6TH HISTORY தென்னிந்திய அரசுகள்

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்

Table of Contents

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்

  • ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹர்ஷர் ஆட்சியில் சமகாலத்தில் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
  • மத்திய மற்றும் கிழக்கு தக்காணத்தின் பெரும்பகுதி பாதாமி (வாதாபி) சாளுக்கியர்கள் கீழ் இருந்தன.
  • இடைக்கால இந்தியாவின் பண்பு அம்சமாக இருந்தவை = பிராந்திய அதிகார மையங்களின் தோற்றம்.

பல்லவர்கள்

  • பல்லவர்களின் தலைநகரம் = காஞ்சிபுரம்.
  • பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது = தொண்டை மண்டலம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பல்லவர் ஆட்சிக்கான சான்றுகள்

கல்வெட்டு சான்றுகள்மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு
செப்பேடுகள்காசக்குடிச் செப்பேடுகள்
இலக்கியங்கள்மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக் கலம்பகம்
வெளிநாட்டவர் குறிப்புகள்யுவான் சுவாங்கின் குறிப்புகள்

பல்லவ அரசர்கள்

  • பல்லவ அரசர்கள் யாருக்கு கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் = சாதவாகனர்கள்.
  • இரண்டாம் சிம்மவர்மனின் மகன் = சிம்மவிஷ்ணு.
  • களப்பிரர்களை அழித்து பலலவ வம்சத்தை துவக்கி வைத்தவர் = சிம்மவிஷ்ணு.
  • பல்லவ வம்சத்தை துவக்கியவர் = சிம்மவிஷ்ணு.
  • சேரர்கள், பாண்டியர்களை வென்ற பலலவ மன்னன் = சிம்மவிஷ்ணு.
  • பல்லவ மன்ன சிம்மவிஷ்ணுவின் மகன் = முதலாம் மகேந்திரவர்மன்.
  • முதலாம் மகேந்திரவர்மனின் மகன் = முதலாம் நரசிம்மவர்மன்.
  • பல்லவ அரசர்களின் மற்ற முக்கிய அரசர்கள் = ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன்.
  • கடைசி பல்லவ மன்னன் = அபராஜிதன்.

மகேந்திரவர்மன்

  • மகேந்திரவர்மன் ஆட்சிக்காலம் = கி.பி. 600 – 630 வரை.
  • மகேந்திரவர்மன் பின்பற்றிய சமயம் = சமண சமயம்.
  • மகேந்திரவர்மனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் = அப்பர் (திருநாவுக்கரசர்).
  • திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்த பல்லவ மன்னன் = மகேந்திரவர்மன்.
  • மகேந்திரவர்மன் அறிமுகம் செய்த பாணி எவ்வாறு அழைக்கப்படுகிறது = மகேந்திரபாணி.
  • மகேந்திரவர்மன் எழுதிய நாடக நூல் = மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி).
  • மத்தவிலாசப்பிரகசனம் என்பதன் பொருள் = குடிகாரர்களின் மகிழ்ச்சி.
  • மத்தவிலாசப்பிரகசனம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருத மொழியில்.
  • பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் நோக்கில் மகேந்திரவர்மன் எழுதிய நூல் = மத்தவிலாசப்பிரகசனம்.
  • மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் யாருடன் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது = வாதாபியை ஆண்ட மேலை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியுடன்.
  • மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் = சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி.
  • மகேந்திரவர்மனை தோற்கடித்து எவ்விடத்தை இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார் = வெங்கி.

முதலாம் நரசிம்மவர்மன்

  • முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம் = கி.பி. 630 – 668 வரை.
  • தனது தந்தையின் தோல்விக்கு பழிவாங்கும் வகையில் இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்து கொன்றார் முதலாம் நரசிம்மவர்மன்.
  • இரண்டாம் புலிகேசியின் தலைநகரம் வாதாபியை தீக்கரை ஆக்கினார் முதலாம் நரசிம்மவர்மன்.
  • முதலாம் நரசிம்மவர்மன், வாதாபியை அழித்து “வாதாபி கொண்டான்” என்ற பட்டதை சூட்டிக் கொண்டார்.

