TNPSC INDIAN POLITY – Making Of The Constitution
இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கம்
அரசியல் சட்டம்:
- ஒரு நாட்டு மக்கள் ஆளப்படுவதற்கான அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதே அரசியல் சட்டம் ஆகும்
- ஆட்சியமைப்பின் மிக முக்கிய கூறுகளான சட்டமியற்றுதல், நிர்வாகம், நீதி – ஒழுங்கு போன்றவற்றைப் பற்றி எடுத்துரைப்பதும்; அவற்றின் அதிகாரங்களை விவரிப்பதும்; அவற்றின் பொறுப்பை நடைமுறைப்படுத்துவதும்; அவற்றிற்கிடையேயான பரஸ்பர தொடர்பையும், மக்களுடனான தொடர்பையும் கட்டுப்படுத்துவது அரசியல் சட்டமாகும்.
- 1934ல் இந்தியாவிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன் முதலில் கூறியவர் எம்.என்.ராய் ஆவார்.
- திரு எம்.என்.ராய் அவர்கள் 1927ல், “இந்தியன் பேட்ரியாட்” (INDIAN PATRIOT) என்ற இதழில் முதலில் இந்திய அரசியல் நிர்ணய சபை பற்றி கூறியுள்ளார்
- 1936ம் ஆண்டு பைசாபூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது (மாநாட்டு தலைவர்= நேரு)
- இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆங்கில அரசு 1940ம் ஆண்டு “ஆகஸ்ட் நன்கொடை”யில் ஏற்றுக்கொண்டது
- 1946ம் ஆண்டு கேபினெட் மிஷன் திட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்புதலை அடுத்து 1946 நவம்பர் மாதம் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது
அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு:
- அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 ஆகும்
- இதில் 296 இடங்கள் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் , 93 இடங்கள் சுதந்திர அரசகளுக்கும் ஒதுக்கப்பட்டன
- மாகாணங்கள் மற்றும் இந்திய மாநில மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் (சுமார் 10 இலட்சம் பேருக்கு ஒரு உறுப்பினர்) உறுப்பினர் இடங்கள், அந்தந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமையுமாறு இருந்தது
- பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த 296 இடங்களுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
- சுதந்திர அரசுகளின் தலைவர்கள் உறுப்பினர்களை நியமித்தனர்
- எனவே அரசியல் நிர்ணயசபை, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க்கப்பட்ட உறுப்பினர்களும், நேரடியாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட அவையாக அமைந்தது
- பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள 296 இடங்களுக்கான தேர்தல் 1946ம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது
- இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 208 இடங்களையும், முஸ்லிம் லீக் 73 இடங்களையும், தனிப்பட்ட உறுப்பினர்கள் 15 பேர்களும் வெற்றி பெற்றனர்
அரசியல் நிர்ணயசபையின் தொடக்கம்:
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி கூடியது
- இக்கூட்டத்தை முஸ்லிம் லீக் புறக்கணித்தது
- முதல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மொத்த உறுப்பினர்கள் = 211
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: இம்முறை பிரெஞ்சு நாட்டில் பின்பற்றப்படும் முறையாகும்)
- 1946ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அரசியல் நிர்ணயசபை கூடியது
- அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டர்
- அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவராக எச்.சி.முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டர்
- அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராக சர்.பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார்
குறிக்கோள் தீர்மானம்:
- 1946ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க “குறிக்கோள் தீர்மானத்தை” நேரு முன்மொழிந்தார்
- இத் தீர்மானம், அரசியல் நிர்ணய சபையால் 1947ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
- இக்குறிக்கோள் தீர்மானத்தின் மாறுபட்ட வடிவமே தற்போதைய அரசியல் அமைப்பின் “முகப்புரை” ஆகும்
சுதந்திரத்திற்கு பிறகு:
- அரசியல் நிர்ணய சபை மத்திய சட்ட சபையாகவும் செயல்பட்டது. அதாவது, அரசியல் நிர்ணய சட்டம் உருவாக்க சபை கூடும் மற்றும் நாட்டிற்கு தேவையான் அடிப்படை சட்டங்களை உருவாகவும் அவை கூடும்
- இவ்விரு தனிதனி செயல்களுக்கும் தனித்தனி நாட்களில் அவை கூடும்.
- அரசியல் நிர்ணய சபைக்கு அவை கூடும் போது, அவையை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்று நடத்துவார்
- சட்டமன்றமாக அவை கூடும் போது, ஜி.வி.மவ்லான்கர் தலைமை ஏற்று நடத்துவார் (குறிப்பு: இந்தியாவின் முதல் சபாநாயகர் = கணேஷ் வாசுதேவ மவ்லான்கர்)
- 1946 காபினட் மிஷன் திட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்ட 389 இடங்கள், இறுதியாக குறைந்து 299 ஆக ஆனது.
