்ள சிறந்த பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள்.
  • விஜயநகர அரசர்களின் கோவில்கள் = ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்கள்.
  • இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகள் = குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்- கி-மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா (இவையனைத்தும் டெல்லியிலும் அதற்கருகாமையிலும் அமைந்துள்ளன), சார்மினார் (ஹைதராபாத்).
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

  • இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலங்கள் = வடஇந்தியாவிலுள்ள பாழடைந்த நகரங்களான பிரோஷாபாத், துக்ளகாபாத் ஆகியனவும் தென்னிந்தியாவிலுள்ள ஹம்பியும்.

நாணயங்கள்

  • நாணயங்களில் உள்ள உலோகக் கலவை = பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.
  • முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
  • நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்து வெளியிட்ட முஸ்லிம் மன்னன் = முகமது கோரி.
  • டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள ‘ஜிட்டல்’ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.
  • “ஜிட்டல்” என்பது செப்பு நாணயம் ஆகும்.
  • ‘டங்கா’ எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்த முகலாய மன்னன் = இல்துமிஷ்.
  • இல்துமிஷ் அறிமுகம் செய்த ‘டங்கா’ எனப்படும் வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமதுபின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலான பயன்பாட்டில் இருந்ததை உணர்த்துகின்றன.
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

சமய இலக்கியங்கள்

  • முதன் முதலில் பக்தி இயக்கம் தோன்றிய இடம் = தென்னிந்தியா.
  • “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுவது = சோழர்கள் காலம்.
  • பன்னிரு ஆழ்வார்கள் இயற்றியது = நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.
  • “நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்” நூலினை தொகுத்தவர் = நாதமுனிகள்.
  • “தேவாரம்” நூலினை தொகுத்தவர் = நம்பியாண்டார் நம்பி.
  • “கீதகோவிந்தம்” நூலின் ஆசிரியர் = ஜெயதேவர்.

சமயச் சார்பற்ற இலக்கியங்கள்

  • “மதுரா விஜயம்” நூலின் ஆசிரியர் = கங்காதேவி.
  • “ஆமுக்த மால்யதா” நூலின் ஆசிரியர் = கிருஷ்ணதேவராயர்.
  • விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளை விவரிக்கும் இலக்கியங்கள் = கங்காதேவியால் இயற்றப்பட்ட ‘மதுரா விஜயம்’, கிருஷ்ணதேவராயரின் ‘அமுக்த மால்யதா’.
  • “பிருதிவிராஜ ராசோ” நூலின் ஆசிரியர் = சந்த்பார்தை.
  • ராஜபுத்திர அரசர்களின் வரலாறை கூறும் நூல் = சந்த்பார்தையின் ‘பிருதிவிராஜ ராசோ’.
  • “ராஜதரங்கிணி” நூலின் ஆசிரியர் = கல்ஹனர்.
  • இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று = கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’ (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே.

 

 