பரஞ்சோதி முனிவர் குறிப்பு

  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி = பரஞ்சோதி முனிவர்.
  • பரஞ்சோதி முனிவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் = சிறுத்தொண்டர்.
  • 63 நாயன்மார்களில் ஒருவர் = பரஞ்சோதி முனிவர் எனப்படும் சிறுத்தொண்டர்.
  • பரஞ்சோதி முனிவர் பலலவ படைக்கு தலைமை தாங்கி சென்று, இரண்டாம் புலிகேசிக்கு எதிரான போரில் வெற்றியை தேடித் தந்தார். வாதாபி நகரையும் அழித்தார்.
  • வாதாபி வெற்றிக்கு பிறகு மனமாற்றம் அடைந்து சிவபக்தராக மாறினார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் = பெரியபுராணம்.

இரண்டாம் நரசிம்மவர்மன்

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம் = கி.பி. 695 – 722 வரை.
  • “ராஜசிம்மன்” என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிமம்வர்மன்.
  • சீன நாட்டிற்கு தூதுக் குழுவினை அனுப்பிய பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிமம்வர்மன்.
  • காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = இரண்டாம் நரசிம்மன் எனப்படும் ராஜசிம்மன்.

சிம்மவிஷ்ணு சிறப்பு பெயர்

  • பல்லவ மன்னன் சிமம்விஷ்ணுவின் சிறப்பு பெயர் = அவனிசிம்மர்.

முதலாம் மகேந்திரவர்மன் சிறப்பு பெயர்கள்

  • சங்கீரணஜதி
  • மத்தவிலாசன்
  • குணபாரன்
  • சித்திரகாரப் புலி
  • விசித்திர சித்தன்

முதலாம் நரசிம்மவர்மன் சிறப்பு பெயர்கள்

  • மாமல்லன்
  • வாதாபி கொண்டான்.

பல்லவர் கால கட்டிடக்கலை

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • பல்லவர் கால கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் = ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாமல்லபுரம் ஒற்றைக்கல் கடற்கரைக் கோவில்கள், வராகர் குகை.
  • எந்த ஆண்டு மாமல்லபுரம் ஒற்றைக்கல் கோவில், யுனஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது = 1984.

பல்லவர்கால கட்டிடக்கலை வகைகள்

  • பலல்வர் கட்டிடக் கலையை மூன்று வகையாக பிரிப்பர். அவை,
    1. பாறைக் குடைவரைக் கோவில்கள் = மகேந்திரவர்மன் பாணி.
    2. ஒற்றைக்கால் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் = மாமல்லன் பாணி (அல்லது) முதலாம் மகேந்திரவர்மன் பாணி.
    3. கட்டுமானக் கோவில்கள் = ராஜசிம்மன் பாணி (இரண்டாம் நரசிம்மவர்மன் பாணி), நந்திவர்மன் பாணி.

மகேந்திரவர்மன் பாணி

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கபப்ட்டுள்ள சின்னங்கள் உள்ள இடங்கள் = மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள்

மாமல்லன் பாணி

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் உருவாக்கியவர் = மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்).
  • ஐந்து ரதங்களும் ஐந்து வகையான கோவில் கட்டிட பாணியை உணர்த்துகின்றன.
  • ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன.
  • எனவே தான் அவை, “ஒற்றைக்கால் ரதங்கள்” என அழைக்கப்படுகின்றன.
  • மாமல்லன் பாணி கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டுகள் = மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம்.
  • மாமல்லன் பாணி கட்டிடக்கலையில் மிகச் சிறந்தது = மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
  • மகாபலிபுரம் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது = சிவபெருமானின் தலையில் இருந்து அருவியெனக் கொட்டும் கங்கை நதி, அர்ஜுனன் தபசு.

உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியது

  • உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியது = மாமல்லபுரத்தில் உள்ள பெருந்தவ வடிவச் சிற்பம்.
  • மாமல்லபுரத்தில் உள்ள பெருந்தவ வடிவச் சிற்ப வேலைபாடு, உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியது ஆகும்.

ராஜசிம்மன் பாணி

  • ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிம்மவர்மன்.
  • பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களை கட்டிய பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மன்.
  • கட்டுமானக் கோவில் முறையை தமிழகத்தில் கொண்டுவந்தவர் = ராஜசிம்மன்.
  • கட்டுமானக கோவில் கலை பாணிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.
  • காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்).
  • மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்ட கோவில் = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.
  • காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது = ராஜசிம்மேஸ்வரம்.
  • “ராஜசிம்மேஸ்வரம்” என அழைக்கப்படும் கோவில் = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.

நந்திவர்மன் பாணி

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • பிற்கால பல்லவ கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு = நந்திவர்மன் பாணி கோவில்கள்.
  • நந்திவர்மன் பாணி கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவில்.
  • காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலை கட்டியவர் = இரண்டாம் நந்திவர்மன்.

பல்லவர் கால சமூகமும் பண்பாடும்

  • பல்லவ அரசர்கள் பௌத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர்.
  • ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் பக்தி மார்க்கத்தை வலுப்படுத்த செயல்பட்டனர்.
  • பல்லவர் கால சைவ அடியார்கள் = அப்பர், மாணிக்கவாசகர்.
  • பலல்வர் கால வைணவ அடியார்கள் = ஆண்டாள், நம்மாழ்வார்.
  • பக்தி மார்க்கத்தை போதிக்க ஏதுவாக அடியார்கள், தமிழ் மொழியை பயன்படுத்தினர்.
  • சமயக் கூட்டங்களில் பெண்களுக்கு பங்கேற்றனர்.
  • தமிழ் பக்தி வழிபாடு இயக்கம் வளர்ச்சி பெறத் துவங்கியதின் பயனாக தமிழகத்தில் இருந்து சமண, பௌத்த இயக்கங்கள் வீழ்ச்சிபெறத் துவங்கின.

பல்லவர் கால கல்வி இலக்கியங்கள்

  • பல்லவர் காலத்தில் புகழ் பெற்று விளங்கியது = காஞ்சிபுரம் கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்).
  • காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தவர் = வாத்ஸ்யாயர்.
  • “வாத்ஸ்யாயர்” எழுதிய நூல் = நியாயபாஷ்யா.
  • நியாயபாஷ்யா என்னும் நூலின் ஆசிரியர் = வாத்ஸ்யாயர்.
  • தட்சிண சித்திரம் எனப்படுவது
      • முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்ட தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடு நூல் ஆகும்.
      • தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான “தட்சிண சித்திரம்” என்பதை தொகுத்தவர் = முதலாம் மகேந்திரவர்மன்.
  • முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்த சமஸ்கிருத அறிஞர் = தண்டி.
  • “தசகுமார சரிதம்” எனும் நூலின் ஆசிரியர் = தண்டி.
  • சிம்மவிஷ்ணு காலத்தில் இருந்த சமஸ்கிருத அறிஞர் = பாராவி.
  • பாராவி எழுதிய நூல் = கிர்தார்ஜூனியம்.
  • கிர்தார்ஜூனியம் என்பது = ஒரு வடமொழி காப்பியம் ஆகும்.
  • கிர்தார்ஜூனியம் என்ற வடமொழி காப்பியத்தின் ஆசிரியர் = பாராவி.
  • பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் சமய இலக்கியங்கள் = நாயன்மார்களின் தேவாரமும், ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்.
  • இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட புலவர் = பெருந்தேவனார்.
  • பெருந்தேவனார், மகாபாரதத்தை “பாரதவெண்பா” என்ற பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்தார்.

