OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

                                OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

  • 2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது
  • அமெரிக்காவை சேர்ந்த “டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படபூட்டியன்” (NOBEL PRIZE IN MEDICINE 2021 JOINTLY AWARDED TO DAVID JULIUS, ARDEM PATAPOUTIAN) ஆகிய 2 விஞ்ஞானிகளுக்கு, அவர்களின் கண்டுபிடிப்பான, “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” வழங்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

  • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஸ்ம்ரிதி மந்தனா, சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
  • ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பை ஸ்ம்ரிதி மந்தனா பெற்றுள்ளார்
  • இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ரன்கள் எடுத்தார்.

முதல் டுரான்ட் கோப்பையை வென்ற கோவா அணி

  • கொல்கத்தாவில் விவேகானந்தா யுபா பாரதி கிரிரங்கனில் நடைபெற்ற டுரான்ட் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில், கோவா எப்.சி. அணி, 1 – 0 என்ற கோல் கணக்கில் முகமதியன் ஸ்போர்ட்டிங் அணியை வீழ்த்தி தனது முதல் டுரான்ட் கோப்பையை வென்றது
  • 2021 ஆம் ஆண்டின் டுரான்ட் கோப்பையானது, 130-வது பதிப்பாகும். ஆசியாவிலேயே மிகவும் பழமையான கால்பந்து தொடராகும்.

வேதியியலுக்கான நோபல் பரிசு 2021

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

  • 2021 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்காண நோபல் பரிசு, பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் C. மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
  • பசுமை வேதியியல் மற்றும் மருந்து ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், “சமச்சீரற்ற ஆர்கனோ காடலிசிஸின் வளர்ச்சி” தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக இவார்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது

இந்திய – ஜப்பான் கடற்பயிற்சி JIMEX-21

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

  • 5-வது JIMEX-21 கடற்படை போர் பயிற்சி நிகழ்ச்சி, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படை இடையே அரபிக் கடலில் துவங்கியது
  • இந்திய கடற்படை மற்றும் ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை இந்தியா-ஜப்பான் கடல்சார் இருதரப்பு பயிற்சியின் ஐந்தாவது பதிப்பைக் குறிக்க உள்ளன, இது பிரபலமாக JIMEX-21 என அழைக்கப்படுகிறது.
  • இப்பயிற்சி 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் பட்டம்

  • முதல் மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் பட்டதை, உலக சதுரங்க சாம்பியனான ரஷ்யாவின் மாக்னஸ் கார்ல்சன் வென்றார்
  • உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் முதல் மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தை வென்று, டோக்கன் மற்றும் கோப்பையையும் இறுதிப் போட்டியில் 1,00,000 டாலர்களையும் பெற்றார்.

மகாபாகு பிரம்மபுத்ரா நதி பாரம்பரிய மையம்

  • அஸ்ஸாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் 150 ஆண்டுகள் பழமையான பங்களாவில் மகாபாகு பிரம்மபுத்திரா நதி பாரம்பரிய மையத்தை துணைக் குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்
  • இந்த பங்களா 17 ஆம் நூற்றாண்டு அஹோம் ஆட்சியாளர்களின் இராணுவ அலுவலகமாக இருந்தது.
  • பார்புகான் என்பது அஹோம் மன்னர் பிரதாப் சிம்ஹா அல்லது சுசெங்காவால் (1603-1641) உருவாக்கப்பட்ட கவர்னர் ஜெனரலுக்கு சமமான பதவி.

ஐ.சி.எம்.ஆர் இன் “ஐ-டிரோன்” – தடுப்பூசி விநியோகம்

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

  • மத்திய சுகாதாரமா மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில், வடகிழக்கு மாநிலங்களில் டிரோன் மூலம் கோவிட் மருந்துகள் கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டது
  • மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக, உயிர்காக்கும் தடுப்பூசிகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்த விநியோக திட்டம் துவங்கப்பட்டுள்ளது
  • “பிஷ்னுபூர் மாவட்ட மருத்துவமனையிலிருந்து மணிப்பூரில் உள்ள கராங் தீவின் லோக்டக் ஏரிக்கு 12-15 நிமிடங்களில் 15 கிமீ வான்வழி தூரத்திற்கு கோவிட் தடுப்பூசியை கொண்டு செல்ல தெற்காசியாவில் ‘மேக் இன் இந்தியா’ ட்ரோன் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்

இந்திய ஈர நில இணையதளம்

  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், பூபேந்தர் யாதவ் சனிக்கிழமையன்று நாட்டின் ஈரநிலங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும் ‘வெட்லாண்ட்ஸ் ஆஃப் இந்தியா போர்டல்’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்
  • இதற்கான இணையதளம் = http://indianwetlands.in/
  • ஈரநிலங்கள் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் போர்டல் ஒரு ஒற்றை புள்ளி அணுகல் ஆகும்
  • இந்த போர்ட்டல் மாணவர்களுக்கான திறனை வளர்க்கும் பொருள், தரவு களஞ்சியம், வீடியோக்கள் மற்றும் தகவல்களை வழங்குகிறது. முக்கியமாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் யூனியன் பிரதேசத்திற்கும் ஒரு டாஷ்போர்டு போர்ட்டலை அணுகி, அவற்றின் நிர்வாகத்தில் ஈரநிலங்களின் தகவல்களுடன் மக்கள் தொகைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலம்

OCTOBER 06 2021 TNPSC CURRENT AFFAIRS

  • இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலம், தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்குள் பணிகள் முடிவடையும் என ரயில்வே தெரிவித்துள்ளது
  • பாம்பன் பாலம் எனப்படும் இப்பாலம், 2.05 கிலோமீட்டர் தூரத்திற்கு, இது ராமேஸ்வரத்தை தமிழ்நாட்டில் பாம்பனில் உள்ள பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும்.

பொது போக்குவரத்திற்காக ரோப் சேவையை பயன்படுத்த உள்ள இந்தியாவின் முதல் மாநிலம்

  • பொது போக்குவரத்துக்காக ரோப்வே சேவைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் நகரமாக வாரணாசி மாற உள்ளது
  • வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் ஈஷா தத்தா கூறுகையில், பொலிவியா மற்றும் மெக்சிகோ நகரத்திற்குப் பிறகு, உலகில் பொது போக்குவரத்துக்கு ஒரு ரோப்வேயைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா இருக்கும் என்று கூறினார்.
  • வாரணாசி நகரம் விரைவில் பொது போக்குவரத்தில் ரோப்வே சேவைகளைப் பயன்படுத்தும் முதல் இந்திய நகரமாக மாறும்.

 

OCTOBER 01 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

OCTOBER 02 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

OCTOBER 03 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

OCTOBER 04 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

OCTOBER 05 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

Leave a Reply