TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 14, 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 14, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 14, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
கிரிப்டோகரன்சி மசோதா:
“கிரிப்டோ மசோதா” (Crypto Bill) எனப்படும் “கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுப்பாட்டு மசோதா 2021” (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021), வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம் (Digital Currency). ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டம்:
மத்திய அரசின் “தேசிய அனல் மின் நிறுவனம்” (NTPC – National Thermal Power Corporation), மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசுக்கும் இடையே லடாக்கின் லே பகுதியில், “இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டம்” (India’s First Green Hydrogen Mobility Project) துவக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாற்பகுப்பால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் கிரீன் ஹைட்ரஜன் (green hydrogen) என்று அழைக்கப்படுகிறது.
மேலும், லடக்கின் லே பகுதியில் இந்தியாவின் முதல் “சூரிய ஆற்றல் மரங்கள் மற்றும் சூரிய ஆற்றல் கார் நிறுத்துமிடம்” உருவாக்கப்பட்டுள்ளது (Ladakh’s Leh Is India’s First City To Have Solar Trees & Solar Carport)
கங்கா அதிவிரைவு சாலை – இந்தியாவில் 2-வது நீளமான அதிவிரைவு சாலை:
உத்திரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், இந்தியாவின் 2-வது மிக நீளமான அதிவிரைவு சாலை, “கங்கா அதிவிரைவு சாலை” (Ganga Expressway, India’s 2nd longest Expressway ) என்ற பெயரில் அமைக்கப்படவுள்ளது. 594 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த சாலைத்திட்டம், மீரட்டில் இருந்து பிரயாகை (அலகாபாத்) (Meerut to Prayagraj (Allahabad)) வரை அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் டெல்லி மற்றும் பிரயாகை இடையேயான பயண நேரம் 11 மணியில் இருந்து 6 மணி நேரமாக குறையும். இந்தியாவின் மிக நீளமான அதிவிரைவு சாலை, 135௦ கிலோமீட்டர் நீளமுடைய டெல்லி – மும்பை அதிவிரைவு (Mumbai – Delhi Expressway is India’s longest Expressway, with a distance of 1350 Km) சாலையாகும்.
இந்தியாவின் யு.பி.ஐ பயன்படுத்தும் முதல் நாடு – பூட்டான்:
மொபைல் பொன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய பயன்படும், இந்தியாவின் யு.பி.ஐ ஆன “பீம்” யு.பி.யை பயன்படுத்தும், முதல் நாடு என்ற சிறப்பை பூட்டான் பெற்றுள்ளது (Bhutan has become the first country to adopt India’s Unified Payment Interface (UPI) standards for its quick response (QR) code)
பணத்திற்கான பாரத் இடைமுகம் (BHIM) என்பது இந்தியாவின் டிஜிட்டல் கட்டண பயன்பாடு (பயன்பாடு) ஆகும், இது யுபிஐ மூலம் செயல்படுகிறது, இது பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டிற்கு இயக்கும் அமைப்பு.
வணிகக் கடைகளில், பீம் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் முறையை ஏற்றுக் கொண்ட 2-வது நாடு பூட்டான் ஆகும். முதலில் ஏற்றுக்கொண்ட நாடு சிங்கப்பூர் ஆகும் (Bhutan, also the second country after Singapore to have BHIM-UPI acceptance at merchant locations).
- BHIM = BHARAT INTERFACE FOR MONEY
- UPI = UNIFIED PAYMENT INTERFACE
- OR = QUICK RESPONSE
ஹீலியத்தில் இருந்து எலெக்ட்ரான் குமிழிகள்:
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) விஞ்ஞானிகள் முதன்முறையாக சூப்பர் ஃப்ளூயிட் ஹீலியத்தில் இரண்டு வகையான சில எலக்ட்ரான் குமிழ்கள் (2 Species of few Electron Bubbles (FEB) in Superfluid Helium)) இருப்பதை சோதனை முறையில் காட்டியுள்ளனர்.