வாழ்க்கை வரலாறு நூல்கள்

  • “தபகத்-இ-நஸிரி” நூலின் ஆசிரியர் = மின்கஜ் உஸ் சிராஜ்.
  • மின்கஜ் உஸ் சிராஜை ஆதரித்தவர் = அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதின் மாமூது.
  • முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி. 1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகளைக் கூறுகின்ற நூல் = மின்கஜ் உஸ் சிராஜின் “தபகத்-இ-நஸிரி”.
  • “தாஜ்-உல்-மா-அசிர்” நூலின் ஆசிரியர் = ஹசன் நிஜாமி.
  • குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை கூறும் நூல் = ஹசன் நிஜாமின் ‘தாஜ்-உல்-மா-அசிர்’.
  • டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூல் = ஹசன் நிஜாமின் ‘தாஜ்-உல்-மா-அசிர்’.
  • முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் = “ஹசன் நிஜாமின் ‘தாஜ்-உல்-மா-அசிர்’.
  • “தாரிக்-இ-பிரோஷாகி” நூலின் ஆசிரியர் = ஜியா- உத்-பரணி.
  • கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ்-ஷா துக்ளக்கின் தொடக்கக்கால ஆட்சி வரையிலான டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை கூறும் நூல் = ஜியா- உத்-பரணி எழுதிய ‘தாரிக்-இ-பிரோஷாகி’.
  • “தாரிக்-இ-பெரிஷ்டா” நூலின் ஆசிரியர் = பெரிஷ்டா.
  • இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கின்ற நூல் = பெரிஷ்டாவின் (16ஆம் நூற்றாண்டு) தாரிக்-இ-பெரிஷ்டா.
  • “பாபர் நாமா” நூலின் ஆசிரியர் = பாபர்.
  • “அயினி அக்பரி” நூலின் ஆசிரியர் = அபுல் பாசல்.
  • “அக்பர் நாமா” நூலின் ஆசிரியர் = அபுல் பாசல்.
  • “தசுக்-இ-ஜாஹாங்கீரி” நூலின் ஆசிரியர் = ஜஹாங்கீர்.
  • சுயசரிதை எழுதிய முகலாய அரசர்கள் = பாபர், ஜகாங்கீர்.
  • “தபகத்-இ-அக்பரி” நூலின் ஆசிரியர் = நிஜாமுதீன் அகமத்.
  • “தாரிக்-இ- பதானி” நூலின் ஆசிரிய = பதானி.
  • “தாரிக்-இ- பதானி” நூலின் வெளியிடப்பட்ட ஆண்டு = 1595.
  • “தாரிக்-இ- பதானி” நூலில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை = மூன்று.
  • அக்பரின் ஆட்சி பற்றி ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துக்களை முன்வைத்த நூல் = பதானி எழுதிய “தாரிக்-இ- பதானி”.

பயணிகளும் பயணநூல்களும்

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
  • 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணி = வெனீஸ் நாட்டின் மார்கோபோலோ.
  • மார்கோபோலோ தமிழகத்தில் காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது) எனும் ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.
  • சீனாவில் இருந்து கப்பலில் தமிழகம் வந்ததாக மார்கோபோலோ தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
  • கஜினி மாமூதுடன் இந்தியா வந்த அறிஞர் = அல்-பரூனி.
  • கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பு பற்றிய துல்லியமான தகவல்களை தந்தவர் = அல்-பரூனி.
  • “தாகுயூக்-இ- ஹிந்த்” நூலின் ஆசிரியர் = அல்-பரூனி.
  • இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு பயணி = இபன் பதூதா.
  • இபன் பதூதாவின் பயண நூல் = ரிக்ளா [பயணங்கள்].
  • இபன் பதூதாவின் கருத்துப்படி மிகவும் செல்வம் கொழிந்த நாடு = எகிப்து.
  • இந்தியாவின் சாதி குறித்தும் சதி (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும் கூறியுள்ள வெளிநாட்டு பயணி = இபன் பதூதா.
  • சுல்தான் முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியைப் பொட்டற்காடாக்கினார் என்று குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு பயணி = இபன் பதுதா.
  • தென்னிந்தியாவில் அதிகளவு வெளிநாட்டு பயணிகள் வருகை தந்த காலம் = விஜயநகர பேரரசு காலம்.
  • நிகோலோ கோண்டி எனும் இத்தாலியப் பயணி 1420இல் விஜயநகர் வந்தார்.
  • 1443இல் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து (மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம்) அப்துர் ரஸாக் விஜயநகருக்கு வந்தார்.
  • போர்த்துகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் 1522இல் விஜயநகருக்கு வருகை தந்தார்.

வரலாற்று ஆசிரியரின் கடமைகள்

  • “விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்” என்று கூறியவர் = ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகான்.

ஜிட்டல்

  • ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி  குன்றிமணிகளைக் கொண்டது ஆகும்.
  • 48 ஜிட்டல்கள் 1 டங்காவுக்குச் சமமாகும்.

தபகத் தஜூக்

  • தபகத் = அரேபியச் சொல் இதற்கு தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
  • தஜூக் = பாரசீகச் சொல் இதற்கு சுயசரிதை எனப்பொருள்.
  • தாரிக் / தாகுயூக் = அரேபியச் சொல் இதன் பொருள் வரலாறு என்பதாகும்.

Leave a Reply