பல்லவர்காலக் கலை

  • பல்லவர் கால இசை குறித்த கல்வெட்டுகள் எங்கு உள்ளன = குடுமியான்மலை, திருமயம்.
  • இசையில் பல்லவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிக்காட்டும் கல்வெட்டுகள் = குடுமியான்மலை, திருமயம் கல்வெட்டுகள்.
  • முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் = ருத்ராச்சாரியார்.
  • எந்த ஆட்சிக்காலத்தில் சிற்பங்கள் நடனமாடும் வகையில் வடிக்கப்பட்டன = பலல்வர் காலத்தில்.

சாளுக்கியர்கள்

  • சாளுக்கியர் தென்னிந்தியாவின் மத்தியிலும் மேற்கிலும் மராட்டியத்தை உள்ளடக்கிய பகுதியை ஆண்டனர்.
  • சாளுக்கியர்களின் தலைநகரம் = வாதாபி (பதாமி).
  • நெருங்கிய தொடர்புடைய மூன்று வெவேறு சாளுக்கிய அரசுகள் இருந்தான். அவை,
      1. வாதாபிச் சாளுக்கியர்கள்
      2. வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்).
      3. கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்).

சாளுக்கிய ஆட்சிக்கான சான்றுகள்

கல்வெட்டுச் சான்றுகள்மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோயில் கல்வெட்டு, பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு
அயலவர் குறிப்புகள்யுவான் சுவாங்கின் குறிப்புகள்

வாதாபி சாளுக்கியர்கள்

  • வாதாபிச் சாளுக்கிய வம்சத்தை துவக்கியவர் = முதலாம் புலிகேசி.
  • பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறுநில மன்னராக இருந்த முதலாம் புலிகேசி, வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றினார்.
  • முதலாம் புலிகேசி வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 543.
  • முதலாம் புலிகேசியின் மகன் = முதலாம் கீர்த்திவர்மன்.
  • முதலாம் கீர்திவர்மனின் ஆட்சிக்காலம் = கி.பி. 566 – 597 வரை.
  • வாதாபி சாளுக்கியர்களின் தலைச்சிறந்த மன்னன் = இரண்டாம் புலிகேசி.
  • இரண்டாம் புலிக்கேசியின் ஆட்சிக்காலம் = கி.பி. 610 – 642 வரை.
  • பாதாமி சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசர் = இரண்டாம் புலிகேசி.
  • இரண்டாம் புலிகேசியின் அவைக்கு தூதுக்குழுவை அனுப்பி வைத்த அரசர் = பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ.
  • ஹர்ஷரை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் = இரண்டாம் புலிகேசி.
  • இரண்டாம் புலிகேசி, ஹர்ஷரை நர்மதை ஆற்றன் கரையில் தோற்கடித்தார்.
  • ஹர்ஷருக்கும், இரண்டாம் புலிகேசிக்கும் இடையே எல்லையாக வரையறை செய்யப்பட்ட பகுதி = நர்மதை நதி.
  • இரண்டாம் புலிகேசி, வெங்கி அரசை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 624.
  • இரண்டாம் புலிகேசி, வெங்கி அரசை யாருக்கு வழங்கினார் = தனது சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு.
  • கீழைச் சாளுக்கிய வம்சத்தை துவக்கி வைத்தவர் = விஷ்ணுவர்தன்.
  • முதல் கீழைச் சாளுக்கிய அரசன் = விஷ்ணுவர்தன்.
  • கி.பி. 641 – 647 காலப்பகுதியில் பலல்வர்கள் தக்காணத்தை சூறையாடி “வாதாபியை” கைப்பற்றினர்.
  • பல்லவர்களிடம் இருந்து சாளுக்கியர்கள் “வாதாபியை” எப்பொழுது மீட்டனர் = கி.பி. 655.
  • காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கிய மன்னர்கள் = முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன்.
  • இரண்டாம் கீர்திவர்மனை தோற்கடித்த ராஷ்டிரகூட அரசர் = தந்திதுர்க்கர்.
  • ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் = தந்திதுர்க்கர்.

கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள்

  • யாருடைய வழித்தோன்றல் கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் = வாதாபி சாளுக்கியர்கள்.
  • கல்யாணி சாளுக்கியர்களின் தலைநகரம் = கல்யாணி (தற்போதைய பசவ கல்யாண்).
  • மாளவ அரசர் பராமரை தோற்கடித்து கல்யாணியை கைப்பற்றிய சாளுக்கிய மன்னன் = இரண்டாம் தைலப்பர்.
  • மன்யகோட்டாவில் இருந்து தலைநகரை “கல்யாணிக்கு” மாற்றியவர் = முதலாம் சோமேஸ்வரர்.
  • வளம் நிறைந்த வெங்கி பகுதியை கைப்பற்ற ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போரிட்ட பேரரசுகள் = தஞ்சை சோழர்களும், மேலைச் சாளுக்கியர்கள்.
  • எந்த கல்யாணி சாளுக்கிய மன்னன் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதி சாளுக்கியர்களின் கீழ் கொண்டுவரப்பட்டது = ஆறாம் விக்கிரமாதித்யன்.

சாளுக்கியர்களின் கலை கட்டிடக்கலை

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • சாளுக்கியர்கள் சைவம், வைணவம் இரண்டையும் போற்றி வளர்த்தனர்.
  • யாருடைய ஆட்சிக்காலத்தில் “வெசாரா பாணி” கோயில் விமானங்கள் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது = சாளுக்கியர்கள் ஆட்சிக்காலத்தில்.
  • சாளுக்கியர்கள் காலத்தில் எந்த கட்டுமான முறை வளர்ச்சி பெற்றது = வெசாரா பாணி கோவில் விமானங்கள் கட்டும் முறை.
  • சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களை கட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள் = சாளுக்கியர்கள்.
  • சாளுக்கியர்கள் கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.
  • சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்கள் உள்ள இடம் = ஐஹோல், வாதாபி, பட்டடக்கல்.
  • கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் = வாதாபி விஷ்ணு கோவில், ஐஹோல் விஷ்ணு கோவில் மற்றும் பட்டடக்கல் விருபாக்ஷா கோவில்.
  • வாதாபி விஷ்ணு கோவிலை கட்டிய மன்னன் = சாளுக்கிய மன்னன் மங்களேசன்.
  • ஐஹோல் கல்வெட்டை நிர்மானித்தவர் = இரண்டாம் விக்கிரமாதித்தன்.
  • வாதாபி குகைக் கோவில்களில் புகழ்பெற்றது = சேஷநாகர் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணு சிற்பம்.
  • கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் உருவாக்கிய கோவில்கள் = குறுவட்டி மல்லிகார்ஜுன கோவில், லக்கண்டி காசி விஸ்வநாதர் கோவில், பகலி என்னுமிடத்தில் உள்ள கள்ளேஸ்வரர் கோவில், இட்டகியில் உள்ள மகாதேவர் கோவில்.

சாளுக்கிய ஓவியங்கள்

  • சாளுக்கியர்கள் பின்பற்றிய ஓவிய முறை = வாகடகர் பாணி.
  • பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

அய்கோல் கல்வெட்டு

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • அய்கோல் கல்வெட்டு உள்ள இடம் = கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மேகுதி கோவிலில் உள்ளது.
  • அய்கோல் கல்வெட்டை உருவாக்கியவர் = இரண்டாம் புலிகேசியின் அவைகளப் புலவர் ரவிகீர்த்தி.
  • அய்கோல் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருத மொழி.
  • ஹர்ஷவர்த்தனரை இரண்டாம் புலிகேசி தோற்கடித்ததை குறிப்பிடும் கல்வெட்டு = அய்கோல் கல்வெட்டு.

