TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 05
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 05 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
உலகின் முதல் புவி அறிவியல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது
- சீனா 5 நவம்பர் 2021 அன்று, வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து பூமி அறிவியல் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது / CHINA LAUNCHES WORLD’S FIRST EARTH-SCIENCE SATELLITE
- குவாங்மு என்ற செயற்கைக்கோள் லாங் மார்ச்-6 கேரியர் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
- செயற்கைக்கோள் (SDGSAT-1) என்பது உலகின் முதல் விண்வெளி அறிவியல் செயற்கைக்கோள் ஆகும்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டுவைன் பிராவோ ஓய்வு
- மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் / DWAYNE BRAVO ANNOUNCES RETIREMENT FROM INTERNATIONAL CRICKET
- பிராவோ 2006 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 90 டி20 போட்டிகளில் விளையாடினார்.
- அவர் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் ஒருவராக இருந்தார்.
பூனம் தலால் தஹியாவின் “நவீனகால இந்தியா” புத்தகம்
- பூனம் தலால் தஹியா எழுதிய ‘மாடர்ன் இந்தியா’ புத்தகத்தை ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் வெளியிட்டார்.
- இந்நூல் நவீன இந்தியாவின் வரலாறு பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
உலக உணவு விலைக் குறியீடு
- ஒரு கூடை உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளைக் கண்காணிக்கும் FAO (FOOD AND AGRICULTURAL ORGANIZATION / உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு) உணவு விலைக் குறியீடு செப்டம்பர் 2021 இலிருந்து 3.9 சதவீதம் அதிகரித்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது / WORLD FOOD PRICES REACH HIGHEST LEVEL: FAO FOOD PRICE INDEX
- தானியங்களின் விலை ஒட்டுமொத்தமாக 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது, கோதுமை ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது.
- காய்கறி எண்ணெய் குறியீடு 9.6 சதவீதம் உயர்ந்து, எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது, மேலும் பால்பண்ணை 2.6 புள்ளிகள் உயர்ந்தது.
ஒரு உலகளாவிய வியட்நாம் உச்சி மாநாடு
- “ஒரு உலகளாவிய வியட்நாம் உச்சி மாநாடு”, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் துவங்கியது / FRANCE HOSTS ONE GLOBAL VIETNAM SUMMIT
- இம்மாநாட்டின் கரு = திறமை. புதுமை. நிலைத்தன்மை / INNOVATION. SUSTAINABILITY
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர்
- ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார் / UNMUKT CHAND BECOMES 1ST INDIAN MALE TO PLAY IN AUSTRALIA’S BBL
- இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்
- இவர் முன்னாள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து சமிபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்
- சந்த் கேப்டனாக 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது / WORLD TSUNAMI AWARENESS DAY
- சுனாமி என்பது நீருக்கடியில் ஏற்படும் இடையூறுகளால் உருவாகும் பிரமாண்ட அலைகளின் தொடர், பொதுவாக பூகம்பங்களுடன் தொடர்புடையது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியா, காம்பியா இடையே ஒப்பந்தம்
- இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்கு பெறுவதற்கான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மற்றும் காம்பியா இடையேயான ஒத்துழைப்புக்கான பொதுவான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.
- காம்பியாவின் கோரிக்கையின் அடிப்படையில், டயாலிசிஸ் இயந்திரங்களை வாங்குவதற்கு 5 லட்சம் அமெரிக்க டாலர் மானியம் மீண்டும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோல்னுபிராவிர் – வாய்வழி கோவிட் மாத்திரையை அங்கீகரித்த உலகின் முதல் நாடு
- மோல்னுபிராவிர் எனப்படும் மெர்க்கின் வாய்வழி கோவிட் மாத்திரையை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது / MOLNUPIRAVIR – UK BECOMES FIRST COUNTRY TO APPROVE MERCK’S ORAL COVID PILL
- பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஏஜென்சி (MHRA) இந்த மோல்னுபிராவிர் மாத்திரையை சோதனைக்கு பிறகு அங்கீகரித்துள்ளது
ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆகாஷ் குமார் வெண்கலம் வென்றார்
- ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆகாஷ் குமார் வெண்கலம் வென்றார். ஆகாஷ் பதக்கம் வென்ற ஏழாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார் / AKASH KUMAR WINS BRONZE IN MEN’S BOXING WORLD CHAMPIONSHIPS
- இந்தியாவின் முந்தைய பதக்கம் வென்றவர்கள் விஜேந்தர் சிங் (வெண்கலம், 2009), விகாஸ் கிரிஷன் (வெண்கலம், 2011), தாபா (வெண்கலம், 2015), கௌரவ் பிதுரி (வெண்கலம், 2017), பங்கல் (வெள்ளி, 2019) மற்றும் கௌசிக் (வெண்கலம், 2019,).
கோவா கடல்சார் கூடுகை
- கோவா கடல்சார் கான்க்ளேவ் (GOA MARITIME CONCLAVE) 2021 இன் 3வது பதிப்பு சமீபத்தில் கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் நடைபெற்றது.
- கரு = Maritime Security and Emerging Non-Traditional Threats: A Case for Proactive Role for IOR Navies.
- நோக்கம்: கடல்சார் பாதுகாப்பு பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கூட்டு ஞானத்தைப் பயன்படுத்தி, விளைவு சார்ந்த கடல்சார் சிந்தனையைப் பெறுதல்.
QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2022
- QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2022 பட்டியல் வெளியிடப்பட்டது
- மொத்தம் 18 நாடுகளின் 687 பல்கலைக்கழகங்கள் இதில் பட்டியலிடப்பட்டன
- இதில் இந்தியாவில் இருந்து 118 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன
- முதல் 3 இடங்கள் = சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும் பிடித்தன
- இந்தியாவில் இருந்து
- 42-வது இடம் = பம்பாய் அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
- 45-வது இடம் = டெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
- 54-வது இடம் = மெட்ராஸ் அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
- 56-வது இடம் = பெங்களூரு அகில இந்திய அறிவியல் கழகம்
இந்திய, எகிப்து விமானப் படைகளின் “டெசர்ட் வாரியார்” போர் பயிற்சி நிகழ்ச்சி
- இந்தியா மற்றும் எகிப்தின் விமானப் படைகள் பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும் செயல்பாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் எகிப்தின் எல் பெரிங்காட் விமானத் தளத்தில் ‘டெசர்ட் வாரியர்’ என்ற இரண்டு நாள் பயிற்சியை நடத்தியது / DESERT WARRIOR – AIR FORCES OF INDIA AND EGYPT CONDUCTS JOINT EXERCISE
- இரு நாடுகளுக்கு இடையேயான பயிற்சி அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
சுதா மூர்த்தியின் புதிய புத்தகம்
- இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி, “THE SAGE WITH TWO HORNS: UNUSUAL TALES FROM MYTHOLOGY” என்ற தலைப்பில் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
- இது “புராணக் கதைகளிலிருந்து அசாதாரண கதைகள் (UNUSUAL TALES FROM MYTHOLOGY)” தொடரின் 5வது மற்றும் கடைசி புத்தகம்
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 04
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 03
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 02
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 01
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 31
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 30