தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

  • தென்னிந்தியாவில் பிறந்த கலை = திராவிடக் கட்டடக் கலை.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவில் இல்லை.
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தமிழ்நாட்டு கோவில் கட்டடக் கலையின் பரிணாம் வளர்ச்சி

  • தமிழ்நாட்டு கோவில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை,
        1. பல்லவர் காலம் / முற்காலப் பாண்டியர்கள் காலம் (கி.பி. 600 – 850)
        2. முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 850 – 1100)
        3. பிற்காலச் சோழர்கள் காலம் / பிற்கால பாண்டியர்கள் காலம் (கி.பி. 1100 – 1350)
        4. விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600)
        5. நவீன காலம் (கி.பி. 1600 க்கு பின்னர்)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

தமிழ்நாட்டு கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள்

  • பல்லவர் கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = பாறைகளில் சிற்பங்களை வடித்தல்.
  • முற்காலச் சோழர்கள் கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = அழகு மிக்க விமானங்களை வடிவமைத்தல்.
  • பிற்காலச் சோழர்கள் கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = பொலிவு மிக்க கோபுரங்களுக்கு பெயர் பெற்றது.
  • விஜயநகர அரசு கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = மண்டபங்கள், இசைத்தூண்கள்.
  • நவீன கால கோவில் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள் = பிரகாரங்களுக்கு முக்கியத்துவம்.

பல்லவர் காலம்

  • யாருடைய காலத்தில் கோவில் கட்டடக் கலையானது “குடைவரைக் கோவில்கள்” (குகைக் கோவில்கள்) எனும் நிலையில் இருந்து “கட்டுமானக் கோவில்கள்” எனும் நிலைக்கு மாறியது = பல்லவர் காலம்.
  • மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வெட்டி தனிப்பாறையாக உருவாக்கி, அப்பாறையை செதுக்கியும், குடைந்தும் குடைவரைக் கோவில்கள் உருவாக்கப்பட்டன.

குடைவரைக் கோவில் கட்டடக் கலையின் முன்னோடி

  • குடைவரைக் கோவில் கட்டடக் கலையின் முன்னோடி = பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன்.
  • முதலாம் மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் = மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்

  • தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் = மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.
  • தமிழக குடைவரைக்கோயில் கட்டடக் கலையின் முன்னோடி எனப்படும் முதலாம் மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் = மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.

குடைவரைக் கோவில்கள்

  • குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள தூண்கள் கோவிலை தாங்கி நிற்கின்றன.
  • கோவில் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் “துவார பாலகர்கள்” (வாயிற்காப்போர்) சிலைகள் இடம் பெற்றிருக்கும்.
  • குடைவரைக் கோவில்கள் கட்டும் முறை எப்பொழுது மறைந்தது = கி.பி. 700.
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

  • மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = ஏழு கோவில்கள்.
  • மகாபலிபுரம் கடற்கரைக் கோவிலை கட்டியவர் = பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்).
  • தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில் = மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்.
  • தென்னிந்தியாவின் முதல் கட்டுமானக் கோவில் = பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (இராஜசிம்மன்) கட்டப்பட்ட “மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்”.
  • எந்த ஆண்டு யுனஸ்கோ அமைப்பால் மகாபலிபுரம் கோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது = 1984.
  • 1984இல் கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லப்புரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும், கோவில்களும் மொத்தமாக “உலகப் பாரம்பரிய இடம்” என “யுனஸ்கோ” (UNESCO) அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரக் கோவில்கள்

  • காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்).
  • காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலை கட்டியவர் = பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன்.
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

பஞ்ச பாண்டவ இரதங்கள்

  • மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் “ஒற்றைக் கல்லால்” செதுக்கப்பட்டவை ஆகும்.
  • பஞ்ச பாண்டவர் ரதங்கள் = திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுனன் இரதம் மற்றும் நகுல சகாதேவ இரதம்.
  • பஞ்ச பாண்டவர் இரதங்களில் பிரம்மாண்டமான கலைப் படைப்பு எது? = மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி.
  • அருஜுனன் தவம் இருக்கும் பாறை ஏறத்தாழ 100 அடி நீளமும், 45 அடி உயரமும் கொண்டதாகும்.

