7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- தென்னிந்தியாவில் பிறந்த கலை = திராவிடக் கட்டடக் கலை.
- கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவில் இல்லை.
தமிழ்நாட்டு கோவில் கட்டடக் கலையின் பரிணாம் வளர்ச்சி
- தமிழ்நாட்டு கோவில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை,
-
-
- பல்லவர் காலம் / முற்காலப் பாண்டியர்கள் காலம் (கி.பி. 600 – 850)
- முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 850 – 1100)
- பிற்காலச் சோழர்கள் காலம் / பிற்கால பாண்டியர்கள் காலம் (கி.பி. 1100 – 1350)
- விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600)
- நவீன காலம் (கி.பி. 1600 க்கு பின்னர்)
-
-
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தமிழ்நாட்டு கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள்
- பல்லவர் கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = பாறைகளில் சிற்பங்களை வடித்தல்.
- முற்காலச் சோழர்கள் கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = அழகு மிக்க விமானங்களை வடிவமைத்தல்.
- பிற்காலச் சோழர்கள் கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = பொலிவு மிக்க கோபுரங்களுக்கு பெயர் பெற்றது.
- விஜயநகர அரசு கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = மண்டபங்கள், இசைத்தூண்கள்.
- நவீன கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = பிரகாரங்களுக்கு முக்கியத்துவம்.
பல்லவர் காலம்
- யாருடைய காலத்தில் கோவில் கட்டடக் கலையானது “குடைவரைக் கோவில்கள்” (குகைக் கோவில்கள்) எனும் நிலையில் இருந்து “கட்டுமானக் கோவில்கள்” எனும் நிலைக்கு மாறியது = பல்லவர் காலம்.
- மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வெட்டி தனிப்பாறையாக உருவாக்கி, அப்பாறையை செதுக்கியும், குடைந்தும் குடைவரைக் கோவில்கள் உருவாக்கப்பட்டன.
குடைவரைக் கோவில் கட்டடக் கலையின் முன்னோடி
- குடைவரைக் கோவில் கட்டடக் கலையின் முன்னோடி = பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன்.
- முதலாம் மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் = மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்
- தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் = மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.
- தமிழக குடைவரைக்கோயில் கட்டடக் கலையின் முன்னோடி எனப்படும் முதலாம் மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் = மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.
குடைவரைக் கோவில்கள்
- குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள தூண்கள் கோவிலை தாங்கி நிற்கின்றன.
- கோவில் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் “துவார பாலகர்கள்” (வாயிற்காப்போர்) சிலைகள் இடம் பெற்றிருக்கும்.
- குடைவரைக் கோவில்கள் கட்டும் முறை எப்பொழுது மறைந்தது = கி.பி. 700.
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = ஏழு கோவில்கள்.
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவிலை கட்டியவர் = பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்).
- தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில் = மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்.
- தென்னிந்தியாவின் முதல் கட்டுமானக் கோவில் = பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (இராஜசிம்மன்) கட்டப்பட்ட “மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்”.
- எந்த ஆண்டு யுனஸ்கோ அமைப்பால் மகாபலிபுரம் கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது = 1984.
- 1984இல் கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லப்புரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும், கோவில்களும் மொத்தமாக “உலகப் பாரம்பரிய இடம்” என “யுனஸ்கோ” (UNESCO) அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரக் கோவில்கள்
- காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்).
- காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலை கட்டியவர் = பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன்.
பஞ்ச பாண்டவ இரதங்கள்
- மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் “ஒற்றைக் கல்லால்” செதுக்கப்பட்டவை ஆகும்.
- பஞ்ச பாண்டவர் ரதங்கள் = திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுனன் இரதம் மற்றும் நகுல சகாதேவ இரதம்.
- பஞ்ச பாண்டவர் இரதங்களில் பிரம்மாண்டமான கலைப் படைப்பு எது? = மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி.
