பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

  • தென்னிந்திய வரலாற்றில் பிரபலமான முடியாட்சி அரசுகள் = சோழர்கள், பாண்டியர்கள்.
  • தமிழகத்தை சேர்ந்த சோழர்களும், பாண்டியர்களும் தென்னிந்திய வரலாற்றில் மிக்க சிறப்பான இடத்தை பெற்றுள்ளனர்.

பிற்காலச் சோழர்கள்

  • பண்டைய சோழ அரசின் மையப்பகுதி = காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி.
  • பண்டைய சோழர்களின் தலைநகரம் = உறையூர் (இன்றைய திருச்சி).
  • பண்டைய சோழ வம்சத்தில், கரிகாலன் ஆட்சிக்கு பின்னர் சோழர்கள் தங்களின் இடத்தை இழந்தனர்.
  • ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தை மீண்டும் மீட்டெடுத்தவர் = விஜயலாயச் சோழன்.
  • பிற்காலச் சோழ வம்சத்தை நிறுவியர் = விஜயாலயச் சோழன்.
  • பிற்காலச் சோழர்களின் தலைநகரம் = தஞ்சாவூர்.
  • பிற்காலச் சோழர்களின் முதலாம் ராஜேந்திரனின் தலைநகரம் = கங்கை கொண்ட சோழபுரம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

முதலாம் ராஜராஜச் சோழன்

  • முதலாம் ராஜராஜச் சோழனின் ஆட்சிக்காலம் = கி.பி. 985 – 1014.
  • முதலாம் ராஜராஜச் சோழனின் தலைநகரம் = தஞ்சாவூர்.
  • பிற்கால சோழர்களில் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் = முதலாம் ராஜராஜச் சோழன்.
  • தஞ்சாவூரில் “ராஜராஜேஸ்வரம் கோவிலை” (பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் = முதலாம் ராஜராஜச் சோழன்.

முதலாம் ராஜேந்திரச் சோழன்

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • முதலாம் ராஜேந்திரச் சோழனின் ஆட்சிக்காலம் = கி.பி. 1014 – 1044.
  • முதலாம் ராஜராஜச் சோழனின் மகன் = முதலாம் ராஜேந்திரச் சோழன்.
  • தந்தையை விட அதிகளவில் வெற்றிகளை பெற்றவர்.
  • முதலாம் ராஜேந்திரச் சோழனின் முக்கியமான படையெடுப்பு = வடஇந்திய படையெடுப்பு.
  • “கங்கை கொண்டான்” (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று அழைக்கப்படுபவர் = முதலாம் ராஜேந்திரச் சோழன்.
  • வடஇந்தியப் போரின் வெற்றி நினைவாக “கங்கைகொண்ட சோழபுரம்” கோவிலை கட்டினார் முதலாம் ராஜேந்திரச் சோழன்.
  • மிகப்பெரிய கடற்ப்படையை வைத்திருந்த முதலாம் ராஜேந்திரச் சோழன், “ஸ்ரீவிஜயப் பேரரசை” (தெற்கு சுமத்ரா) கைப்பற்றினார்.

சோழப் பேரரசின் சரிவு

  • முதலாம் ராஜேந்திரச் சோழனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த மூன்று அரசர்களும் வலிமை அற்றவர்களாக இருந்தனர்.
  • மூன்றாவதாக பதவி ஏற்ற வீர ராஜேந்திரனின் மகன் “அதிராஜேந்திரன்” உள்நாட்டு கலகத்தில் கொல்லப்பட்டார்.
  • விஜயாலச் சோழன் வழிவந்த சோழ அரசர்களில் கடைசி அரசன் = அதிராஜேந்திரன்.

கீழைச் சாளுக்கியர்களுடன் உறவு

  • யாருடைய ஆட்சிக் காலத்தில் சோழர்களும், கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையே திருமண உறவு ஏற்பட்டது = முதலாம் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில்.
  • முதலாம் ராஜராஜனின் மகள் = குந்தவை.
  • குந்தவை சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார்.
  • குந்தவைக்கும், விமலாதித்தனுக்கும் பிறந்த இளவரசன் “ராஜராஜ நரேந்திரனுக்கு”, முதலாம் ராஜேந்திரச் சோழனின் மகளான “அம்மங்கா தேவியை” மணம் முடித்தனர்.
  • ராஜராஜ நரேந்திரனுக்கும், அம்மங்கா தேவிக்கும் பிறத்தவர் = முதலாம் குலோத்துங்கச் சோழன் எனப்படும் “ராஜேந்திர சாளுக்கியன்”.

முதலாம் குலோத்துங்கச் சோழன்

  • அதிராஜேந்திரன் உள்நாட்டு கலகத்தால் கொல்லப்பட்டதை அறிந்து, சாளுக்கிய இளவரசனான “ராஜேந்திர சாளுக்கியன்”, முதல் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் அரியணையை கைப்பற்றி ஆட்சி செய்தார்.
  • “சாளுக்கிய – சோழ வம்ச” ஆட்சியை துவக்கி வைத்தவர் = முதலாம் குலோத்துங்கச் சோழன் எனப்படும் “ராஜேந்திர சாளுக்கியன்”.
  • “காஞ்சிபுரத்தை”, தெலுங்கு சோழர்களிடம் இழந்தார் குலோத்துங்கச் சோழன்.

கடைசி சோழ அரசன்

  • கடைசி சோழ அரசன் = மூன்றாம் ராஜேந்திரச் சோழன்.
  • கடைசி சோழ அரசனை தோற்கடித்து, பாண்டியர் ஆட்சியை நிறுவிய மன்னன் = முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.
  • 1279இல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன், மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்து பாண்டியர் ஆட்சியை நிறுவினார்.

சோழர்கள் நிர்வாக முறை

  • அரசு நிர்வாகம் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • அரசரின் ஆணைகள் அதிகாரிகளால் பனையோலையிலும் கோவில் சுவர்களிலும் பொறிக்கப்பட்டன.
  • அரசரின் மூத்த மகன் எவ்வாறு அழைக்கப்பட்டான் = யுவராஜன்.
  • சோழ நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = பேரரசு -> மண்டலங்கள் ->  நாடு ->  கூற்றம் (கிராமங்களின் தொகுப்பு)  கிராமம்.
  • சோழ அரசு நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அழகு = கிராமம்.

சோழ உள்ளாட்சி நிர்வாக முறை

  • சோழ அரசில் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க நான்கு அமைப்புகள் இருந்தன = ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார்.
  • ஊரார் = விவசாய குடியிருப்பு உள்ள பகுதியில் இருந்த நிலஉடைமையாளர்கள்.
  • சபையோர் = பிராமண கிராமத்தை சேர்ந்த சபையோர் பொது நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர்.
  • நகரத்தார் = வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர்.
  • நாட்டார் = நாட்டார் எனும் அமைப்பு நாடோடு தொடர்புடைய பூசல்களையும் ஏனைய, சிக்கல்களையும் தீர்த்து வைத்தது.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • உத்திரமேரூர் கல்வெட்டுகள் எங்கு உள்ளன = காஞ்சிபுரம் மாவட்டம்.
  • உத்திரமேரூர் கிராமம் ஒரு _________ கிராமம்? = பிரம்மதேய கிராமம்.
  • பிரம்மதேயம் என்பது = சோழர்கள், பிராமணர்களுக்கு கொடையாக வழங்கிய நிலம் ஆகும்.
  • உத்திரமேரூர் கல்வெட்டு = சோழர்கள் ஆட்சியில் கிராம சபைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர் என்பதை தெளிவாக விளக்கும் கல்வெட்டு இதுவாகும்.

காணிக்கடன் என்றால் என்ன

  • சோழ அரசின் முக்கிய வருவாய் = நில வரி.
  • சோழ ஆட்சியில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? = காணிக்கடன்.
  • காணிக்கடன் என்றால் என்ன = சோழர்கள் ஆட்சியில் வசூலிக்கப்படும் நிலவரியை “காணிக்கடன்” என்பர்.
  • சோழர்கள் ஆட்சியில் மகசூலில் எத்தனை பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது = மூன்றில் ஒரு பகுதி.
  • “தொழில் வரி” சோழர்கள் ஆட்சியில் வசூலிக்கப்பட்டன.

நிலம் சார்ந்த உறவுகள்

  • நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாக்க கொண்ட சமூக அமைப்பு உடையவர்கள் = சோழர்கள்.
  • சோழர்கள் காலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட நிலங்கள் = அரசு அதிகாரிகள், பிராமணர்கள், கோவில்கள், மத நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்.