முற்காலப் பாண்டியர்கள்

  • பல்லவர்களின் சமகாலத்தவர்கள் = முற்காலப் பாண்டியர்கள்.
  • பல்லவர்கள் குடைவரைக் கோவிலுக்கும் முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோவிலுக்குமான வித்தியாசம் = பாண்டியர்கள் தங்கள் குடைவரைக் கோவில்களின் கருவறையில் கடவுள்களின் சிலைகளை நிறுவினர்.

முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோவில்கள்

  • முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோவில்கள் (குகைக் கோவில்கள்) உள்ள இடம் = மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி.
  • முற்காலப் பாண்டியர்கள் அமைத்த குடைவரைக் கோவில்களில் “சிவன் மற்றும் நந்தி சிலைகள்”, தாய்ப் பாறையில் இருந்து செதுக்கப்பட்டவை ஆகும்.
  • முற்காலப் பாண்டியர்கள் அமைத்த குடைவரைக் கோவில்களின் தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • முற்காலப் பாண்டியர்கள் கட்டடக் கலையின் சிறப்பு அம்சங்கள் = பாறை குடைவரைக் கோவில்களும், கட்டுமானக் கோவில்களும்.

கழுகுமலை வெட்டுவான் கோவில்

  • “கழுகுமலை ஒற்றைக்கல் கோவில்” என்று அழைக்கபடும் கோவில் = கழுகுமலை வெட்டுவான் கோவில்.
  • இக்கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. முழுமை பெறாத கோவில் இது.
  • ஒரு பெரும் பாறையின் நான்கு புறங்களில் இருந்து செதுக்கி உருவாக்கப்பட்ட கோவில் கழுகுமலை ஒற்றைக்கால் வெட்டுவான் கோவில் ஆகும்.

பாண்டியர் கட்டுமானக் கோவில்கள்

  • பாண்டியர் கட்டுமானக் கோவில்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு = மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.
  • முற்காலப் பாண்டியர்கள் கால சிலைகள் தற்போது எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன = மதுரை திருமலை நாயக்கர் அருங்காட்சியகம்.

பாண்டியர் கால ஓவியங்கள்

  • சித்தன்னவாசல் அமைந்துள்ள மாவட்டம் = புதுக்கோட்டை.
  • திருமலைபுரம் அமைந்துள்ள மாவட்டம் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்.
  • முற்காலப் பாண்டியர்கள் ஓவியங்கள் அமைந்துள்ள இடங்கள் = புதுகோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ஓவியங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள திருமலைபுரம் ஓவியங்கள்.

தாமரை தடாக ஓவியம், சித்தன்னவாசல்

  • சித்தன்னவாசல் = சமணத் துறவிகள் வாழ்ந்த குகை.
  • சித்தன்னவாசல் ஓவியங்கள் பல காலத்தால் அழிந்து விட்டன.
  • தாமரை தடாக ஓவியம் = தற்போது இருப்பவற்றுள் மிகச் சிறந்த வர்ணங்களால் உருவாக்கப்பட்டது “தாமரை தடாக ஓவியம்” ஆகும்.
  • சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த ஓவியங்களோடு ஒத்துப்போகின்றன = அஜந்தா ஓவியங்கள்.

முற்காலச் சோழர்கள் காலம்

  • முற்காலச் சோழர்கள் காலம் = கி.பி. 850 – 1100.
  • முற்காலச் சோழர்கள் கோவில் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்.
  • முற்காலச் சோழர்கள் பின்பற்றிய கோவில் கட்டடக்கலை பாணி = செம்பியன் மகாதேவி பாணி.
  • தேவகோஷ்டங்கள் = கோவில்களில் அதிகளவில் “தேவகோஷ்டங்கள்” (மாடக் குழிகள்) இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.
  • செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட கோவில் = தஞ்சை திருப்புறம்பியம் கோவில் (சாட்சிநாதேஸ்வரர் கோயில்).