- அருஜுனன் தவம் இருக்கும் பாறை ஏறத்தாழ 100 அடி நீளமும், 45 அடி உயரமும் கொண்டதாகும்.
முற்காலப் பாண்டியர்கள்
- பல்லவர்களின் சமகாலத்தவர்கள் = முற்காலப் பாண்டியர்கள்.
- பல்லவர்கள் குடைவரைக் கோவிலுக்கும் முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோவிலுக்குமான வித்தியாசம் = பாண்டியர்கள் தங்கள் குடைவரைக் கோவில்களின் கருவறையில் கடவுள்களின் சிலைகளை நிறுவினர்.
முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோவில்கள்
- முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோவில்கள் (குகைக் கோவில்கள்) உள்ள இடம் = மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி.
- முற்காலப் பாண்டியர்கள் அமைத்த குடைவரைக் கோவில்களில் “சிவன் மற்றும் நந்தி சிலைகள்”, தாய்ப் பாறையில் இருந்து செதுக்கப்பட்டவை ஆகும்.
- முற்காலப் பாண்டியர்கள் அமைத்த குடைவரைக் கோவில்களின் தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- முற்காலப் பாண்டியர்கள் கட்டடக் கலையின் சிறப்பு அம்சங்கள் = பாறை குடைவரைக் கோவில்களும், கட்டுமானக் கோவில்களும்.
கழுகுமலை வெட்டுவான் கோவில்
- “கழுகுமலை ஒற்றைக்கல் கோவில்” என்று அழைக்கபடும் கோவில் = கழுகுமலை வெட்டுவான் கோவில்.
- இக்கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. முழுமை பெறாத கோவில் இது.
- ஒரு பெரும் பாறையின் நான்கு புறங்களில் இருந்து செதுக்கி உருவாக்கப்பட்ட கோவில் கழுகுமலை ஒற்றைக்கால் வெட்டுவான் கோவில் ஆகும்.
பாண்டியர் கட்டுமானக் கோவில்கள்
- பாண்டியர் கட்டுமானக் கோவில்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு = மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.
- முற்காலப் பாண்டியர்கள் கால சிலைகள் தற்போது எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன = மதுரை திருமலை நாயக்கர் அருங்காட்சியகம்.
பாண்டியர் கால ஓவியங்கள்
- சித்தன்னவாசல் அமைந்துள்ள மாவட்டம் = புதுக்கோட்டை.
- திருமலைபுரம் அமைந்துள்ள மாவட்டம் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்.
- முற்காலப் பாண்டியர்கள் ஓவியங்கள் அமைந்துள்ள இடங்கள் = புதுகோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ஓவியங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள திருமலைபுரம் ஓவியங்கள்.
தாமரை தடாக ஓவியம், சித்தன்னவாசல்
- சித்தன்னவாசல் = சமணத் துறவிகள் வாழ்ந்த குகை.
- சித்தன்னவாசல் ஓவியங்கள் பல காலத்தால் அழிந்து விட்டன.
- தாமரை தடாக ஓவியம் = தற்போது இருப்பவற்றுள் மிகச் சிறந்த வர்ணங்களால் உருவாக்கப்பட்டது “தாமரை தடாக ஓவியம்” ஆகும்.
- சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த ஓவியங்களோடு ஒத்துப்போகின்றன = அஜந்தா ஓவியங்கள்.
முற்காலச் சோழர்கள் காலம்
- முற்காலச் சோழர்கள் காலம் = கி.பி. 850 – 1100.
- முற்காலச் சோழர்கள் கோவில் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்.
- முற்காலச் சோழர்கள் பின்பற்றிய கோவில் கட்டடக்கலை பாணி = செம்பியன் மகாதேவி பாணி.
- தேவகோஷ்டங்கள் = கோவில்களில் அதிகளவில் “தேவகோஷ்டங்கள்” (மாடக் குழிகள்) இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.
- செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட கோவில் = தஞ்சை திருப்புறம்பியம் கோவில் (சாட்சிநாதேஸ்வரர் கோயில்).