பள்ளிச்சந்தம் என்றால் என்ன

  • தேவதானக் கிராமங்கள் எனப்படுவது = கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்.
  • பள்ளிச்சந்தம் என்றால் என்ன = சோழர்கள் காலத்தில் சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வளங்கபப்ட்ட நிலங்கள் ஆகும்.

“உழுகுடி” என்போர் யார்

  • சோழர்கள் ஆட்சி காலத்தில் “வேளாண்வகை” என்னும் நிலங்களின் உரிமையாளர்களை “வேளாளர்” என்று அழைப்பர்.
  • வேளாளரில் ஒரு பிரிவினரான “உழுகுடி” என்போருக்கு நிலங்கள் கிடையாது. அவர்கள் நிலங்களின் உரிமையாளராக இருக்க முடியாது.
  • “உழுகுடி” என்போர் யார் = உழுகுடி என்போர், “பிரம்மதேய, வேளாண்வகை” ஆகிய நிலங்களில் வேளாண்மை பணிகளை செய்யும் மக்கள் ஆவர்.

மேல்வாரம் கீழ்வாரம்

  • மொத்த விளைச்சலில் வேளாண்வகை நில உரிமையாளர்கள் “மேல்வாரத்தைப்” (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர்.
  • உழுகுடி மக்கள் “கீழ்வாரத்தைப்” (விளைச்சலில் சிறு பகுதி) பெற்றனர்.

பணிசெய் மக்கள்

  • சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தவர்கள் = அடிமைகள், பணிசெய் மக்கள்.
  • சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சமூகத்தில் இடைநிலையில் இருந்தவர்கள் = போர் செய்வோர்கள், வணிகர்கள்.

நீர்ப்பாசனம்

  • கங்கை கொண்ட சோழபுரத்தில் “முதாலம் ராஜேந்திரச் சோழன்” 16 மெயில் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணையை கட்டினான் என்பது சோழர்களின் நீர்ப்பாசன மேலாண்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • வாய்க்கால் = தேவைப்படும் நீரை கொண்டுவருவது வாய்க்கால்.
  • வடிகால் = தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவது.
  • ஊர் வாய்க்கால் = பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வாய்க்கால்.
  • நாடு வாய்க்கால்கள் = நாடு எனும் நிர்வாகப் பிரிவின் மட்டத்தில் பயன்பட்ட வாய்க்கால்கள்.
  • நீர் விநியோகத்தில் “சுற்று முறை” நடைமுறையில் இருந்தது.
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

சோழர்கள் பின்பற்றிய மதம்

  • சோழர்கள் பின்பற்றிய மதம் = சைவ மதம்.
  • சிவபெருமானின் திருவிளையாடல்கள், சைவ அடியார்களால் பாடல்களாக இயற்றப்பட்டது.
  • “திருமுறைகள்” தொகுத்தவர் = நம்பியாண்டார் நம்பி.

சோழர் கால கோவில்கள்

  • சோழர்கள் கால கோவில்கள் = தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்.
  • சோழர்கள் காலக் கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்லாமல் பெருமளவு நிலங்களைச் சொந்தமாக கொண்டிருந்தன.
  • கோவில் பணியாளர்கள் = நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், இசைக்கருவிகளை மீட்டுவோர், அர்ச்சகர்கள்.

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

சோழர்களின் கல்விப் பணி

  • முதலாம் ராஜேந்திரச் சோழன் எவ்விடத்தில் வேதக் கல்லூரியை நிறுவினார் = எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டம்).
  • முதலாம் ராஜேந்திரச் சோழன் உருவாக்கிய வேதக் கல்லூரியில் எவ்வளவு மாணவர்கள் பயின்றனர் = 14 ஆசிரியர்களும், 340 மாணவர்களும்.
  • சோழர்கள் காலத்தில் எங்கெங்கு வேதக் கல்லூரிகள் திறக்கப்பட்டன = எண்ணாயிரம் (விழுப்புரம், முதலாம் ராஜேந்திரன் துவக்கியது), புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனம் என்னும் ஊரில் (1048 ஆம் ஆண்டு), செங்கல்பட்டு மாவட்டம் திருமுக்கூடல் (1067 ஆம் ஆண்டு).

