இந்தியாவில் உலோகங்கள்

இந்தியாவில் உலோகங்கள்

இந்தியாவில் உலோகங்கள்

  • இந்தியாவில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த உலோகம் = தாமிரம் ஆகும்.
  • இந்தியாவைப் பொறுத்த வரையில் உலோகத் தாதுக்களில் இரும்பு, பாக்சைட், மாங்கனீசு போன்றவை பெருமளவிலும், செம்பு, தங்கம், காரீயம், துத்தநாகம் போன்ற ஓரளவு பங்கு பெறுகின்றன.
  • இந்தியாவில் பொதுவாக தாதுப்பொருட்களில் மினரல்ஸ் வளம் மிகுந்து காணப்படுகின்றன.
  • தாதுப்பொருட்கள் தொழிற்சாலைகளின் வைட்டமின்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையின் அன்பளிப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.
  • அலோகத் தாதுக்களில் மைக்கா, சுண்ணாம்பு போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இரும்புத்தாது

இந்தியாவில் உலோகங்கள்
இந்தியாவில் உலோகங்கள்
  • இந்தியா இரும்புத்தாது உற்பத்தியில் 7ஆவது இடத்தை பெற்றுள்ளது.
  • இந்தியாவில் மிக அதிகமாகக் கிடைக்கும் இரும்புத்தாது வகை ஹேமடைட்.
  • இந்தியாவில் இரும்பின் கனிகளில் மாக்னடைட் மற்றும் ஹேமடைட் போன்றவை அதிகளவில் கிடைக்கின்றன.
  • ஹேமடைட்டில் 68 விழுக்காடு இரும்பும். மாக்னடைட்டில் 50-60 விழுக்காடு இரும்பும், லிமோனைட்டில் 30 விழுக்காடு இரும்பும் காணப்படுகின்றன.
  • அண்மைய தகவலின்படி 13000 மில்லியன் டன் அளவிற்கு வெட்டியெடுக்கப்படாமலே இரும்புத்தாது இரும்பு உள்ளதாகத் தெரிவிக்கிறது.
  • அவற்றில் தரமான இரும்புத்தாது ஒரிசா மாநிலம் கியாஞ்சார், போனை, மயூர்பஞ்ச் மாவட்டங்களில் கிடைக்கிறது.

இந்திய இரும்புத்தாது படலம்

  • பீகார் மற்றும் ஒரிசா ஆகிய இரு மாநிலங்களிலும் இரும்புத்தாது உற்பத்தியில் 75 விழுக்காடு பங்களிக்கின்றன. எனவே இவை இரண்டையும் “இந்திய இரும்புத்தாது படலம்” என்று குறிப்பிடுகின்றனர்.
  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள துர்க், பஸ்தார் மாவட்டங்களிலும், சத்தீஸ்கரில் உள்ள ரெய்ப்பூரிலும், தமிழகத்தில் சேலம் (கஞ்சமலை) மற்றும் மதுரையிலும், கர்நாடகாவில் குத்ரேமுக் (தற்போது மூடப்பட்ட குத்ரேமுக் இரும்புத்தாது தொழிற்சாலை) மற்றும் பாபா புதான் குன்றுகளிலும் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது.
  • ஜப்பானின் உதவியோடு மத்தியப்பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பைலாடிலா சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
  • விசாகப்பட்டினத்திலிருந்து இரும்புத்தாது ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் இரும்புத்தாதுவிற்கு சர்வதேச சந்தையில் நல்ல வாய்ப்புகள் இருந்து வருகின்றன, காரணம் அதன் தரமே ஆகும்.

மாங்கனீசு

இந்தியாவில் உலோகங்கள்
இந்தியாவில் உலோகங்கள்
  • இரும்பு எஃகுத் தொழிலுக்கு அடிப்படையானது மாங்கனீசு.
  • மாங்கனீசில் கலந்துள்ள இரும்பு மிகவும் கடினமானதாகும்.
  • மாங்கனீசு இருப்பு வைப்பதில் இந்தியா ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தைப் பெற்று வருகிறது.
  • இந்தியாவில் மாங்கனீஸ் உற்பத்தியில் ஒரிசா முதலிடத்தையும், கர்நாடகா இரண்டாமிடத்தையும் பெற்று வருகின்றன.
  • உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது

பாக்சைட்

இந்தியாவில் உலோகங்கள்
இந்தியாவில் உலோகங்கள்
  • பாக்சைட் அலுமினியக் கனிமமாகும்.
  • மின்னாற்பகுப்பு முறையில்தான் உலோகத்தைத் தனிமைப்படுத்த முடியும். எனவே அலுமினிய உருக்குத் தொழில் குறைந்த விலையில் மிகுந்த அளவு மின்சக்தி காணப்படும் பகுதிகளிலேயே சாத்தியமாகும்.
  • கேரளாவில் ஆல்வாயிலும், தமிழ்நாட்டில் மேட்டூரிலும் அலுமினிய உருக்கு ஆலைகள் அமைந்துள்ளன. விமானக் கட்டுமானத் தொழிலுக்கு மிக முக்கியத் தேவை பாக்சைட் ஆகும்.
  • ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
  • இங்கு கிடைக்கும் தாதுக்கள் ஜப்பானுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளில் பாக்சைட் தாது கிடைக்கிறது.

மைக்கா

  • மைக்கா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • உலகிலேயே அதிக அளவு மைக்கா இருப்பு வைத்துள்ள நாடு இந்தியா.
  • உலகின் 90 விழுக்காடு மைக்கா உற்பத்தியை இந்தியா செய்து வருகிறது.
  • இந்தியாவில் வெள்ளை மைக்கா, கறுப்பு மைக்கா, ஆம்பர் மைக்கா என மூன்று வகை மைக்கா கிடைக்கிறது.
  • இந்தியாவில் மைக்கா உற்பத்தியில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மைக்காவில் 70 விழுக்காடு பீகாரில் கிடைக்கிறது.
  • பீகாரில் கயா, ஹசாரிபாக், முங்கர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது.
  • உயர்தரமான பெங்கால் ரூபி மைக்கா பீகாரில் கிடைக்கிறது.
  • பீகாரின் கிரித் சுரங்கம், கோதர்பா சுரங்கம் ஆகிய சுரங்கங்களில் அதிகளவில் மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பச்சை மைக்கா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆத்மபூர் மற்றும் கடூர் சுரங்கங்களிலும், தமிழ்நாட்டில் சேலம், நீலகிரி பகுதிகளிலும், இராஜஸ்தானில் பில்வாரா, ஆஜ்மீர், ஜெய்ப்பூர், உதயப்பூர் பகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் பஸ்தார் மாவட்டப்பகுதிகளிலும் மைக்கா கிடைக்கிறது.
  • மைக்கா உற்பத்தியில் இந்தியா பிரேசில் நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது.

வெள்ளி

  • காரீயம் மற்றும் துத்தநாக தாதுக்களைப் பிரித்தெடுக்கும்போது கிடைப்பதே வெள்ளி.
  • வெள்ளியின் முக்கிய சுரங்கம் இராஜஸ்தானில் உள்ள சாவார் சுரங்கம்.

தங்கம்

இந்தியாவில் உலோகங்கள்
இந்தியாவில் உலோகங்கள்
  • 1871 முதல் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் முக்கியச் சுரங்கமாக செயல்படுகிறது. இதுவே உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாகும்.
  • ஹட்டி சுரங்கமும், கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்ட சுரங்கமும் தங்கத்தின் முக்கியச் சுரங்கமாக விளங்குகிறது.
  • ஆந்திரப்பிரதேசத்தில் அனத்பூர், ராம்கிரி பகுதிகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.
  • ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் தங்க இருப்பு சுமார் 66-700 கிலோ ஆகும். தற்போது தங்கத்தின் உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply