TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
விசாவைப் பெறுவதற்கு காவல்துறை அனுமதிச் சான்றிதழை பெற விலக்கு அளித்துள்ள சவூதி அரேபியா
- சவூதி அரேபியா, இந்தியப் பிரஜைகளுக்கு நாட்டிற்குச் செல்வதற்கான விசாவைப் பெறுவதற்கு காவல்துறை அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
- இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – சவுதி அரேபியா உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முதன் முறையாக “புவிசார் குறியீட்டை” பெற்ற அந்தமான் தீவுகள்
- அந்தமான் நிகோபார் தீவுகளில் பிரத்தியோகமாக தயாரிக்கப்படும் “ஹோடி” படகுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- அந்தாமில் உருவான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- முதன் முதலில் புவிசார் குறியீட்டை பெற்ற பொருள் = டார்ஜிலிங் தேயிலை (2004)
ரஷ்யா மற்றும் பெலாரஸின் பாராலிம்பிக் கமிட்டிகள் தற்காலிக நீக்கம்
- சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி ரஷ்யா மற்றும் பெலாரஸின் தேசிய பாராலிம்பிக் கமிட்டிகளை (NPCs) நவம்பர் 17, 2022 அன்று தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக மார்ச் மாதம் பெய்ஜிங் 2022 குளிர்கால பாராலிம்பிக்ஸில் இரு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்
- தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஹுமார்க் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ITTF-ATTU ஆசிய கோப்பை போட்டியில் மனிகா பத்ரா வெண்கலப் பதக்கம் வென்றார் // Manika Batra clinched the bronze medal at the ITTF-ATTU Asian Cup
- இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை ஆவார்.
- அவர் உலகின் ஆறாவது தரவரிசை மற்றும் மூன்று முறை ஆசிய சாம்பியனான ஹினா ஹயாடாவை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
- ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பத்ரா பெற்றார்.
- ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சேத்தன் பாபூர் ஆவார்.
- 1997ல் வெள்ளியும், 2000ல் வெண்கலமும் வென்றார்.
இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயம்
- ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம் (HMDA) மற்றும் இந்தியன் ரேசிங் லீக் (IRL) ஆகியவை இணைந்து 19 மற்றும் 20 நவம்பர் 2022 அன்று ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை ஏற்பாடு செய்துள்ளன // India’s first ever Street Circuit Car Racing
- குறைந்தபட்சம் 22 மின்சார பந்தய கார்கள் இந்த பந்தயத்தில் பங்கேற்கின்றன.
இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பந்தயம்
- எச்எம்டிஏ மற்றும் ஐஆர்எல் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தை ஹைதராபாத்தில் நடத்தும், இது 10 மற்றும் 11 பிப்ரவரி 2023 இல் நடத்த உள்ளன // first-ever Formula E World Championship race
- மின்சார கார்கள் மூலம் பந்தயம் நடைபெறும்.
- ஃபார்முலா E பந்தயம் என்பது ஒற்றை இருக்கை கொண்ட மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப் ஆகும்.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ், 6 வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
- டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வந்தது.
- இதில் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் நார்வேயின் கார்ஸ்பர ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.
- 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ஜோகோவிக். இது அவரின் 6 வது ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் கோப்பை ஆகும்.
டி20 கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர்
- டி20 கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சிறப்பை நியுசிலாந்து நாட்டின் டிம் சவுத்தி பெற்றுள்ளார்.
- இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2 வது முறையாக அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
- டி20 கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் = இலங்கையில் மலிங்கா.
இந்திய விமானப்படையின் ‘ஏர் ஃபெஸ்ட் 2022’
- வருடாந்திர “ஏர் ஃபெஸ்ட் 2022” நவம்பர் 19 அன்று நாக்பூரில் விமானப் படை சார்பில் நடைபெற்றது.
- ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுகிறது.
- நோக்கம்: இந்திய விமானப் படையின் (IAF) பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துதல்
53வது சர்வதேச திரைப்பட விழா, சிறந்த ஆளுமையாக தேர்வு செய்யப்பட “சிரஞ்சீவி”
- IFFI 2022 இன் தொடக்க விழாவில் சிரஞ்சீவி இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் // Chiranjeevi was named the Indian Film Personality of the Year at the opening ceremony of IFFI
- இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் கோலாகலமாக தொடங்கியது.
- தொடக்க விழாவில் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர் கார்லோஸ் சௌராவுக்கு வழங்கப்பட்டது.
உலக குழந்தைகள் தினம்
- உலக குழந்தைகள் தினம் (World Children’s Day) = நவம்பர் 20
- தேசிய குழந்தைகள் தினம் (National Children’s Day) = நவம்பர் 14.
- நோக்கம் = உலகின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சரியான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள் = Inclusion, for every child
சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம்
- சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் (World Day of Remembrance for Road Traffic Victims) = நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டில், சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் 20 நவம்பர் 2022 அன்று வருகிறது.
டோனி போலோ விமான நிலையம்
- பிரதமர் நரேந்திர மோடி 19 நவம்பர் 2022 அன்று அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இட்டாநகரில் டோனி போலோ (சூரியன் சந்திரன்) விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
- இது மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் ஆகும்.
- அனைத்து காலநிலையிலும் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் இது பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த விமான நிலையத்திற்கு டோனி மற்றும் போலோ, அதாவது சூரியன் மற்றும் சந்திரன் பெயரிடப்பட்டது.
மிச்செல் ஒபாமாவின் புதிய புத்தகம் “The Light We Carry”
- மிச்செல் ஒபாமா தனது புதிய புத்தகமான “The Light We Carry”” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- சவாலான காலங்களைச் சமாளிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் முன்னோக்குகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
- உலகம் முழுவதும் உள்ள 14 மொழிகளிலும், 27 நாடுகளிலும் ஒரே நேரத்தில் புத்தகம் வெளியிடப்படும்.
- 2018 இல் வெளியிடப்பட்ட அவரது நினைவுக் குறிப்பு, “Becoming” எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாகும்.
அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு
- அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இயக்குநராக சஞ்சய் மிஷா பணியாற்றுகிறார், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ED இயக்குநராக இருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நவம்பர் 18, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மிஸ்ரா 1984-பேட்ச் இந்திய வருவாய் சேவை அதிகாரி மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு நவம்பர் 19, 2018 அன்று அமலாக்க இயக்குனரகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்
- இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அருண் கோயல், பஞ்சாப் கேடரின் 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, விருப்ப ஓய்வு பெற்றவர்.
- அவர் டிசம்பர் 2027 வரை பதவியில் இருப்பார்.
- இந்திய தலைமை தேர்தல் அதிகாரி = ராஜீவ் குமார்.
பிரான்ஸ் நாட்டின் மரியாதைக்குரிய காவலர் விருது
- பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “மரியாதைக்குரிய காவலர் விருது”, இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது // Army Chief General Manoj Pandey received a guard of honour
- நான்கு நாள் பயணமாக அவர் பிரான்ஸ் சென்றுள்ளார்.
தலாய்லாமாவுக்கு காந்தி, மண்டேலா விருது
- திபதிய புத்த மத தலைவர் தலாய்லாமாவிற்கு காந்தி-மண்டேலா விருது வழங்கப்பட்டது.
- அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சர்வதேச தலைவர்களுக்கு தர்மசாலாவில் செயல்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 18/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 16/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 15/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 14/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 13/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 12/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 11/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 10/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 9/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 8/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 7/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 6/11/2022