OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS
OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சர்வதேச முதியோர் தினம்
- சர்வதேச முதியோர் தினம் (INTERNATIONAL DAY OF OLDER PERSONS), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
- டிஜிட்டல் உலகில் வயது முதியோரின் கண்ணியத்தை காக்கவும், மரியாதை அளிக்கவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது
- 2021 ஆம் ஆண்டிற்கான கரு (THEME) = DIGITAL EQUITY FOR ALL AGES
சர்வதேச காபி தினம்
- சர்வதேச காபி தினம் (INTERNATIONAL COFFEE DAY), உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
- சர்வதேச காபி அமைப்பு (ICO – INTERNATIONAL COFFEE ORGANISATION), பல்வேறு காபி சங்கங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள காபி பிரியர்களால் இது கொண்டாடப்படுகிறது.
- 2021 ஆம் ஆண்டிற்கான கரு (THEME) = COFFEE’S NEXT GENERATION
உலக சைவ தினம்
- உலகா சைவ தினம் (WORLD VEGETARIAAN DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதாம் 1 ஆம் தேதி உளாகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- சைவத்தின் நன்மைகளை எடுத்துரைப்பதற்காக இத்தினம் காடைபிடிக்கப்படுகிறது. சைவ வாழ்க்கை முறையின் ஆரோக்கியம் மற்றும் மனிதாபிமான நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சைவ தினம் கொண்டாடப்படுகிறது.
- ஆக்டோபர் மாதம் 1 முதல் 7 ஆம் தேதி வரை,, “உலக சைவ வாரம்” (WORLD VEGETARIANN WEEK) கடைபிடிக்கப்படுகிறது.
பிரதமர் தலைமையில் 38 வது பிரகதி கூட்டம்
- பிரதமர் தலைமையில் 38 வது பிரகதி (PRAGATI) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது
- பிரகதி என்பது ஐசிடி அடிப்படையிலான பல-மாதிரி தளத்திற்கான சுருக்கமாகும். இதன் விரிவாக்கம், “செயலில் உள்ள நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துதல்” (PRAGATI = PRO ACTIVE GOVERNANCE AND TIMELY IMPLEMENTATION) ஆகும்
- இது பிஎம்ஓ எனப்படும் பிரதமர் அழ;அலுவலகம், மத்திய அரசு செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் அடங்கிய மூன்று அடுக்கு அமைப்பு ஆகும்.
- இதன் நோக்கங்கள் = குறைகளை நிவர்த்தி செய்தல் (GRIEVANCE REDRESSAL), திட்டங்களை செயல்படுத்தல் (PROGRAMME IMPLEMENTATION), திட்ட கண்காணிப்பு (PROJECT MONITORING) ஆகும்.
- இந்த தளம் சாமானியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டங்களை கண்காணித்து மதிப்பாய்வும் செய்கிறது.
அமேசான் நிறுவனத்தின் “உலகளாவிய கணினி அறிவியல் கல்வித் திட்டம்”
- உலகப் புகழ் பெற்ற மின்-வணிக நிறுவனமான “அமேசான்” தனது “அமேசான் பியுச்சர் இஞ்சினியர்” (AMAZON FUTURE ENGINEER) என்ற திட்டத்தை “உலகளாவிய கணினி அறிவியல் கல்வித் திட்டம்” (GLOBAL COMPUTER SCIENCE EDUCATION PROGRAMME) மூலம் இந்தியாவில் துவங்க உள்ளது
- குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தரமான கணினி அறிவியல் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை அணுக இத்திட்டம் உதவும் என தெரிவிக்கப் பட்டுள்ளது
இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை முதல் முறையாக விளையாடிய இந்திய மகளிர் அணி
- செப்டம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்டனில் உள்ள கராரா ஓவலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இளஞ்சிவப்பு பந்து மூலம் நடத்தப்பட்டது (THE FIRST PINK-BALL DAY AND NIGHT TEST MATCH BETWEEN INDIA AND AUSTRALIAN WOMEN TEAM AT THE CARRARA OVAL IN QUEENSLANDON, AUSTRALIA)
- மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதல் முறையாக இப்பந்து மூலம் விளையாடுகின்றன.
தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகையின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
- தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகையின் (NSDL – NATIONAL SECURITIES DEPOSITORIES LTD) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குனராகவும் “பத்மஜா சுந்துரு” நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- இதற்கு முன்னர் இப்பதவியில் நாகேஸ்வர ராவ் என்பவர் இருந்து வந்தார்
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா
- அக்டோபர் 1, 2021 அன்று ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் (ASIAN TABLE TENNIS CHAMPIONSHIPS) இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
- அரையிறுதியில் தென் கொரியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, வங்காளப் பதக்கத்திற்கான போட்டியில் ஈரானை வீழ்த்தியது.
மேகாலயா மாநிலத்தின் தலைமை செயலராக பதவி ஏற்ற, முதல் மேகாலயப் பெண்மணி
- மேகாலயா மாநிலத்தின் தலைமை செயலராக பதவி ஏற்ற, முதல் மேகாலயப் பெண்மணி என்ற சிறப்பை, அம்மாநிலத்தின் ரெபேக்கா வனேசா சுச்சியாங் பெற்றுள்ளார்
- மேகாலயாவின் தலைமைச் செயலாளர் எம்.எஸ். ராவ் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆர்.வி.சுச்சியாங்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
7-வது ஸ்வாச் சர்வேக்ஷன்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஸ்வச் சர்வேக்ஷனின் (SWACHH SURVEKSHAN) 7-வது பதிப்பினை அறிமுகம் செய்தது
- ஸ்வாச் சர்வேக்ஷன் உலகின் மிகப்பெரிய நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பு ஆகும், இது ஸ்வச் பாரத் மிஷன்-அர்பன் (SBM-U – SWACHH BHARAT MISSION-URBAN) ஆல் நடத்தப்படுகிறது.
ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்
- 2021 ஆம் ஆண்டிற்கான ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் (HURUN INDIA RICH LIST 2021) வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 10-வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில உள்ளார்
- 2-வது இடத்தை அதானி நிறுவன தலைவர், கவுத்தம் அதானி பிடித்துள்ளார். 3-வது இடத்தை எச்.சி.எல் நிறுவனர் சிவநாடார் பிடித்துள்ளார்.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 29,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 28,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 27,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 26,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 23,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 22,2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 21,2021