TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

விசாவைப் பெறுவதற்கு காவல்துறை அனுமதிச் சான்றிதழை பெற விலக்கு அளித்துள்ள சவூதி அரேபியா

  • சவூதி அரேபியா, இந்தியப் பிரஜைகளுக்கு நாட்டிற்குச் செல்வதற்கான விசாவைப் பெறுவதற்கு காவல்துறை அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
  • இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – சவுதி அரேபியா உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

முதன் முறையாக “புவிசார் குறியீட்டை” பெற்ற அந்தமான் தீவுகள்

  • அந்தமான் நிகோபார் தீவுகளில் பிரத்தியோகமாக தயாரிக்கப்படும் “ஹோடி” படகுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • அந்தாமில் உருவான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • முதன் முதலில் புவிசார் குறியீட்டை பெற்ற பொருள் = டார்ஜிலிங் தேயிலை (2004)

ரஷ்யா மற்றும் பெலாரஸின் பாராலிம்பிக் கமிட்டிகள் தற்காலிக நீக்கம்

  • சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி ரஷ்யா மற்றும் பெலாரஸின் தேசிய பாராலிம்பிக் கமிட்டிகளை (NPCs) நவம்பர் 17, 2022 அன்று தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக மார்ச் மாதம் பெய்ஜிங் 2022 குளிர்கால பாராலிம்பிக்ஸில் இரு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்
  • தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஹுமார்க் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ITTF-ATTU ஆசிய கோப்பை போட்டியில் மனிகா பத்ரா வெண்கலப் பதக்கம் வென்றார் // Manika Batra clinched the bronze medal at the ITTF-ATTU Asian Cup
  • இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை ஆவார்.
  • அவர் உலகின் ஆறாவது தரவரிசை மற்றும் மூன்று முறை ஆசிய சாம்பியனான ஹினா ஹயாடாவை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பத்ரா பெற்றார்.
  • ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சேத்தன் பாபூர் ஆவார்.
  • 1997ல் வெள்ளியும், 2000ல் வெண்கலமும் வென்றார்.

இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயம்

  • ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம் (HMDA) மற்றும் இந்தியன் ரேசிங் லீக் (IRL) ஆகியவை இணைந்து 19 மற்றும் 20 நவம்பர் 2022 அன்று ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை ஏற்பாடு செய்துள்ளன // India’s first ever Street Circuit Car Racing
  • குறைந்தபட்சம் 22 மின்சார பந்தய கார்கள் இந்த பந்தயத்தில் பங்கேற்கின்றன.

இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பந்தயம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பந்தயம்
  • எச்எம்டிஏ மற்றும் ஐஆர்எல் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தை ஹைதராபாத்தில் நடத்தும், இது 10 மற்றும் 11 பிப்ரவரி 2023 இல் நடத்த உள்ளன // first-ever Formula E World Championship race
  • மின்சார கார்கள் மூலம் பந்தயம் நடைபெறும்.
  • ஃபார்முலா E பந்தயம் என்பது ஒற்றை இருக்கை கொண்ட மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப் ஆகும்.

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ், 6 வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

  • டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வந்தது.
  • இதில் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் நார்வேயின் கார்ஸ்பர ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.
  • 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ஜோகோவிக். இது அவரின் 6 வது ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் கோப்பை ஆகும்.

டி20 கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர்

  • டி20 கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சிறப்பை நியுசிலாந்து நாட்டின் டிம் சவுத்தி பெற்றுள்ளார்.
  • இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2 வது முறையாக அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
  • டி20 கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் = இலங்கையில் மலிங்கா.

இந்திய விமானப்படையின் ‘ஏர் ஃபெஸ்ட் 2022’

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
இந்திய விமானப்படையின் ‘ஏர் ஃபெஸ்ட் 2022’
  • வருடாந்திர “ஏர் ஃபெஸ்ட் 2022” நவம்பர் 19 அன்று நாக்பூரில் விமானப் படை சார்பில் நடைபெற்றது.
  • ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுகிறது.
  • நோக்கம்: இந்திய விமானப் படையின் (IAF) பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துதல்

53வது சர்வதேச திரைப்பட விழா, சிறந்த ஆளுமையாக தேர்வு செய்யப்பட “சிரஞ்சீவி”

  • IFFI 2022 இன் தொடக்க விழாவில் சிரஞ்சீவி இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் // Chiranjeevi was named the Indian Film Personality of the Year at the opening ceremony of IFFI
  • இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் கோலாகலமாக தொடங்கியது.
  • தொடக்க விழாவில் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர் கார்லோஸ் சௌராவுக்கு வழங்கப்பட்டது.

உலக குழந்தைகள் தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20/11/2022
உலக குழந்தைகள் தினம்
  • உலக குழந்தைகள் தினம் (World Children’s Day) = நவம்பர் 20
  • தேசிய குழந்தைகள் தினம் (National Children’s Day) = நவம்பர் 14.
  • நோக்கம் = உலகின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சரியான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் = Inclusion, for every child

சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம்

  • சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் (World Day of Remembrance for Road Traffic Victims) = நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், சாலைப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் 20 நவம்பர் 2022 அன்று வருகிறது.

டோனி போலோ விமான நிலையம்

  • பிரதமர் நரேந்திர மோடி 19 நவம்பர் 2022 அன்று அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இட்டாநகரில் டோனி போலோ (சூரியன் சந்திரன்) விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
  • இது மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் ஆகும்.
  • அனைத்து காலநிலையிலும் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் இது பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த விமான நிலையத்திற்கு டோனி மற்றும் போலோ, அதாவது சூரியன் மற்றும் சந்திரன் பெயரிடப்பட்டது.

மிச்செல் ஒபாமாவின் புதிய புத்தகம் “The Light We Carry”

  • மிச்செல் ஒபாமா தனது புதிய புத்தகமான “The Light We Carry”” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • சவாலான காலங்களைச் சமாளிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் முன்னோக்குகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
  • உலகம் முழுவதும் உள்ள 14 மொழிகளிலும், 27 நாடுகளிலும் ஒரே நேரத்தில் புத்தகம் வெளியிடப்படும்.
  • 2018 இல் வெளியிடப்பட்ட அவரது நினைவுக் குறிப்பு, “Becoming” எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாகும்.

அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு

  • அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இயக்குநராக சஞ்சய் மிஷா பணியாற்றுகிறார், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ED இயக்குநராக இருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நவம்பர் 18, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மிஸ்ரா 1984-பேட்ச் இந்திய வருவாய் சேவை அதிகாரி மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு நவம்பர் 19, 2018 அன்று அமலாக்க இயக்குனரகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

  • இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அருண் கோயல், பஞ்சாப் கேடரின் 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, விருப்ப ஓய்வு பெற்றவர்.
  • அவர் டிசம்பர் 2027 வரை பதவியில் இருப்பார்.
  • இந்திய தலைமை தேர்தல் அதிகாரி = ராஜீவ் குமார்.

பிரான்ஸ் நாட்டின் மரியாதைக்குரிய காவலர் விருது

  • பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “மரியாதைக்குரிய காவலர் விருது”, இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது // Army Chief General Manoj Pandey received a guard of honour
  • நான்கு நாள் பயணமாக அவர் பிரான்ஸ் சென்றுள்ளார்.

தலாய்லாமாவுக்கு காந்தி, மண்டேலா விருது

  • திபதிய புத்த மத தலைவர் தலாய்லாமாவிற்கு காந்தி-மண்டேலா விருது வழங்கப்பட்டது.
  • அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சர்வதேச தலைவர்களுக்கு தர்மசாலாவில் செயல்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது.

 

 

Leave a Reply