எலக்ட்ரான்களின் ஆற்றல் நிலைகள் மற்றும் ஒரு பொருளில் அவற்றுக்கிடையேயான இடைவினைகள் அதன் பண்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய இந்த FEB கள் ஒரு பயனுள்ள மாதிரியாக செயல்பட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைகோள் – “ஆப்பில்”:
இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்ளான “ஆப்பில்” (APPLE, India’s first Indigenous, Experimental Communication Satellite), விண்ணில் ஏவப்பட்டு 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த செயற்கைகோள் 1981, ஜூன் 19 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 40 ஆண்டுகால நிறைவை பஞ்சாப்பின் சண்டிகர் பல்கலைக்கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. (APPLE = The Ariane Passenger PayLoad Experiment)
அசாம் அரசின் கோவிட்-19 விதவைகள் ஆதரவு திட்டம்:
அசாம் அரசின் சார்பில், கோவிட்-19 கொரோனா தொற்றால் கணவனை இழந்த பெண்மணிகளுக்கு, “முதலமைச்சரின் கோவிட்-19 விதவைகள் ஆதரவு திட்டம்” (Chief Minister’s Covid-19 Widows Support Scheme launched by Assam Government) என்ற திட்டத்தின் மூலம், அவர்களுக்கு 2.5 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்ப விதவைகளுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்படும்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் நடுவர்:
ஒலிம்பிக் போட்டிகளின் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் நடுவராக பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் கப்ரா பெற்றுள்ளார் (Deepak Kabra becomes first Indian gymnastics judge at Olympics)
ஜார்ஜியாவில் காந்தி சிலை திறப்பு:
ஜார்ஜியா நாட்டின் பிரபல திபிலிசி பூங்காவில், இந்திய தேசத் தந்தை “காந்தியின் உருவச்சிலை” (Mahatma Gandhi Statue), மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புனித அரசை கேதாவாவின் (relics of 17th century St. Queen Keteva) நினைவுச்சின்னங்களை ஜார்ஜியாவின் உயர் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைப்பு செய்தார்.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் “சிறப்பு மையம்” துவக்கம்:
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள “இந்திய தேசிய தடய அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழக” வளாகத்தில் ஆராய்ச்சி அடிப்படையிலான புதிய “சிறப்பு மையத்தை” (a research-based centre of excellence at National Forensic Science University in Gandhinagar, Gujarat), மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இம்மையத்தால் நமது இளைஞர்கள் போதை மற்றும் போதைப்பொருளின் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும்.
மேலும் அந்நிகழ்ச்சியில் இந்திய காவல்துறைக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது (investigation of Crime against women for Indian Police) தொடர்பான மெய்நிகர் பயிற்சி மாதிரியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்போது திறந்து வைத்தார்.
குழந்தை மேதாவியின் புதிய புத்தகம்:
குழந்தை மேதாவியான “க்ரிசிஸ் நைட்” என்ற 7 வயது சிறுமியின் “The Great Big Lion” என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் இச்சிறுமியால் ஓவியமாக வரையப்பட்டு, எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சிங்கம் மற்றும் அதன் 2 குழந்தைகள பற்றிய கதைப் புத்தகம் இது.
கூகுல் மீட் – நேர வரம்பை மாற்றிய கூகுல்:
தனிப்பட்ட ஜிமெயில் கணக்குகளுடன் இலவச பயனர்களுக்காக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் கூகிள் மீட் குழு வீடியோ அழைப்புகளுக்கு கூகிள் 60 நிமிட வரம்பை விதித்துள்ளது. அனால் கூகிள் மீட்டில் ஒருவருக்கொருவர் அழைப்புகள் இன்னும் இலவசமாக இருக்கும் என்றும், மேலும் இது 24 மணிநேரம் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது (Google has put a 60-minutes limit on Google Meet group video calls with three or more participants for free users with personal Gmail accounts)
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு:
தஜிகிஸ்தான் நாட்டின் துசான்பே நகரில் நடைபெற்ற “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு” (Shanghai Cooperation Organization (SCO) convened a key meeting of the group in Dushanbe, Tajikistan) நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், ஆப்கானிஸ்தானின் தீவிரவாத நிகழ்வுகள் மற்றும் கோவிட்-19 மீட்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது
7-வது ஊதியக் குழு – அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி உயர்வை, 7-வது ஊதியக் குழு கணக்கேட்டின் படி, 17% இருந்து 28% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஜூலை 2௦21 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக “நமோ” மொபைல் செயலி:
டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக, நாட்டின் மக்கள் இப்போது தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முடியும் என்றும், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு நாமோ ஆப் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஒவ்வொரு வீரரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
100% கோவிட் தடுப்பூசி இலக்கை அடைந்த இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம்:
அணைத்து மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் என்ற சிறப்பை, “லடாக்” பெற்றுள்ளது (Ladakh becomes first UT to achieve 100% first dose coverage). அங்குள்ள தொழிலாளர்கள், வெளிமாநில மக்கள் என அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்:
சமிபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஜார்கண்ட் மாநிலத்தில் 55% குழந்தைகளுக்கு ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் (ICDS – Integrated Child Development Services, 1975) கீழ் சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது. “தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பு” படி, அம்மாநிலத்தின் ஒவ்வொரு 2-வது குழந்தையும் குன்றிய மற்றும் எடை குறைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7௦% குழந்தைகள் இரத்த சோகை (Anemia) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிக்கை தெரிவிக்கிறது.
