6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

செம்புக் காலக்கட்டம் என்றால் என்ன

  • வடஇந்தியாவின் “ரிக் வேதகால வேதப் பண்பாடு”, இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய செம்புக்கால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
  • மக்கள் செம்பையும் (chalco), கல்லையும் (lithic) ஒரே காலக்கட்டத்தில் பயன்படுத்தியதால் இது “செம்புக் காலக்கட்டம்” (chalcolithic culture) என்று அழைக்கப்படுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

  • இந்தியாவின் செம்புக்கால பண்பாடும், முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாடும் = சமகாலத்தை சேர்ந்தவை.
    • ஹரப்பா பண்பாடு வீழ்ச்சிக்கு பிறகும், செம்புக்கால பண்பாடு தொடர்ந்தி நிலவியது.
  • வடஇந்தியாவின் பிந்தைய வேதகாலப் பண்பாடும், தென்னிந்தியாவின் இரும்புக் கால சமூகப் பண்பாடும் = சமகாலத்தை சேர்ந்தவை.
    • இரும்புக் கால பண்பாடு முடிந்த பிறகு, “பெருங்கற்காலப் பண்பாடு” துவங்கியது.
    • பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 600 முதல் கி.பி (பொ.ஆ) 100 வரை.
  • பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்ககாலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒத்துப்போகிறது.
  • பெருங்கற்காலத்தின் கூறாக கூறப்படும் மண்பாண்டங்கள் = கருப்பு மற்றும் சிவப்புநிற மண்பாண்டங்கள்.
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

பெருங்கற்காலம் என்றால் என்ன

  • பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் “Megalithic Age” என்று கூறுவர்.
  • Megalith என்பது எம்மொழிச் சொல் = கிரேக்க மொழிச் சொல்.
    • Mega என்பதன் பொருள் = பெரிய
    • Lith என்பதன் பொருள் = கல்
  • இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் பெருங்கற்கால / இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள் யாவை

  • ஆதிச்சநல்லூர் – தூத்துக்குடி மாவட்டம்
  • கீழடி – சிவகங்கை மாவட்டம்
  • பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம்
  • பையம்பள்ளி – வேலூர் மாவட்டம்
  • கொடுமணல் – ஈரோடு மாவட்டம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள்

  • ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது = தூத்துக்குடி மாவட்டம்.
  • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் = முதுமக்கள் தாழிகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள்.
  • வெண்கலத்தால் ஆன விலங்குகளின் உருவங்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளது.
  • வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தால் ஆன உருவங்கள் கிடைத்துள்ளன.
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

கீழடி அகழாய்வு

  • கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது = சிவகங்கை மாவட்டம்.
  • கீழடி = சங்ககாலத்தை சேர்ந்த பழமையான நகரம்.
  • கீழடியில் அகழாய்வு செய்த நிறுவனம் = மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை.
  • கீழடி அகழாய்வில் கிடைத்த சான்றுகள் = செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
  • கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் = தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல் படிகம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவை கிடைத்துள்ளன.
  • 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. அச்சோதனையில் இப்பொருள்கள் கி.மு (பொ.ஆ.மு) 200ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
  • ரோம் நாட்டை சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ள இடம் = கீழடி.

ரோம் நகரம்

  • தீபகற்க இந்தியாவில் இருந்து ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட பொருள் = எஃகு.
  • தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருந்தல் அகழாய்வு

  • பொருந்தல் எந்த மாவட்டத்தில் உள்ளது = திண்டுக்கல் மாவட்டம்.
  • பொருந்தல் அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்கள் = புதைகுழிப் பொருட்கள், கண்ணாடி மணிகள் (வெள்ளை, சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில்) இரும்பு வாள்கள், தமிழ் – பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள், ஓரளவு அரிதான கற்களான படிகக்கல், சிவப்பு நிற மணிக்கற்கள், சங்கு மற்றும் கண்ணாடி வளையல்கள்..
  • தமிழக மக்கள் நெல் விளைவித்தற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = பொருந்தல் (திண்டுக்கல்).
  • தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கான சான்றுகளாய் அமைவன = இரும்பினால் ஆன கதிர் அறுக்கும் அரிவாள், ஈட்டி, கொழுமுனைகள்.
  • தமிழக மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான ஆதாரமான “நெல் நிரம்பிய பானை” கிடைத்த இடம் = பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்).

பையம்பள்ளி அகழாய்வு

  • பையம்பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது = வேலூர் மாவட்டம்.
  • பையம்பள்ளி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் = இரும்பினால் செய்யப்பட பொருட்கள், கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள்.
  • இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்).
  • பையம்பள்ளி பண்பாட்டின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல் அகழாய்வு

  • கொடுமணல் எந்த மாவட்டத்தில் உள்ளது = ஈரோடு மாவட்டம்.
  • கொடுமணல் பற்றி கூறியுள்ள சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
  • கொடுமணல் அகழாய்வில் மிக அதிக அளவில் கிடைத்த பொருட்கள் = தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள்.
  • கொடுமணலில் புதைகுழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட “நினைவுக் கல்” (Menhir) பெருங்கற்காலத்தை சேர்ந்தது என கணிக்கப்பட்டுள்ளது.

முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன

  • முதுமக்கள் தாழிகள் என்பது இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான மண் பானைகள் ஆகும்.

கற்திட்டைகள் என்றால் என்ன

  • இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.
  • கற்திட்டைகள் ஆங்கிலத்தில் “Dolmens” எனப்படும்.
  • தமிழகத்தில் கற்திட்டைகள் காணப்படும் இடங்கள் = வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்), கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்), நரசிங்கம்பட்டி (மதுரை மாவட்டம்), பாண்டவன் திட்டு (தருமபுரி மாவட்டம்).
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

நினைவு கற்கள்

  • நினைவு கற்களை ஆங்கிலத்தில் “Menhir” என்று கூறுவர்.
  • மென்கிர் (Menhir) என்ற வார்த்தை பிரிட்டானிய மொழியில் இருந்து வந்தது.
  • “மென்” என்றால் “கல்” என்று பொருள். “கிர்” என்றால் “நீளமான” என்று பொருள் ஆகும்.
  • ஒரே கல்லினால் ஆன இத்தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும்.
  • தமிழகத்தில் நினைவு கற்கள் காணப்படும் இடங்கள் = சிங்கரிபாளையம் (திருப்பூர்), வெம்பூர் (தேனீ), நரசிங்கம்பட்டி (மதுரை), குமரிக்கல் பாளையம் (ஈரோடு), கொடுமணல் (ஈரோடு).
  • உப்பாற்றின் இருகரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததைக் காட்டுபவை = நினைவு கற்கள்.
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

நடுகற்கள் என்றால் என்ன

  • இறந்து போன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் நடுகல்லாகும் தனது கிராமத்தை கொடிய விலங்குகளிடம் இருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தை தழுவிய வீரர்களின் நினைவாகக் நடப்படுவது.
  • தமிழகத்தில் நடுகற்கள் காணப்படும் இடங்கள் = மானூர் (திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே), வெள்ளாளன் கோட்டை (தூத்துக்குடி), புலிமான் கோம்பை (திண்டுக்கல்).

 

Leave a Reply