பிற்காலச் சோழர்கள் காலம்
- பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது,
- தஞ்சை பெரிய கோவில்
- கங்கைகொண்ட சோழபுரம் கோவில்
தஞ்சை பெரிய கோவில்
- தஞ்சை பெரிய கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது = பிரகதீஸ்வரர் ஆலயம்.
- தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு = கி.பி. 1009.
- தஞ்சை பெரிய கோவிலின் “விமானம்” (கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம்) எத்தனை அடி உயரம் உடையது = 216 அடி.
- உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட உயரமான சிகரங்களில் ஒன்று = தஞ்சை பெரிய கோவில் விமானம்.
- தஞ்சை பெரிய கோவிலின் சிகரம் (கோபுரம்) எவ்வாறு அழைக்கப்படுகிறது = தட்சிண மேரு.
- தஞ்சை பெரிய கோவிலில் நந்தி ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது ஆகும்.
- தஞ்சை பெரிய கோவில் நந்தியின் அளவு எவ்வளவு = 16 அடி நீளம், 13 அடி உயரம்.
- கோவிலின் கருவறை எத்தனை அடுக்குகளை கொண்டுள்ளது = இரண்டு அடுக்குகள்.
கங்கை கொண்ட சோழபுரம்
- ராஜராஜ சோழன் காலத்திற்கு பிறகு, சோழர்கள் வீழ்ச்சி அடைந்து பாண்டியர்கள் எழுச்சி பெரும் வரையிலான சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்தது = கங்கைகொண்ட சோழபுரம்.
- கங்கைகொண்ட சோழபுரம் கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது = பிரகதீஸ்வரர் கோவில்.
- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் = முதலாம் ராஜேந்திர சோழன் (ராஜராஜ சோழனின் மகன்).
- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் = 55 மீட்டர்.
- கோவிலின் கருவறை எத்தனை அடுக்குகளை கொண்டுள்ளது = இரண்டு அடுக்குகள்.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்
- பிற்கால சோழர்கள் கட்டிய கோவில் இது.
- தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது = கும்பகோணம் அருகே தாராசுரம்..
- தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் = சோழ அரசன் இரண்டாம் ராஜராஜ சோழன்.
- கோவிலின் “மகாமண்டபம்” அளவில் பெரியது ஆகும்.
- எந்த கோவில் தேர் போல் காட்சியமைக்கும் வடிவில் கட்டப்பட்டுள்ளது = தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்.
- நான்கு சக்கரங்கள் கோவில் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
பிற்காலப் பாண்டியர்கள்
- பிற்காலப் பாண்டியர்கள் அமைத்த குடைவரைக் கோவில் = பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்.
- பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் எங்கு உள்ளது = காரைக்குடி அருகே.
- பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது = 13 ஆம் நூற்றாண்டு.
- பிள்ளையார்பட்டி கோவிலின் குகைக் கல்வெட்டில் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது = “தேசிவிநாயகம்”.
- பிள்ளையார்பட்டி கோவிலின் சிறப்பு = இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலதுபுறமாகத் திரும்பியுள்ளது.
விஜயநகர காலம்
- விஜயநகர அரசர்களின் காலத்தில் புதிய வடிவிலான கட்டடமாக எவை கட்டப்பட்டது = மண்டபங்கள்.
- தூண்களுடன் கட்டப்பட்ட இம்மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டன.
- விஜயநகர அரசர்கள் கோவில்களில் அமைத்த தூண்களில் இடம்பெற்ற விலங்குகளின் உருவம் = குதிரை, சிங்கம்.
- விஜயநகர அரசர்கள் காலத்தில் மண்டபங்களுடன் கட்டப்பட்ட கோவில்கள் = காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்.
