TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 05 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
உலகின் முதல் புவி அறிவியல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது
சீனா 5 நவம்பர் 2021 அன்று, வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து பூமி அறிவியல் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது / CHINA LAUNCHES WORLD’S FIRST EARTH-SCIENCE SATELLITE
குவாங்மு என்ற செயற்கைக்கோள் லாங் மார்ச்-6 கேரியர் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
செயற்கைக்கோள் (SDGSAT-1) என்பது உலகின் முதல் விண்வெளி அறிவியல் செயற்கைக்கோள் ஆகும்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டுவைன் பிராவோ ஓய்வு
மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் / DWAYNE BRAVO ANNOUNCES RETIREMENT FROM INTERNATIONAL CRICKET
பிராவோ 2006 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 90 டி20 போட்டிகளில் விளையாடினார்.
அவர் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் ஒருவராக இருந்தார்.
பூனம் தலால் தஹியாவின் “நவீனகால இந்தியா” புத்தகம்
பூனம் தலால் தஹியா எழுதிய ‘மாடர்ன் இந்தியா’ புத்தகத்தை ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் வெளியிட்டார்.
இந்நூல் நவீன இந்தியாவின் வரலாறு பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
உலக உணவு விலைக் குறியீடு
ஒரு கூடை உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளைக் கண்காணிக்கும் FAO (FOOD AND AGRICULTURAL ORGANIZATION / உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு) உணவு விலைக் குறியீடு செப்டம்பர் 2021 இலிருந்து 3.9 சதவீதம் அதிகரித்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது / WORLD FOOD PRICES REACH HIGHEST LEVEL: FAO FOOD PRICE INDEX
தானியங்களின் விலை ஒட்டுமொத்தமாக 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது, கோதுமை ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது.
காய்கறி எண்ணெய் குறியீடு 9.6 சதவீதம் உயர்ந்து, எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது, மேலும் பால்பண்ணை 2.6 புள்ளிகள் உயர்ந்தது.
ஒரு உலகளாவிய வியட்நாம் உச்சி மாநாடு
“ஒரு உலகளாவிய வியட்நாம் உச்சி மாநாடு”, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் துவங்கியது / FRANCE HOSTS ONE GLOBAL VIETNAM SUMMIT
இம்மாநாட்டின் கரு = திறமை. புதுமை. நிலைத்தன்மை / INNOVATION. SUSTAINABILITY
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார் / UNMUKT CHAND BECOMES 1ST INDIAN MALE TO PLAY IN AUSTRALIA’S BBL
இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்
இவர் முன்னாள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து சமிபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்
சந்த் கேப்டனாக 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது / WORLD TSUNAMI AWARENESS DAY
சுனாமி என்பது நீருக்கடியில் ஏற்படும் இடையூறுகளால் உருவாகும் பிரமாண்ட அலைகளின் தொடர், பொதுவாக பூகம்பங்களுடன் தொடர்புடையது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியா, காம்பியா இடையே ஒப்பந்தம்
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்கு பெறுவதற்கான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மற்றும் காம்பியா இடையேயான ஒத்துழைப்புக்கான பொதுவான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.
காம்பியாவின் கோரிக்கையின் அடிப்படையில், டயாலிசிஸ் இயந்திரங்களை வாங்குவதற்கு 5 லட்சம் அமெரிக்க டாலர் மானியம் மீண்டும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோல்னுபிராவிர் – வாய்வழி கோவிட் மாத்திரையை அங்கீகரித்த உலகின் முதல் நாடு
மோல்னுபிராவிர் எனப்படும் மெர்க்கின் வாய்வழி கோவிட் மாத்திரையை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது / MOLNUPIRAVIR – UK BECOMES FIRST COUNTRY TO APPROVE MERCK’S ORAL COVID PILL
பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஏஜென்சி (MHRA) இந்த மோல்னுபிராவிர் மாத்திரையை சோதனைக்கு பிறகு அங்கீகரித்துள்ளது
ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆகாஷ் குமார் வெண்கலம் வென்றார்
ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆகாஷ் குமார் வெண்கலம் வென்றார். ஆகாஷ் பதக்கம் வென்ற ஏழாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார் / AKASH KUMAR WINS BRONZE IN MEN’S BOXING WORLD CHAMPIONSHIPS
இந்தியாவின் முந்தைய பதக்கம் வென்றவர்கள் விஜேந்தர் சிங் (வெண்கலம், 2009), விகாஸ் கிரிஷன் (வெண்கலம், 2011), தாபா (வெண்கலம், 2015), கௌரவ் பிதுரி (வெண்கலம், 2017), பங்கல் (வெள்ளி, 2019) மற்றும் கௌசிக் (வெண்கலம், 2019,).
கோவா கடல்சார் கூடுகை
கோவா கடல்சார் கான்க்ளேவ் (GOA MARITIME CONCLAVE) 2021 இன் 3வது பதிப்பு சமீபத்தில் கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் நடைபெற்றது.
கரு = Maritime Security and Emerging Non-Traditional Threats: A Case for Proactive Role for IOR Navies.
நோக்கம்: கடல்சார் பாதுகாப்பு பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கூட்டு ஞானத்தைப் பயன்படுத்தி, விளைவு சார்ந்த கடல்சார் சிந்தனையைப் பெறுதல்.
QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2022
QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2022 பட்டியல் வெளியிடப்பட்டது
மொத்தம் 18 நாடுகளின் 687 பல்கலைக்கழகங்கள் இதில் பட்டியலிடப்பட்டன
இதில் இந்தியாவில் இருந்து 118 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன
முதல் 3 இடங்கள் = சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும் பிடித்தன
இந்தியாவில் இருந்து
42-வது இடம் = பம்பாய் அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
45-வது இடம் = டெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
54-வது இடம் = மெட்ராஸ் அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
56-வது இடம் = பெங்களூரு அகில இந்திய அறிவியல் கழகம்
இந்திய, எகிப்து விமானப் படைகளின் “டெசர்ட் வாரியார்” போர் பயிற்சி நிகழ்ச்சி
இந்தியா மற்றும் எகிப்தின் விமானப் படைகள் பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும் செயல்பாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் எகிப்தின் எல் பெரிங்காட் விமானத் தளத்தில் ‘டெசர்ட் வாரியர்’ என்ற இரண்டு நாள் பயிற்சியை நடத்தியது / DESERT WARRIOR – AIR FORCES OF INDIA AND EGYPT CONDUCTS JOINT EXERCISE
இரு நாடுகளுக்கு இடையேயான பயிற்சி அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
சுதா மூர்த்தியின் புதிய புத்தகம்
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி, “THE SAGE WITH TWO HORNS: UNUSUAL TALES FROM MYTHOLOGY” என்ற தலைப்பில் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இது “புராணக் கதைகளிலிருந்து அசாதாரண கதைகள் (UNUSUAL TALES FROM MYTHOLOGY)” தொடரின் 5வது மற்றும் கடைசி புத்தகம்