பட்டடக்கல் யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • பட்டடக்கல் = யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் ஆகும்.
  • பட்டடக்கல் = கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
  • பட்டடக்கல்லில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை = 10.
  • வடஇந்திய “நகரா” பாணியில் அமைந்துள்ள கோவில்கள் = நான்கு.
  • தென்னிந்திய “திராவிட” பாணியில் அமைந்துள்ள கோவில்கள் = ஆறு.
  • திராவிட பாணியில் அமைந்துள்ள கோவில்கள் = பட்டடக்கல் விருபாக்ஷா கோவில், பட்டடக்கல் சங்கமேஷ்வரா கோவில்.
  • நாகரா பாணியில் அமைந்துள்ள கோவில் = பாப்பநாதர் கோவில்.
  • பட்டடக்கல் விருபாக்ஷா ஆலயம், எந்தக் கோவிலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது = காஞ்சி கைலாசநாதர் கோவில்.
  • காஞ்சி கைலாசநாதர் கோவிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்ட கோவில் = பட்டடக்கல் விருபாக்ஷா கோவில்.

வெசாரா பாணி கட்டிடக்கலை

  • வெசாரா பாணி கட்டிடக்கலை என்பது தென்னிந்தியாவின் “திராவிட” பாணி மற்றும் வடஇந்தியாவின் “நாகரா” பாணி முறையின் கலப்பு ஆகும்.

ராஷ்டிரகூடர்கள்

  • ராஷ்டிரகூடர்கள் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை தக்காணப் பகுதியில் ஆட்சி செய்தனர்.
  • ராஷ்டிரக்கூடர்களின் தாய்மொழி = கன்னடம்.
  • ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் = தந்திதுர்க்கர்.
  • தந்திதுர்க்கரை அடுத்தி ஆட்சி போருபெற்றவர் = முதாலம் கிருஷ்ணா
  • ராஷ்டிரக்கூட அரசை ஒருங்கிணைத்து விரிவாக்கியவர் = முதலாம் கிருஷ்ணர்.
  • உலகப்புகழ் பெற்ற எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஷ்டிரக்கூட அரசர் முதலாம் கிருஷ்ணர்.

ராஷ்டிரக்கூட அரசர்கள்

  • ராஸ்டிரக்கூட அரசர்களில் தலைசிறந்தவர் = அமோகவர்ஷன்.
  • அமோகவர்ஷன் எங்கு புதிய தலைநகரை உருவாக்கினார் = மன்யக்கோட்டா.
  • ராஸ்டிரக்கூடர்களின் துறைமுகம் = புரோச்.
  • அமோகவர்ஷர் ஆட்சிக்காலம் = கி.பி. 814 – 878 வரை.
  • அமோகவர்ஷரை சமண சமயத்திற்கு மாற்றியவர் = சமணத் துறவி ஜினசேனர்.
  • அமோகவர்ஷரின் மகன் = இரண்டாம் கிருஷ்ணர்.
  • இரண்டாம் கிருஷ்ணரை தோற்கடித்த சோழ மன்னன் = பராந்தகச் சோழன்.
  • பராந்தகச் சோழன், ராஸ்டிரக்கூட அரசர் இரண்டாம் கிருஷ்ணரை எங்கு தோற்கடித்தார் = வல்லம் (தற்போதைய வேலூர் மாவட்டம் திருவல்லம்).
  • கி.பி. 916 இல் பராந்தகச் சோழனால், இரண்டாம் கிருஷ்ணர் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
  • ராஸ்டிரக்கூட வம்சத்தின் திறமைவாய்ந்த கடைசி அரசர் = மூன்றாம் கிருஷ்ணர்.
  • மூன்றாம் கிருஷ்ணர் எந்தப் போரில் சோழர்களை தோற்கடித்தார் = தக்கோலம் (வேலூர் மாவட்டம்).
  • தக்கோலம் போரில் சோழர்களை தோற்கடித ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
  • இராமேஸ்வரத்தில் “கிருஷ்ணேஸ்வரர்” கோவிலை கட்டியவர் = மூன்றாம் கிருஷ்ணர்.
  • ராஸ்டிரக்கூட வம்சத்தின் கடைசி சிறந்த அரசர் = மூன்றாம் கோவிந்தர்.