சோழர்கள் கால வணிகம்

  • சோழர்கள் காலத்தில் இருந்த வணிக குழு அமைப்புகள் யாவை = அஞ்சு-வண்ணத்தார், மணி-கிராமத்தார்.
  • அஞ்சு-வண்ணத்தார் குழு என்றால் என்ன = அஞ்சு வண்ணத்தார் குழுவானது மேற்கு ஆசியர்கள், அரேபியர்கள், யூதர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் அடங்கிய வணிகக் குழுவாகும்.
  • மணி-கிராமத்தார் குழு என்றால் என்ன = உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டு தமிழ் மக்கள் ஆவர்.
  • காலப்போக்கில் இவ்விரு வணிகக் குழுக்களும் “ஐநூற்றுவர்” என்றும், “திசை – ஆயிரத்து ஐநூற்றுவர்” என்றும் பெயர் மாறின.
  • ஐநூற்றுவர், திசை-ஆயிரத்து ஐநூற்றுவர் அமைப்புகளின் தலைமையகம் எங்கு இருந்தது = கருநாடக மாநிலம் ஐஹோல்.

இறக்குமதி ஏற்றுமதி

  • சோழர்கள் காலத்தில் இறக்குமதி செய்யப்பட பொருள்கள் = யானைத் தந்தங்கள், பவளம், சங்குகள், ஒளிபுகும் – ஒளிபுகா கண்ணாடிகள், பாக்கு, ஏலம், பட்டு நூல்களால் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகள்.
  • சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட பொருட்கள் = சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருள்கள், ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு.

பிற்காலப் பாண்டியர்கள்

  • சங்க கால பாண்டியர்களின் தலைநகரம் = கொற்கை.
  • சங்க கால பாண்டியர்களின் துறைமுகம் = கொற்கை.
  • முத்து குளித்தலோடு தொடர்புடைய துறைமுக நகரம் = கொற்கை.
  • களப்பிரர் ஆட்சிக்கு பிறகு பாண்டியர்களின் ஆட்சிக்காலம் = கி.பி. 600 – 920.
  • கி.பி. ஆறாம் நூற்றாண்டில் களப்பிரர்களை வீழ்த்தி பாண்டியர்கள் ஆட்சியை நிறுவிய மன்னன் = கடுங்கோன்.

அரிகேசரி மாறவர்மன்

  • அரிகேசரி மாறவர்ம பாண்டியன் அரியணை ஏறிய ஆண்டு = கி.பி. 642.
  • பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகால பாண்டிய மன்னன் = அரிகேசரி மாறவர்ம பாண்டியன்.
  • சேரர், சோழர், பல்லவர்கள், சிங்களர்கள் ஆகியோரை அரிகேசரி மாறவர்ம பாண்டியன் வெற்றி கொண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

கூன் பாண்டியன்

  • சமணர்களை துன்புறுத்திய பாண்டிய மன்னன் = அரிகேசரி மாறவர்ம பாண்டியன்.
  • “கூன் பாண்டியன்” என அழைக்கப்படும் பாண்டிய மன்னன் = அரிகேசரி மாறவர்ம பாண்டியன்.
  • கூன் பாண்டியனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் = அப்பர் (திருஞானசம்பந்தர்).
  • சைவ சமயத்திற்கு மாறிய பிறகு, அரிகேசரி மாறவர்மன் சுமார் 8000 சமணர்களை கழுவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

வேள்விக்குடி செப்பேடுகள்

  • ஜடிலபராந்தக நெடுஞ்சடையான் (முதலாம் வரகுணன்) ஆட்சிக்காலம் = கி.பி. 756 – 815.
  • “வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி” என அழைக்கப்படுபவர் = ஜடிலபராந்தக நெடுஞ்சடையான் (முதலாம் வரகுணன்).

பாண்டிய அரசின் வீழ்ச்சி

  • முதலாம் பராந்தகச் சோழனிடம் கி.பி. 920 இல் தோல்வியடைந்த இரண்டாம் இராஜசிம்மப் பாண்டியன், நாட்டை விட்டு வெளியேறினான்.
  • இதன் மூலம் கடுங்கோன் உருவாக்கிய பாண்டிய அரசு வீழ்ச்சி பெற்றது.

பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி

  • இரண்டாம் பாண்டிய பேரரசு (பிற்காலப் பாண்டியர்களின்) ஆட்சிக்காலம் = கி.பி. 1190 – 1310.
  • சோழ அரசின் வீழ்ச்சிக்கு பிறகு பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் மட்டுமே எழுச்சி பெற்ற தமிழ் அரச வம்சமாக இருந்தனர்.
  • பிற்காலப் பாண்டியர்களின் தலைநகரம் = மதுரை.
  • பிற்காலப் பாண்டியர்களின் துறைமுகம் = காயல்.
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

மார்க்கோபோலோ

  • வெனிஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற பயணி = மார்க்கோபோலோ.
  • “காயல்” துறைமுகத்திற்கு எத்தனை முறை மார்க்கோபோலோ வருகை தந்துள்ளார் = இரண்டு முறை (1288, 1293).
  • “பாண்டிய அரசு செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என்று கூறிய வெளிநாட்டு பயணி = மார்க்கோபோலோ.
  • இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் பாண்டிய அரசு உற்பத்தி செய்கிறது” எனக் கூறியவர் = வெனிஸ் நாட்டு பயணி மார்க்கோபோலோ.
  • மார்க்கோபோலோ தன்னுடைய பயணக் குறிப்புகளில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும், அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.

சடையவர்மன் சுந்தரப்பாண்டியன்

  • இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் = சடையவர்மன் (ஜடாவர்மன்) சுந்தரப்பாண்டியன்.
  • பிற்காலப் பாண்டியர்களில் புகழ்பெற்ற அரசர் = சடையவர்மன் (ஜடாவர்மன்) சுந்தரப்பாண்டியன்.
  • சடையவர்ம சுந்தரப்பாண்டியனின் ஆட்சிக்காலம் = கி.பி. 1251 – 1268.
  • இவரின் ஆட்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது.
  • சடையவர்ம சுந்தரப்பாண்டியனுக்கு கப்பன் கட்டினான் சேர அரசன்.
  • எந்த இடத்தில் நடைபெற்ற போரில் மாளவ அரசர் வீரசோமேஸ்வரரை சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் தோற்கடித்தார் = கண்ணனூர்.

மாறவர்மன் குலசேகரன்

  • சடையவர்மன் சுந்தரப்பாண்டியனுக்கு பிறகு நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தவர் = மாறவர்மன் குலசேகரன்.
  • மாறவர்மன் குலசேகரனின் இரண்டு மகன்கள் = வீரபாண்டியன் சுந்தரப் பாண்டியன்.
  • உள்நாட்டில் ஏற்பட்ட கலகத்தின் காரணமாக சுந்தரப்பாண்டியன், டெல்லிக்கு சென்று அலாவுதீன் கில்ஜியிடம் தஞ்சம் அடைந்தார்.
  • இதுவே மாலிக்கபூர் படையெடுப்பிற்கான காரணமாக அமைந்தது.

மாலிக்கபூர்

  • மாலிக்கபூர் படையெடுப்பால் பாண்டிய அரசு வீழ்ச்சி அடைந்தது.
  • மதுரையில் டெல்லி சுல்தானுக்கு கட்டப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது.

பாண்டியர்கள் ஆட்சிமுறை

  • பாண்டியர் தலைநகரான மதுரை “கூடல்” என அழைக்கப்பட்டது.
  • பாண்டிய மன்னர்களை “கூடல்கோன், கூடல் காவலன்” என மக்கள் அழைத்தனர்.
  • ராணுவ ரீதியாக அண்டை நாடுகளை காட்டிலும் பாண்டிய அரசு வலிமையாக இருந்ததன் காரணம் = பாண்டியர்களின் குதிரைப்படை.
  • பாண்டிய அரசர்கள் “மனு சாஸ்திரம்” படி ஆட்சி புரிந்தனர்.
  • மங்கலம் என்றால் என்ன (சதுர்வேதிமங்கலம் என்றால் என்ன) = பாண்டிய அரசர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புகள்.
  • “பூமி புத்திரர்” என்பவர்கள் யாவர் = பூமி புத்திரர் அல்லது வேளாளர் என்பவர் பாண்டியர் ஆட்சியில் நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் ஆவர்.
  • “நாட்டு மக்கள்” என்போர் யார் = வரலாற்று ரீதியாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள்.
  • “சித்திர-மேழி-பெரிய நாட்டார்” என்றால் என்ன = நாட்டு மக்கள் இணைந்து உருவாக்கிய மன்றம்.