பிற்காலச் சோழர்கள் காலம்

  • பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது,
    • தஞ்சை பெரிய கோவில்
    • கங்கைகொண்ட சோழபுரம் கோவில்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தஞ்சை பெரிய கோவில்

  • தஞ்சை பெரிய கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது = பிரகதீஸ்வரர் ஆலயம்.
  • தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு = கி.பி. 1009.
  • தஞ்சை பெரிய கோவிலின் “விமானம்” (கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம்) எத்தனை அடி உயரம் உடையது = 216 அடி.
  • உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட உயரமான சிகரங்களில் ஒன்று = தஞ்சை பெரிய கோவில் விமானம்.
  • தஞ்சை பெரிய கோவிலின் சிகரம் (கோபுரம்) எவ்வாறு அழைக்கப்படுகிறது = தட்சிண மேரு.
  • தஞ்சை பெரிய கோவிலில் நந்தி ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது ஆகும்.
  • தஞ்சை பெரிய கோவில் நந்தியின் அளவு எவ்வளவு = 16 அடி நீளம், 13 அடி உயரம்.
  • கோவிலின் கருவறை எத்தனை அடுக்குகளை கொண்டுள்ளது = இரண்டு அடுக்குகள்.

கங்கை கொண்ட சோழபுரம்

  • ராஜராஜ சோழன் காலத்திற்கு பிறகு, சோழர்கள் வீழ்ச்சி அடைந்து பாண்டியர்கள் எழுச்சி பெரும் வரையிலான சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்தது = கங்கைகொண்ட சோழபுரம்.
  • கங்கைகொண்ட சோழபுரம் கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது = பிரகதீஸ்வரர் கோவில்.
  • கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் = முதலாம் ராஜேந்திர சோழன் (ராஜராஜ சோழனின் மகன்).
  • கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் = 55 மீட்டர்.
  • கோவிலின் கருவறை எத்தனை அடுக்குகளை கொண்டுள்ளது = இரண்டு அடுக்குகள்.
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்

  • பிற்கால சோழர்கள் கட்டிய கோவில் இது.
  • தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது = கும்பகோணம் அருகே தாராசுரம்..
  • தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் = சோழ அரசன் இரண்டாம் ராஜராஜ சோழன்.
  • கோவிலின் “மகாமண்டபம்” அளவில் பெரியது ஆகும்.
  • எந்த கோவில் தேர் போல் காட்சியமைக்கும் வடிவில் கட்டப்பட்டுள்ளது = தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்.
  • நான்கு சக்கரங்கள் கோவில் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

பிற்காலப் பாண்டியர்கள்

  • பிற்காலப் பாண்டியர்கள் அமைத்த குடைவரைக் கோவில் = பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்.
  • பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் எங்கு உள்ளது = காரைக்குடி அருகே.
  • பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது = 13 ஆம் நூற்றாண்டு.
  • பிள்ளையார்பட்டி கோவிலின் குகைக் கல்வெட்டில் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது = “தேசிவிநாயகம்”.
  • பிள்ளையார்பட்டி கோவிலின் சிறப்பு = இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலதுபுறமாகத் திரும்பியுள்ளது.

