Tnpsc General Tamil Part A – Vina Vidai

Tnpsc General Tamil Part A – Vina Vidai

vina vidai

வினா

ஒருவர் ஒரு செய்தியை பற்றி தெரிந்துகொள்ள மற்றொருவரிடம் கேட்பதே வினா என்பர்.  வினா வகைகள் 6 வகைப்படும்.

வினா குறித்து நன்னூல் பாடல் 385 குறிப்பிடுகிறது. அது.

“ அறிவறி யாமை ஐயுறல்கொளல் கொடை

ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்”

  1. அறிவினா
  2. அறியா வினா
  3. ஐய வினா
  4. கொளல் வினா
  5. கொடை வினா
  6. ஏவல் வினா

1) அறிவினா

தம் அறிவோடு பிறர் அறிவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், பிறர் அறிவை அளந்தறியவும், அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது அறிவினா ஆகும்

எ.கா:

உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்பது ஆகும்.

2) அறியா வினா

தான் ஒரு பொருளைப் பற்றி அறியாத ஒன்றை அதை பிறரிடமிருந்து அறிந்துகொள்வதற்காக வினாவுவது அறியாவினா என்று பெயர்.

எ.கா.

ஐயா இப்பாடற் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம் கேட்பதாகும்.

3) ஐய வினா

ஒரு பொருளைப் பற்றி இதுவா, அதுவா என்று ஐயப்பட்டு ஐயத்தை நீக்கிக்கொள்ள வினாவுவது ஐய வினாவாகும்.

எ.கா.

அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?

4) கொளல் வினா

ஒன்றனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுப் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும்.

எ.கா

ஒன்பதாம் வகுப்பு மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று “ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் புத்தகம் உள்ளதா?” என்று வினாவுவது கொளல் வினாவாகும்

5. கொடை வினா

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் எண்ணத்துடன் ஒருவர் மற்றவரிடம் வினாவுவது கொடை வினா ஆகும்.

எ.கா

புலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும்

6. ஏவல் வினா

ஒருவர் ஒரு செயலைச் செய்யும்பொருட்டு வினவப்படும் வினா ஏவல் வினாவாகும்.

எ.கா

ஆசிரியர் மாணவனிடம் “இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல்

மாணவன் மனப்பாடம் செய்யவில்லை என்று கூறினால் அவனை மனப்பாடம் செய்யும்படி ஏவவும், மனப்பாடம் செய்துவிட்டேன் என்று கூறினால் “பார்க்காமல் எழுதிக்காட்டு” என்று ஏவவும் வினா வினாராதலின் இது ஏவல் வினாவாயிற்று

விடை

விடை எட்டு வகைப்படும்.

அவை,

  1. சுட்டு விடை
  2. எதிர்மறை விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை
  5. வினா எதிர் வினாதல் விடை
  6. உற்றது உரைத்தல் விடை
  7. உருவது கூறல் விடை
  8. இனமொழி விடை

1. சுட்டு விடை

நாம் வினவும் கேள்விற்கு சுட்டிக் காட்டி விடை கூறுவது சுட்டு விடை ஆகும்

எ.கா

சென்னைக்கு செல்லும் வழி எது என்று கேட்டால், சென்னைக்கு செல்லும் வழி இதுதான் என்று சுட்டிக் கூறுவதாகும்

2. எதிர்மறை விடை

நாம் கேட்கும் கேள்விற்கு எதிர்மறையாக விடை கூறுவது எதிர்மறை விடை ஆகும்

எ.கா

நீ பாடுவாயா? என்றால் பாடமாட்டேன் என விடை கூறுவதாகும்

3. நேர்விடை

நாம் கேட்கும் கேள்விற்கு உடன்பட்டு விடை கூறுவது நேர்விடை ஆகும்

எ.கா

நாளை கல்லூரிக்கு செல்வாயா? என்றால் செல்வேன் என்று கூறுவதாகும்.

4. ஏவல் விடை

கேட்கப்படும் கேள்விகளுக்கு கேட்பவரையே ஏவுதல் போன்று விடை கூறுவது ஏவல் விடை ஆகும்

எ.கா

கடைக்கு செல்வாயா? என்று கேட்டால் நீயே செல் என்று கூறுவதாகும் நீ சற்று இங்கு வருவாயா என்ற கேள்விக்கு “நீ வா” என்று விடை கூறுவதாகும்

5. வினா எதிர் வினாதல் விடை

நாம் கேட்கும் கேள்விகளுக்கு விடையையே வினா போலவே கூறுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.

எ.கா

கடைக்கு செல்வாயா? என்று கேட்டால் நீ செல்லக்கூடாதா? என்று பதில் கூறுவது ஆகும்.

6. உற்றது உரைத்தல் விடை

நாம் கேட்கும் கேள்விக்கு தனக்கு உற்றதனை விடையாக கூறுவது உற்றது உணர்தல் விடை ஆகும்.

எ.கா

நீ பாடுவாயா ? என்றால் பல் வலிக்கிறது என்று விடை கூறுவதாகும்

7. உருவது கூறல் விடை

நாம் கேட்கும் கேள்விக்கு தனக்கு நிகழப்போகும் ஒன்றை விடையாக கூறுவது உருவது கூறல் விடை ஆகும்.

எ.கா

கடைக்கு செல்வாயா? என்றால் கால் வலிக்கும் என்று விடை கூறுவதாகும்

8. இனமொழி விடை

நாம் கேட்கும் கேள்விற்கு, அதற்குரிய விடை கூறாமல் வேறு ஒரு விடையை கூறுவது இனமொழி விடை ஆகும்.

எ.கா

நீ பாடுவாயா? என்று கேட்டால் ஆடுவேன் என்று பதில் கூறுவதாகும்

விடை எடுத்துகாட்டு:

“ஒரு முத்தம் தா…” – இது காதலன் கேள்வி …

1. “அவங்களை பார்!” என்று காதலி ஐந்தடி இடைவெளியில் இருக்கும் ஜோடியை காட்டுவது – “சுட்டு விடை”

2. முடியாது போடா! – “எதிர்மறை விடை”

3. ஒன்னே ஒன்னு! – “நேர் விடை”

4. தள்ளி உக்கார்! – “ஏவல் விடை”

5. உதை வேணுமா? – “வினா எதிர் வினாதல்”

6. பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துட்டார்! – “உற்றது உரைத்தல்”

7. யாராவது பாத்திருவாங்க – “உறுவது கூறல்”

8. மடியில் படுத்துக்கோ – “இனமொழி விடை”

Leave a Reply