ராஸ்டிரக்கூடர்களின் இலக்கிய பங்களிப்பு

  • ராஸ்டிரக்கூடர்களின் தாய்மொழி = கன்னடம்.
  • கன்னட மொழியின் முதல் கவிதை நூல் = கவிராஜமார்க்கம்.
  • கவிராஜமார்க்கம் நூலின் ஆசிரியர் = அமோகவர்ஷர்.
  • கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்கள் எனப்படுவோர் = ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
  • ஆதிகவி பம்பாவின் நூல்கள் = ஆதிபுராணம், விக்கிரமார்ஜூன விஜயம்.
  • முதல் சமணத் தீர்த்தங்கரான “ரிஷபதேவரின்” வாழ்க்கையை விவரிக்கும் நூல் = ஆதிபுராணம்.
  • விக்கிரமார்ஜூன விஜயம், மாகாபாரதத்தின் மீள் தருகை ஆகும். இந்நூலில் பம்பா, தன்னை ஆதரித்த சாளுக்கிய “அரிகேசரியை”, அர்ஜுனன் கதாப்பாத்திரத்தில் பொருத்தி எழுதியுள்ளார்.

எல்லோரா கைலாசநாதர் கோவில்

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • எல்லோரா கைலாசநாதர் கோவில் உள்ள இடம் = மகாராஸ்டிரா மாநிலம் ஔரங்காபாத் அருகில்.
  • எல்லோராவில் உள்ள குடைவரைக் கோவில்களின் எண்ணிக்கை = முப்பது.
  • முப்பது குடைவரைக் கோவில்களில் ஒன்று = எல்லோரா கைலாசநாதர் கோவில்.
  • எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஷ்டிரக்கூட அரசர் முதலாம் கிருஷ்ணர்.
  • எல்லோரா கைலாசநாதர் கோவிலின் பரப்பளவு = 60000 சதுர அடிகள்.
  • எல்லோரா கைலாசநாதர் கோவில் கோபுர விமானத்தின் உயரம் = 90 அடி.
  • மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலில் கட்டபப்ட்ட கோவில் = எல்லோரா கைலாசநாதர் கோவில்.
  • எல்லோரா கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

எலிபெண்டா தீவு

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • எலிபெண்டா தீவின் உண்மையான பெயர் = ஸ்ரீபுரி.
  • இத்தீவின் உள்ளூர் மக்களால் எலிபெண்டா தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது = காரபுரி.
  • எலிபெண்டா தீவு எங்குள்ளது = மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ள தீவு.
  • எலிபெண்டா தீவு என பெயரிட்டவர்கள் = போர்த்துகீசியர்கள்.
  • எலிபெண்டா தீவில் உள்ள தெய்வம் = சிவன்.
  • எலிபெண்டா குகையில் “திரிமூர்த்தி” (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலை உள்ளது.
  • கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலை கண்ணை கவரும் வகையில் உள்ளது.

பட்டடக்கல்

6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
  • பட்டடக்கல் “சமண நாராயணர் கோவிலை” கட்டியவர்கள் = ராஸ்டிரக்கூடர்கள்.
  • பட்டடக்கல் “காசி விஸ்வேஸ்வரர் கோவிலை” கட்டியவர்கள் = ராஸ்டிரக்கூடர்கள்.

கூடுதல் தகவல்கள்

  • கீழைச் சாளுக்கியர்கள் எனப்படுபவர்கள் = வெங்கிச் சாளுக்கியர்கள்.
  • மேலைச் சாளுக்கியர்கள் எனப்படுபவர்கள் = கல்யாணிச் சாளுக்கியர்கள்.
  • காஞ்சி கைலாசநாதர் கோவிலை கடியவர் = பல்லவ மன்னன் ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்).
  • எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஷ்டிரக்கூட அரசர் முதலாம் கிருஷ்ணர்.

 

 

Leave a Reply