விஜயநகர காலம்

  • விஜயநகர அரசர்களின் காலத்தில் புதிய வடிவிலான கட்டடமாக எவை கட்டப்பட்டது = மண்டபங்கள்.
  • தூண்களுடன் கட்டப்பட்ட இம்மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டன.
  • விஜயநகர அரசர்கள் கோவில்களில் அமைத்த தூண்களில் இடம்பெற்ற விலங்குகளின் உருவம் = குதிரை, சிங்கம்.
  • விஜயநகர அரசர்கள் காலத்தில் மண்டபங்களுடன் கட்டப்பட்ட கோவில்கள் = காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்.
  • மண்டபங்களில் மிகவும் புகழ்பெற்றது = மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
  • விஜயநகர, நாயக்க கட்டடக் கலையின் முக்கிய கூறுகள் = மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத்தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் கோவில்களில் தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
  • மிகப்பெரிய கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் யாருடைய ஆட்சிக் காலத்தில் துவங்கியது = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
  • கோவிலின் நான்கு புறமும் கோபுரங்கள் அமைக்கும் வழக்கம் யாருடைய ஆட்சிக் காலத்தில் துவங்கியது = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் “பெரிய வடிவிலான புடைப்புச் சிற்பங்கள்” அமைக்கும் முறை அதிகரித்தது = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
  • விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய வடிவிலான புடைப்புச் சிற்பங்கள் எங்கு உள்ளன = திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ண கோவில்.
  • விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபங்கள்,
        1. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உள்ள தெற்குவிழா மண்டபம்.
        2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள புதுமுக மண்டபம்.
        3. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் 1000 கால் மண்டபம்.
        4. நாங்குநேரி வானமாமலையார் கோவில் இரதி மண்டபம்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் கோவிலின் தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் அதிகளவு இடம்பெற்றன = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
  • ஒற்றைக்கல்லால் ஆன மிகப்பெரிய யாளி, குதிரை சிலைகள் எப்பொழுது வடிவமைக்கப்பட்டன = விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்.
  • விஜயநகர அரசர்கள் கால கோவில் கட்டடக்கலையின் சிறப்பம்சம் = இசைத்தூண்கள்.
  • விஜயநகர கால கோவில் கட்டடங்களில் பொதுவான அம்சம் = கோவில் மேற்பகுதியில் சிங்கம் அமர்ந்திருப்பது போல் அமைத்தல்.
  • தஞ்சை பெரிய கோவிலுக்குள் உள்ளே உள்ள “சுப்பிரமணிய சுவாமி கோவிலை” கட்டியவர்கள் = நாயக்க மன்னர்கள்.
  • விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் உள்ள கோவில்கள் = காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மதுரை கூடல் அழகர் கோவில், திருவில்லிபுத்தூர், திருவெள்ளரை, அழகர்கோவில், திருவண்ணமலை, திருவரங்கம் கோவில்கள்.

நவீன காலம்

  • இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்கு பெரும் பங்களித்தவர்கள் = இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்.
  • உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரம் உள்ள கோவில் = ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்.
  • இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் உள்ள பிரகாரங்கள் = மூன்று.
  • வெளிப்பிரகாரம் = 7 மீட்டர் உயரம் உடையது.
  • கிழக்கு மேற்கு பிரகாரம் = 120 மீட்டர் நீளம் உடையது.
  • வடக்கு தெற்கு பிரகாரம் = 195 மீட்டர் நீளம் உள்ளது.
  • கோவிலில் 1200 க்கும் மேற்பட்ட தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
  • இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் பிரகாரங்களில் மிகவும் பழமையானது = கோவிலின் உட்புறம் அமைந்துள்ள பிரகாரம்.

புத்தக வினாக்கள்

  1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது? = கடற்கரைக் கோவில்
  2. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனஸ்கோவால் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்டது? = 1984.
  3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் எது? = விமானங்கள்.
  4. அழகிய நம்பி கோவில் எங்கு அமைந்துள்ளது? = திருக்குறுங்குடி.
  5. வைகுண்ட பெருமாள் கோவிலைக் கட்டியவர் யார்? = இரண்டாம் நந்திவர்மன்.
  6. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________________ என்ற இடத்தில் உள்ளது? = மண்டகப்பட்டு
  7. முற்கால சோழர் கட்டடக்கலை _________________ பாணியைப் பின்பற்றியது? = செம்பியன் மகாதேவி.
  8. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் _____________ ஆகும்? = புதுமண்டபம்
  9. பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க _____________ பெயர்பெற்றது? = கோபுரங்களுக்காக
  10. விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் _______________ ஆகும்? = மண்டபங்கள்.
  11. இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்? = சரி.
  12. முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்? = தவறு. முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவர்கள் ஆவர்.
  13. பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்? = சரி.
  14. பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது? = சரி.
  15. தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்? = தவறு.

 

  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *