OCTOBER 08 2021 CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா
இந்திய அரசு நிறுவனமான, ஏர் இந்தியா நிறுவனத்தை சுமார் 18000 கோடி ரூபாய் செலுத்தி, டாடா நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தோற்றுவித்த டாடா குழுமம், தேசியமயமாக்கப்பட்டு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதை மீட்டெடுத்தது.
உலக முட்டை தினம்
உலக முட்டை தினம் (WORLD EGG DAY, 2ND FRIDAY OF OCTOBER), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக முட்டை தினம் அக்டோபர் எட்டாம் தேதி வந்துள்ளது
2021 ஆம் ஆண்டிற்கான உலக முட்டை தினத்தின் கரு = EGGS FOR ALL: NATURE’S PERFECT PACKAGE
இந்திய விமானப் படை தினம்
இந்திய விமானப் படை தினம் (INDIAN AIR FORCE DAY, OCTOBER 8TH) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 89-வது விமானப் படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி “ராயல் இந்திய விமான்ப படை” உருவாக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
இந்தியாவின் முதல் இ-மீன் சந்தை செயலி
இந்தியாவின் முதல் இ-மீன் சந்தை செயலி “FISHWAALE” என்ற பெயரில் அஸ்ஸாமில் வெளியிடப்பட்டுள்ளது (INDIA’S FIRST E-FISH MARKET APP FISHWAALE LAUNCHED IN ASSAM)
செயலி மூலம் மீன் விற்பனை செய்வதற்கான பிரத்யோக செயலி இதுவாகும்
ஐ.எஸ்.எஸ்.எப் ஜுனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்
பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் (ISSF = INTERNATIONAL SHOOTING SPORTS FEDERATION) ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், புதிய உலக சாதனை படைத்தது, தங்கப் பதக்கத்தையும் வென்றார்
4 புள்ளிகள் பெற்று ஜூனிய துப்பாக்கி சுடுதலில் புதிய உலக சாதனை படைத்தார்
பிரபல நடிகர் “அரவிந்த் திரிவேதி” காலமானார்
மூத்த தொலைக்காட்சி நடிகரான அரவித் திரிவேதி, காலமானார்.
அவருக்கு வயது 82
இராமாயண நாடகத்தில் “இராவணனாக” நடித்து பெரும் புகழ் பெற்றவர் இவர்.
அவர் 2002 முதல் 2003 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) செயல் தலைவராக பணியாற்றினார்.
இந்திய கல்வி தொடர்பான யுனஸ்கோ அறிக்கை
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினத்தை (WORLD TEACHER DAY) முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO = UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION), “ஆசிரியர் இல்லை, வகுப்பு இல்லை” (STATE OF THE EDUCATION REPORT (SOER) FOR INDIA: “NO TEACHER, NO CLASS) என்ற பெயரில் இந்தியாவின் கல்வி தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது
இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக 3.3 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடம், உத்திரப் பிரதேசத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் உள்ளன, அவற்றில் 89% கிராமப்புறங்களில் உள்ளன. தற்போதைய பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவுக்கு 11.16 லட்சம் கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்று அறிக்கை கூறுகிறது.
பெண் ஆசிரியர்கள் குறைவாக உள்ள மாநிலம், திரிபுரா ஆகும்.
AJEYA WARRIOR போர் பயிற்சி
இந்தியா மற்றும் இங்கிலாந்து ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் “அஜேயா வாரியார்” (6TH EXERCISE AJEYA WARRIOR, BETWEEN INDIAN AND UK ARMIES) போர் பயிற்சி நிகழ்ச்சி, உத்திரக்காண்டு மாநிலத்தின் சபாதியா என்னும் இடத்தில் துவங்கியது
இது 6-வது அஜேயா வாரியார் பயிற்சி ஆகும். இப்பயிற்சி முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு துவங்கியது