ஐஞ்சிறுகாப்பியங்கள்
பொருளடக்கம்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
- நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
- நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சூளாமணி = தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:
நூல் | சமயம் | பாவகை | ஆசிரியர் | அமைப்பு |
நாக குமார காவியம் | சமணம் | விருத்தம் | 5 சருக்கம், 170 பாடல் | |
உதயன குமார காவியம் | சமணம் | விருத்தம் | 6 காண்டம், 369 பாடல் | |
யசோதர காவியம் | சமணம் | விருத்தம் | வெண்ணாவலூர் உடையார் வேள் | 5 சருக்கம், 320 பாடல் |
நீலகேசி | சமணம் | விருத்தம் | 10 சருக்கம், 894 பாடல் | |
சூளாமணி | சமணம் | விருத்தம் | தோலாமொழித்தேவர் | 12 சருக்கம், 2330 விருதப்பாக்கள் |
நாககுமார காவியம்
நாககுமாரகாவியத்தின் உருவம்:
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 170
- சருக்கம் = 5
- பாவகை = விருத்தப்பா
- சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
- கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
வேறு பெயர்:
- நாகபஞ்சமி கதை
பொதுவான குறிப்புகள்:
- நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
- மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
- 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
- இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
- அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும்
மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும்
திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே
உதயணகுமார காவியம்
உதயனகுமார காவியத்தின் உருவம்:
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 369
- காண்டம் = 6
காண்டங்கள்:
- உஞ்சைக் காண்டம்
- இலாவண காண்டம்
- மகத காண்டம்
- வத்தவ காண்டம்
- நரவாகன காண்டம்
- துறவுக் காண்டம்
வேறு பெயர்:
- உதயணன் கதை
பொதுவான குறிப்பு:
- இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
- கதைத்தலைவன் = உதயணன்
- உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
- உதயணன் யாழின் பெயர் = கோடபதி
- “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை” என்பார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
- வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ
தோணி முகம் கட்டு எனச் சொல்லியே புலம்புவான்
யசோதர காவியம்
யசோதர காவியத்தின் உருவம்:
- ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
- காலம் = 13ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 320
- சருக்கங்கள் = 5
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
பொதுவான குறிப்புகள்:
- வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
- “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்:
- யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
- தம்மைக் கொல்லின் வான்உயிர் இன்பமே
அல்லால் வருநெறி திரியும் அன்றி
ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில்
மரித்திடும் இயல்பித்ரு அன்றோ
நீலகேசி
நீலகேசியின் உருவம்:
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = 6ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 894
- சருக்கம் = 10
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
வேறு பெயர்:
- நீலகேசி தெருட்டு
- நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
பெயர் காரணம்:
- நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
- கேசி = கூந்தலை உடையவள்
- நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
பொதுவான குறிப்புகள்:
- நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
- இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
- நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
- இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.
மேற்கோள்:
- கோறல் பொய்த்தல் கொடுங்களவு
நீங்கிப் பிறர் மனைகண்மேல்
சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்
சென்ற சிந்தை வேட்கையினை
ஆறு கிற்பின் அமர் உலகம்
நுன்கண் கடியதாம் என்றாள்
சூளாமணி
சூளாமணியின் உருவம்:
- ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
- காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
- பாடல்கள் = 2330
- சருக்கம் = 12
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
- மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
- இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
- சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
- நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
- “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
- “சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
- “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ
மேற்கோள்:
- ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ
It is very usefull