TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 13, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் “பங்கபந்து இருக்கை”:
வங்கதேசத்தின் தந்தை எனப்படும், “பங்கபந்து சேக் முஜிபூர் ரகுமான்” அவர்களை கவுரவிக்கும் நோக்கில், இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்) (ICCR – INDIAN COUNCIL FOR CULTURAL RELATIONS) மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் “பங்கபந்து இருக்கை” (BANGABANDHU CHAIR) அமைக்க, பங்கதேசத்தின் டாக்காவில் உள்ள டெல்லி பல்கலைக்கழகம் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேக் முஜிபிர் ரகுமான், வங்கதேசத்தின் முதல் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவராக இருந்தவர்.
இந்திய அரசின் சார்பில் 2௦2௦ ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது, பங்கபந்து சேக் முஜிபுர் ரகுமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
யுரோ கோப்பை 2௦2௦:
யுரோ கோப்பை 2௦2௦ (UEFA EURO 2020) கோப்பையை இத்தாலி அணி வென்றது. இங்கிலாந்தின் லண்டன் நகரின் வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற 16-வது யுரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், இத்தாலி அணி, இங்கிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
இத்தொடரின் “தங்க காலனி விருது” (GOLDEN BOOT AWARD) போர்சுகல் அணியின் நட்சத்திர வீரர் “கிறிஸ்டினா ரொனால்டோ”விற்கு வழங்கப்பட்டது.
ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி. கிரிகெட் வீரர்கள்:
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC – International Cricket Council), ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து, சிறந்த வீரராக அறிவிக்கும்.
ஜூன் மாத சிறந்த வீரர் (ICC Player of the Month for June) = நியுசிலாந்தின் டேவோன் கான்வாய்
ஜூன் மாத சிறந்த வீராங்கனை (ICC Women Player of the Month of June) = இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன்.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு 2௦21:
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு 2௦21 (Khelo India Youth Games 2021), வருகின்ற 2௦22 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த ஹரியான மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள், இந்த வருடம் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக அடுத்த வருடம் பிப்ரவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் அரசின் புதிய “நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்” துறை:
அசாம் அரசின் சார்பில், அங்குள்ள பூர்வ குடிகளை பாதுகாக்கும் வகையில், “பழங்குடியினர் மற்றும் பழங்குடி சமூகங்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் மரபுகள்” என்ற புத்தியை துறையை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய துறையானது, மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களின் நம்பிக்கையையும், மரபையும் பாதுகாக்கும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வழங்கும் என்கிறது.
“தங்க காலனி விருது” பெற்ற ரொனால்டோ:
யுரோ கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வெற்றி பெற்றுள்ளது.
யுரோ கோப்பை போட்டி முடிவில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான “தங்க காலனி விருது”, போர்சுகல் அணியின் நட்சத்திர வீரரான, “கிரிஸ்டினோ ரொனால்டோ” விற்கு வழங்கப்பட்டது.
நான்கு போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தம் 5 கோள்களை அடித்துள்ளார்.
சிவம் ஷங்கர் சிங்கின் புதிய புத்தகம்:
சிவம் ஷங்கர் சிங் மற்றும் ஆனந்த் வெங்கடநாராயணன் ஆகியோர் எழுதிய “The Art of Conjuring Alternate Realities: How Information Warfare Shapes Your World”, புத்தகம், ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் சார்பில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
புத்தகம் மனித வரலாற்றைக் கையாள்கிறது, சமூக கட்டுப்பாடு பல்வேறு படிநிலைகளால் தீர்மானிக்கப்பட்டது
பஹ்ரைன் கேரளேய சமாஜம் இலக்கிய விருது:
2௦21 ஆம் ஆண்டிற்கான, “பக்ரைன் கேரளேய சமாஜம் இலக்கிய விருது”, பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் நாடக ஆசிரியரான “ஓம்சேரி என்.என்.பிள்ளை” அவர்களுக்கு வழங்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டு “கேரள சாகித்திய அகாடெமி விருது”, 2௦13 ஆம் “பிரவாசி கலாரத்னா விருது” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
பொருளாதார ஆலோசகரின் எமேர்ஜன்சி பற்றிய புத்தகம்:
மூத்த பொருளாதார ஆலோசகரான அசோக் சக்ரவர்த்தி எழுதிய “The Struggle Within: A Memoir of the Emergency” தற்போது ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
1975-1977 வரையிலான இந்தியாவின் எமெர்ஜென்சி பற்றிய குறிப்புகளை பற்றி இப்புத்தகம் பேசுகிறது.