- மண்டபங்களில் மிகவும் புகழ்பெற்றது = மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
- விஜயநகர, நாயக்க கட்டடக் கலையின் முக்கிய கூறுகள் = மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத்தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள்.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் கோவில்களில் தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
- மிகப்பெரிய கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் யாருடைய ஆட்சிக் காலத்தில் துவங்கியது = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
- கோவிலின் நான்கு புறமும் கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் யாருடைய ஆட்சிக் காலத்தில் துவங்கியது = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் “பெரிய வடிவிலான புடைப்புச் சிற்பங்கள்” அமைக்கும் முறை அதிகரித்தது = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
- விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய வடிவிலான புடைப்புச் சிற்பங்கள் எங்கு உள்ளன = திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ண கோவில்.
- விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபங்கள்,
-
-
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உள்ள தெற்குவிழா மண்டபம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள புதுமுக மண்டபம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் 1000 கால் மண்டபம்.
- நாங்குநேரி வானமாமலையார் கோவில் இரதி மண்டபம்.
-
-
- யாருடைய ஆட்சிக் காலத்தில் கோவிலின் தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் அதிகளவு இடம்பெற்றன = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
- ஒற்றைக்கல்லால் ஆன மிகப்பெரிய யாளி, குதிரை சிலைகள் எப்பொழுது வடிவமைக்கப்பட்டன = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
- விஜயநகர அரசர்கள் கால கோவில் கட்டடக்கலையின் சிறப்பம்சம் = இசைத்தூண்கள்.
- விஜயநகர கால கோவில் கட்டடங்களில் பொதுவான அம்சம் = கோவில் மேற்பகுதியில் சிங்கம் அமர்ந்திருப்பது போல் அமைத்தல்.
- தஞ்சை பெரிய கோவிலுக்குள் உள்ளே உள்ள “சுப்பிரமணிய சுவாமி கோவிலை” கட்டியவர்கள் = நாயக்க மன்னர்கள்.
- விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் உள்ள கோவில்கள் = காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மதுரை கூடல் அழகர் கோவில், திருவில்லிபுத்தூர், திருவெள்ளரை, அழகர்கோவில், திருவண்ணமலை, திருவரங்கம் கோவில்கள்.
நவீன காலம்
- இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்கு பெரும் பங்களித்தவர்கள் = இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்.
- உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரம் உள்ள கோவில் = ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்.
- இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் உள்ள பிரகாரங்கள் = மூன்று.
- வெளிப்பிரகாரம் = 7 மீட்டர் உயரம் உடையது.
- கிழக்கு மேற்கு பிரகாரம் = 120 மீட்டர் நீளம் உடையது.
- வடக்கு தெற்கு பிரகாரம் = 195 மீட்டர் நீளம் உள்ளது.
- கோவிலில் 1200 க்கும் மேற்பட்ட தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
- இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் பிரகாரங்களில் மிகவும் பழமையானது = கோவிலின் உட்புறம் அமைந்துள்ள பிரகாரம்.
புத்தக வினாக்கள்
- தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது? = கடற்கரைக் கோவில்
- மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனஸ்கோவால் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்டது? = 1984.
- முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் எது? = விமானங்கள்.
- அழகிய நம்பி கோவில் எங்கு அமைந்துள்ளது? = திருக்குறுங்குடி.
- வைகுண்ட பெருமாள் கோவிலைக் கட்டியவர் யார்? = இரண்டாம் நந்திவர்மன்.
- பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________________ என்ற இடத்தில் உள்ளது? = மண்டகப்பட்டு
- முற்கால சோழர் கட்டடக்கலை _________________ பாணியைப் பின்பற்றியது? = செம்பியன் மகாதேவி.
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் _____________ ஆகும்? = புதுமண்டபம்
- பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க _____________ பெயர்பெற்றது? = கோபுரங்களுக்காக
- விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் _______________ ஆகும்? = மண்டபங்கள்.
- இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்? = சரி.
- முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்? = தவறு. முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவர்கள் ஆவர்.
- பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்? = சரி.
- பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது? = சரி.
- தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்? = தவறு.
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்