எலும்பு திசு மீளுருவாக்கம்:
மகாராஸ்டிராவின் பூனே நகரில் உள்ள “சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழக” (Bone Tissue Regeneration in Pune University) ஆராய்ச்சியாளர்கள், நானோ உயிர் மூலப்பொருளை இரண்டு மூலக்கூறுகளுக்கு இடையில் நிலையான இணைப்பைக் கொண்டு ஒருங்கிணைத்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் எலும்பிலுள்ள திசுக்களை மீள் உருவாக்கம் செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் – உயர்நீதிமன்ற தீர்ப்பு:
புது தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்பாயத்தின் வடக்கு மண்டல அமர்வை, பசுமை தீர்பாயங்களின் முதன்மை அமர்வாக, 2௦17 ஆம் ஆண்டு மதிய அரசு அறிவித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் நீதிமன்றம், இந்தியாவில் 5 மண்டல பசுமை தீர்பாயமும், சமமானவை மற்றும் சம அதிகாரம் கொண்டவை. அவைகளின் தீர்ப்பு இந்தியா முழுவதும் செல்லும் என்றது. 5 மண்டலங்கள்,
- மத்திய மண்டலம் – போபால்
- கிழக்கு மண்டலம் – கொல்கத்தா
- தெற்கு மண்டலம் – சென்னை
- மேற்கு மண்டலம் – புனே
- வடக்கு மண்டலம் – புது தில்லி.
கஞ்சன்ஜங்கா உயிர்கோள காப்பகம்:
இந்தியாவின் தாவரவியல் கணக்கெடுப்பு (BSI – Botanical Survey of India) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் 1% க்கும் குறைவான நிலப்பரப்புகளைக் கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான சிக்கிம்மில், இந்தியாவில் உள்ள அனைத்து பூச்செடிகளிலும் 27% உள்ளது. சிக்கிம் மாநிலம், காஞ்சன்ஜங்கா உயிர்க்கோள காப்பக பகுதியினை உள்ளடக்கி உள்ளது. 122௦ மீட்டார் உயரத்தில் அமைந்துள்ள இந்த உயிர்கோள காப்பகம், ‘கலப்பு’ பிரிவில் உலக பாரம்பரிய தளமாக (World Heritage Site in the ‘mixed’ category) நியமிக்கப்பட்டுள்ளது (கலப்பு பாரம்பரிய தளங்களில் இயற்கை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கூறுகள் உள்ளன).
40-வது ஆண்டினை கொண்டாடிய நபார்டு வங்கி:
“நபார்டு வங்கி” என்று அழைக்கப்படும் “தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி”, தனது 40-வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடியது. இவ்வங்கி 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. இவ்வங்கியின் தலைமையகம், மும்பையில் உள்ளது.
பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை:
புகழ்பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை நிகழ்ச்சி, மக்கள் இல்லாமல் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. ராத யாத்திரை என்பது ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சுபத்ரா தேவி (கிருஷ்ணரின் சகோதரி), மற்றும் பலராம் (அவரது மூத்த சகோதரர்) ஆகியோரை கவுரவிக்கும் ஒரு திருவிழா. இது இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.