பாண்டியர் ஆட்சியில் அரசு அதிகாரிகள்

  • “உத்தர மந்திரி” = பாண்டிய அரசின் பிரதம மந்திரி.
  • “எழுத்து மண்டபம்” என்றால் என்ன = பாண்டிய அரசின் அரசுச் செயலகம்.
  • பாண்டியர் ஆட்சியில் மிகவும் மதிக்கபப்ட்ட அரசு அதிகாரிகள் = மாறன்-எயினன், சாத்தன்-கணபதி, ஏனாதி-சாத்தன், திற-திறன், மூர்த்தி-எயினன்.
  • பாண்டிய படைத்தளபதிகளின் பட்டப்பெயர்கள் = பள்ளி-வேலன், பராந்தகன்-பள்ளி-வேலன், மாறன்-ஆதித்தன், தென்னவன்-தமிழவேள்.

பாண்டியர்கள் நிர்வாகம்

  • பாண்டிய நாடு பல “மண்டலங்களாக” பிரிக்கப்பட்டிருந்தது.
  • பாண்டிய “மண்டலங்கள்” எவ்வாறு அழைக்கப்பட்டன = வளநாடுகள்.
  • வளநாடுகள் பல “நாடுகளாகவும், கூற்றங்களாகவும்” பிரிக்கப்பட்டிருந்தது.
  • பாண்டிய நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = பேரரசு மண்டலங்கள் (வளநாடுகள்)  நாடு  கூற்றம் (கிராமங்களின் தொகுப்பு)  கிராமம்.

பாண்டியர் கிராம நிர்வாகம்

  • பாண்டியர்கள் கிராம நிர்வாகம் பற்றி கூறும் கல்வெட்டு = திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்னும் ஊரில் உள்ள கி.பி. 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு, பாண்டியர்களின் கிராம நிர்வாகம் பற்றி கூறுகிறது.

பாண்டியர்கள் மதம்

  • பாண்டிய அரசர்கள் வேத நடைமுறையை பின்பற்றினர்.
  • பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டையும் சமமாகவே கருதினர்.
  • பாண்டியர் ஆட்சிக்காலத்தில் தீவிர மத மோதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பக்தி இயக்கத்தார் பிற சமயங்களை வாதத்தில் வென்றதாக பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன.
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

பாண்டியர் கால கோவில்கள்

  • இடைகால பாண்டிய அரசர்களும், பிற்கால பாண்டியர்களும் புதிதாக எவ்வித கோவிலையும் கட்டவில்லை.
  • ஏற்கனவே இருந்தா கோவில்களையே புனரமைதனர். கோபுரங்களை கட்டி பெரிதாக்கினர்.
  • இடைக்காலப் பாண்டியர்களின் கோவில் கட்டிடக்கலையின் சிறப்பு = பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக்கல் தூண்கள்.

பாண்டியர்கள் வணிகம்

  • பிற்காலப் பாண்டியர்களின் மிக முக்கிய துறைமுக நகரம் = காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
  • காயல் துறைமுகத்தில் எந்நாட்டு வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது = மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அரேபிய வணிகரின் நிறுவனம் செயல்பட்டது. இவர் பாண்டிய அரசர்களுக்கு குதிரைகளை எளிதாக கிடைக்கும் வகையில் அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்து தந்தார்.
  • பாண்டிய அரசர்கள்குதிரைகளுக்காக முதலீடு செய்தனர் எனக் கூறும் வெளிநாட்டு பயணிகள் = மார்க்கோபோலோ மற்றும் வாசப்.
  • குதிரை வணிகத்தில் ஈடுபட்டோரை எவ்வாறு அழைத்தனர் = குதிரைச் செட்டிகள்.
  • கடல்சார் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் = குதிரைச் செட்டிகள்.
  • வணிகப் பரிமாற்றங்கள் தங்க நாணயங்களாக நடைபெற்றது.
  • தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = காசு, கழஞ்சு, பொன்.

குதிரை வணிகம்

  • பிற்கால பாண்டியர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்த பதிவு செய்தவர் = வாசப்.
  • “10,000 க்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்தியத் துறைமுகங்களிலும் இறக்குமதியாயின. அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்த்துவந்த குதிரைகளாகும். ஒவ்வொரு குதிரையின் சராசரிவிலை சொக்கத் தங்கத்தினாலான 200 தினார்களாகும்” என குதிரை வணிகம் பற்றி வாசப் பதிவு செய்துள்ளார்.

 

  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
  • பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்

Leave a Reply