OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் வெள்ளி வென்ற முதன் இந்திய வீராங்கனை

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

  • நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளின் பெண்கள் பிரிவில், இந்தியாவின் “அன்ஷு மாலிக்” வெள்ளிப் பதக்கம் வென்றார்
  • இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் கலந்துக் கொண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் (Indian wrestler Anshu Malik created history as she became the first Indian women finalist at the World Championship, and also the first female player from India to claim a silver medal)

உலக அஞ்சல் தினம்

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

  • உலக அஞ்சல் தினம் (WORLD POST DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
  • உலக அஞ்சல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 அன்று உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் (UPU – UNIVERSAL POSTAL UNION) நிறுவப்பட்டதையும், மக்களின் அன்றாட வாழ்வில் கடிதங்களுடன் புரட்சிகர தகவல்தொடர்பு முறையை உருவாக்கியதையும் குறிக்கும்.
  • இந்த ஆண்டிற்கான கரு = INNOVATE TO RECOVER
  • இந்தியாவில் தேசிய அஞ்சல் தினம் (INDIAN NATIONAL POST DAY) = அக்டோபர் 10

உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம்

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

  • ஒவ்வொரு ஆண்டும், உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம் (WMBD – WORLD MIGRATORY BIRD DAY) 2006 இல் தொடங்கியதிலிருந்து ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது.
  • முதலில் மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையும், அக்டோபரின் இரண்டாவது சனிக்கிழமையும் நடத்தப்படுகிறது.
  • இந்த வருடத்திற்கான கரு = SING, FLY, SOAR – LIKE A BIRD!

பிரதேச இராணுவ தினம்

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

  • தனது72-வது நிறுவன தினத்தை 2021 அக்டோபர் 9 அன்று பிரதேச ராணுவம் கொண்டாடியது (TERRITORIAL ARMY DAY IS CELEBRATED ON 09 OCTOBER BY INDIAN ARMY)
  • 1949அக்டோபர் 9 அன்று முதல் கவர்னர் ஜெனரலான திரு சி ராஜகோபாலாச் சாரியாவால் முறையாக நிறுவப்பட்டதில் இருந்து, பிரதேச ராணுவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

MyPortApp மொபைல் செயலி

  • துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த் சோனோவால், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்காகவும், துறைமுகம் தொடர்பான தகவல்களை எளிதில் அணுகுவதற்காகவும் MyPortApp என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார்
  • இந்த ஆப் இந்தியாவில் துறைமுகம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்கும் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்கும்.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் கல்வி ஆராய்ச்சி தொடர்பான ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் குரோசியா ஆகிய நாடுகள் இடையே பாரம்பரிய மருத்துவ முறைகளில் கல்வி ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்ப்பு தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது (AGREEMENT FOR ACADEMIC RESEARCH AND COMPETENCY BUILDING IN TRADITIONAL MEDICINE SYSTEMS)
  • குரோசியாவில், ஆயுஸ் அமைச்சகம் சார்பில் “முதல் சர்வதேச யோகா மற்றும் ஆயுர்வேத மாநாட்டை” (FIRST INTERNATIONAL CONFERENCE ON YOGA AND AYURVEDA IN CROATIA) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

2021 அமைதிக்கான நோபல் பரிசு

OCTOBER 09 2021 CURRENT AFFAIRS

  • 2021 அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ்-அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • “சுதந்திரம் மற்றும் நீடித்த அமைதிக்கான முன்நிபந்தனையான கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு இருவருக்கும் மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் தீர்வு

  • இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் தீர்வு முறையை தெலுங்கானா மாநில தேர்தல் கமிசன் உருவாக்கி உள்ளது (TELANGANA DEVELOPS INDIA’S FIRST SMARTPHONE-BASED E-VOTING SOLUTION)
  • இது உலகின் முதல் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் தீர்வாகும். கம்மம் மாவட்டத்தில் ஒரு மாதிரி தேர்தலை நடத்தி, இதனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்

 

 

Leave a Reply