கொரோனா முடிவுகளை உடனடியாக அறிவிக்கும் SwabSeq தொழில்நுட்பம்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள SwabSeq என்ற தொழில்நுட்பம், உடனடியாக கொரோனாவை கண்டறியும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதன் மூலம் சோதனை மேற்கொள்ள முடியும்.
2026-ல் உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டியை நடத்தும் இந்தியா:
2026 ஆம் ஆண்டில் உலக பூப்பந்து (பாட்மிண்டன்) சாம்பியன்ஷிப்பை (World Badminton Championship) இந்தியா நடத்தும் என்று பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (World Badminton Federation) அறிவித்துள்ளது.
2௦௦9 ஆம் ஆண்டு உலக சாம்பியன்சிப் போட்டியை நடத்திய இந்தியா, மீண்டு 2-வது முறையாக 2௦26 ஆண்டு நடத்த உள்ளது
பிரம்மோஸ் ஏவுகணை சோதனை தோல்வி:
ஒடிசா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது. மேலும் ஏவுகணை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வீழ்ந்தது.
ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வீச்சு பதிப்பு சோதனை செய்யப்பட்டது, இது 450 கிலோமீட்டர் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
கடல்சார் உளவு விமானம்:
பிரபல போயிங் நிறுவனத்திடம் இருந்து 1௦-வது P-8I என்ற “நீண்ட தூர கடல்சார் உளவு, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம்” இந்தியா பெற்றது
12 விமானங்களில் இதுவரை 1௦ விமானங்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
பி -8 ஐ விமானம் அதன் ஒப்பிடமுடியாத கடல்சார் உளவு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களுக்காக அறியப்படுகிறது, மேலும் இது பேரழிவு நிவாரணம் மற்றும் மனிதாபிமான பணிகளின் போது உதவ பயன்படுத்தப்படுகிறது.
புதிய பிரதமரை நியமிக்க கெடு விதித்த நேபாள உச்சநீதிமன்றம்:
நேபாளத்தின் புதிய பிரதமாராக, அந்நாட்டின் காங்கிரஸ் கட்சி தலைவர் சேர் பகதூர் தூபாவை நியமனம் செய்ய வேண்டும் என, அந்நாட்டு குடியரசுத் தலைவர் பித்யா தேவி பாண்டாரிக்கு, நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைக்கப்பட்ட பிரதிநிதிகள் சபையை 5 மாதங்களில் இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்த முயலுகிறது.
மணிப்பூரில் 16 புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் துவக்கம்:
மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, மணிப்பூரில் புதிதாக 16 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். 298 கிலோமீட்டர் தூர சாலைகள் அமைக்க 4148 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டங்கள் வடகிழக்கு மாநிலத்திற்கு இந்தியாவின் பிற பகுதிகளுடனும் அண்டை நாடுகளுடனும் இணைக்கும் வகையில், அணைத்து காலநிலைக்கும் ஏற்ற வகையில் அமைக்கபட உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு “மாத்ரு கவாச்சம்” திட்டத்தை துவங்கிய கேரளா:
கேரள மாநிலத்தில் உள்ள அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் “மாத்ரு கவாச்சம்” என்ற திட்டத்தின் மூலம் கொரோனோ தடுப்பூசி போடப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது
இதற்காக பிரத்தியோக முகாம், மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உலகின் முதல் இணை (ஒருங்கிணைந்த) கொரோனா தட்ப்பூசி – சோபெரானா 2:
கியூபா, கொரோனாவிற்கு எதிராக உலகின் முதல் இணை (ஒருங்கிணைந்த) தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. சோபெரானா – 2 (அல்லது சாவரின் 2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி 91.2% ஆற்றலை வழங்குவதாக ஆராய்ச்சியின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தடுப்பூசி என்பது, பலவீனமான ஆண்டிஜெனுடன், பலாமான ஆண்டிஜெனை சேர்த்தல் ஆகும்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் ஷர்மா காலமானார்:
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி வீரரான யஷ்பால் ஷர்மா 66 வயதில் காலமானார்.
1983 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் அதிக ரன்களை அடித்த 2-வது வீரர் இவராவார்.
டி-2௦ போட்டிகளில் 14000 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர்:
மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர், கிரிஸ் கெயில், சர்வதேச டி-2௦ போட்டிகளில் 14000 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டி-2௦ போட்டிகளில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்கள்,
மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் சார்பில், உலகின் மிக இலகுவான போர் (World’s Lightest Combat Helicopters) ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டு, விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது
அவை LCH எனப்படும் Light Combat Helicopter ஆகும்.
12௦௦௦ அடி உயரத்தில் பறக்கக் கூடிய இவ்விமானம், 5.5 டன் எடை கொண்டதாகும்.