பிற பணிகள்:
- 1949ம் ஆண்டு மே மாதம், இந்தியா காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர் ஆவதற்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளித்தது
- அரசியல் நிர்ணய சபையால் தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜூலை 22, 1947
- அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
- அரசியல் நிர்ணய சபையால் தேசிய பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
- அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்ட தினம் = ஜனவரி 24, 1950
- அரசியல் நிர்ணய சபையின் கூட்டுக் கூட்டம் மொத்தம் 11 முறை நடந்தது
- இதற்காக எடுத்துக்கொண்ட நாட்கள் 2 வருடம், 11 மாதம் மற்றும் 18 நாட்கள்
- அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவு அறிக்கை உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் = 114
- அரசியல் நிர்ணய சபைக்கு செலவான மொத்த தொகை = 64 இலட்சம்
- 64 இலட்சம் ரூபாய் செலவில் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது
அரசியல் நிர்ணய சபை குழுக்கள்:
- அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன
- மொத்தம் அமைக்கப்பட்ட குழுக்கள் = 22
- அவற்றில் முக்கியமானது = 8 குழுக்கள்
- குழுக்களும் அவற்றின் தலைவர்களும்,
- ஒன்றிய அதிகார குழு = ஜவஹர்லால் நேரு
- ஒன்றிய அரசியலைம்பு சட்ட குழு = ஜவஹர்லால் நேரு
- மாகாண அரசியலைம்பு சட்ட குழு = வல்லபாய் படேல்
- வரைவு குழு = டாக்டர் அம்பேத்கர்
- செயல்முறை விதிகள் குழு = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- மாநிலங்கள் குழு = ஜவஹர்லால் நேரு
- வழிகாட்டு குழு = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் போன்றவைகான அறிவுரை குழு = சர்தார் வல்லபாய் படேல். இக்குழு 4 துணைக்குழுக்களை உள்ளடக்கியது. அவை
- அடிப்படை உரிமைகள் துணைக்குழு = ஜே.பி.கிருபாளினி
- சிறுபான்மையினர் துணைக்குழு = எச்.சி.முகர்ஜி
- வடகிழக்கு எல்லை மலைவாழ் மக்களுக்கான துணைக்குழு = கோபிநாத் பர்தோலி
- அஸ்ஸாம் மாநிலம் தவிர பிற மலைவாழ் பகுதிகளுக்கான துணைக்குழு = ஏ.வி.தக்கார்
சிறு குழுக்கள்:
- அரசியல்நிர்ணய சபை பணிகள் குழு = ஜி.வி.மவ்லான்கர்
- நிதி மற்றும் பணியாளர் குழு = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- வரைவு அரசியலமைப்பை ஆராயும் சிறப்பு குழு = அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
- தேசிய கொடிக்கான தற்காலிக குழு = டாக்டர் ராஜேந்திர பிராசாத்
- அறிமுக ஆவணக் குழு = அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
- உச்ச நீதிமன்ற தற்காலிக குழு = எஸ். வரதாசாரியார்
வரைவு குழு:
- அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட குழுக்களில் மிக முக்கியமான குழு, வரைவு குழு ஆகும்
- வரைவு குழு அமைக்கப்பட்ட தினம் = 1947, ஆகஸ்ட்29
- இக்குழு 7 உறுப்பினர்களை உள்ளடக்கியது. அவர்கள்,
- ஆக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தலைவர்)
- என் கோபாலசுவாமி ஐயங்கார்
- அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
- டாக்டர் கே.எம்.முன்ஷி
- சையத் மொஹம்மத் சாதுல்லா
- பி.எல்.மிட்டர், இவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இவ்விடத்திற்கு “என். மாதவ ராவ்” நியமிக்கப்பட்டார்
- டி.பி.கைத்தான், இவர் 1948ல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இவ்விடத்திற்கு“டி.டி.கிருஷ்ணமாச்சாரி” நியமிக்கப்பட்டார்
- அரசியல் நிர்ணய சபையின் முதல் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது = 1948 பிப்ரவரி
- அரசியல் நிர்ணய சபையின் இரண்டாவது வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது = 1948 அக்டோபர்
- வரைவு குழு கூடிய மொத்த நாட்கள் = 141 நாட்கள்
பிரேம் பெஹாரி நரைன் ரைசாத்:
- இந்திய அரசியல் சட்டம் கைகளால் எழுதப்பட்ட ஒரு ஆவணமாகும்
- இதை எழுதியவர் பிரேம் பெஹாரி நரைன் ரைசாத் ஆவார்
- இதை எழுத அவருக்கு ஆறு மாதங்கள் பிடித்தது
அரசியல் அமைப்பு ஆரம்பம்:
- 1948, நவம்பர் 4ம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வரைவு குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்
- இவ்வறிக்கை மீது பொது விவாதம் ஐந்து நாட்கள் நடைபெற்றது (நவம்பர் 9 வரை)
- வரைவு அறிக்கை மீதான இரண்டாவது விவாதம் நவம்பர்15, 1948 முதல்அக்டோபர் 17, 1949 வரை நடைபெற்றது
- அதில் 7653 திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, முடிவில் 2473 திருத்தங்கள் மீது மட்டுமே விவாதம் நடந்தது
- வரைவு அறிக்கை மீதான மூன்றாவாது விவாதம் 1949, நவம்பர் 14ம் தேதி தொடங்கியது
- வரைவு அரசியல் அமைப்பு சட்டம் 1949, நவம்பர் 26ம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினர்களிடமும் தலைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது
- மொத்தமுள்ள 299 உறுப்பினர்களில் 284 உறுபினர்கள் அன்று கையெழுத்து இட்டனர்
- அத்தினமே அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாக அரசியலமைப்பின் முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- குடியுரிமை, தேர்தல், தற்காலிக பாராளுமன்றம் ஆகிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன (1949, நவம்பர் 26)
- ஏனைய விதிகள் 1950, ஜனவரி 26ம் தேதி முதல் அமலில் வந்தன.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்:
- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வரைவு குழுவின் தலைவர் ஆவார்
- இவர்,
- இந்திய அரசியலமைப்பின் தந்தை
- இந்திய அரசியலமைப்பின் சிற்பி
- நவீன மனு
என்றெல்லாம் போற்றபடுகிறார்
ஜனவரி 26, 1950:
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினம் = ஜனவரி 26, 1950 ஆகும்
- இத்தினமே, “அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினம்” மற்றும் “இந்திய குடியரசு தினம்” ஆகும்.
- ஜனவரி 26, தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுக்கிய காரணம், “1929, டிசம்பரில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் லாகூர் மாநாட்டில், 1930 ஜனவரி 26ம் தேதி பூரண சுயராஜ்ஜிய தினமாக கொண்டாடப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசியல் நிர்ணய சபையை பற்றிய விமர்சனம்:
- இந்திய அரசியல் நிர்ணய சபை “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுபினர்களை கொண்ட சபை அல்ல” என குற்றம் சாட்டினர்
- கிரான்வில் ஆஸ்டின் = “அரசியல் நிர்ணய சபையானது ஒருகட்சி அவையாகவும், ஒருகட்சி நாடாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியே அவை, காங்கிரசே இந்தியா ஆகும்” என்றார் (The Constituent Assembly was a one-party body in an essentially one-party country. The Assembly was the Congress and the Congress was India”
- “இந்திய அரசியல் நிர்ணய சபையானது வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளை மட்டுமே உள்ளடக்கியது” என்று கூறப்பட்டது
- விஸ்கன்ட் சைமன் பிரபு = “ஒரு இந்து மத அவை ஆகும்” (A body of Hindus)
- வின்ஸ்டன் சர்ச்சில் = “அரசியல் நிர்ணய சபை, இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்தையே காட்டுகிறது” (Only one major community in India)
11 கூட்டங்கள்:
- முதல் கூட்டம் = 9 –23, டிசம்பர் 1946
- இரண்டாவது கூட்டம் = 20–25, ஜனவரி 1947
- மூன்றாவது கூடம் = 28 ஏப்ரல் –2 மே, 1947
- நான்காவது கூட்டம் = 14–31 ஜூலை,1947
- ஐந்தாவது கூட்டம் = 14–30 ஆகஸ்ட்,1947
- ஆறாவது கூட்டம் = 27 ஜனவரி 1948
- ஏழாவது கூட்டம் = 4 நவம்பர்,1948–8 ஜனவரி,1949
- எட்டாவது கூட்டம் = 16 மே –16 ஜூன், 1949
- ஒன்பதாவது கூட்டம் = 30 ஜூலை –18 செப்டம்பர், 1949
- பத்தாவது கூட்டம் = 6–17 அக்டோபர்,1949
- பதினொன்றாவது கூட்டம் = 14–26 நவம்பர்,1949
- இறுதியாக ஜனவரி 24,1950 அன்று கூடியது
- NATIONAL ANTHEM (தேசிய கீதம்)
- NATIONAL SONG (தேசிய பாடல்)
- NATIONAL FLAG (தேசியக் கொடி)
- NATIONAL EMBLEM (தேசிய சின்னம்)
தேதிகள் & வருடங்கள்:
பூரண சுயராஜ்யம் கொண்டாடப்பட்ட தினம் | ஜனவரி 26, 1930 |
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூடம் தொடங்கிய நாள் | டிசம்பர் 9, 1946 |
அரசியல் நிர்ணயசபை தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் | டிசம்பர் 11, 1946 |
நேருவால் குறிக்கோள் தீர்மானம் முன்மொழிந்த தினம் | டிசம்பர்13, 1946 |
குறிக்கோள் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் | ஜனவரி 22, 1947 |
இந்திய காமன்வெல்த் உறுப்பினர் ஆவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது | மே 1949 |
தேசிய கோடி அங்கீகரிக்கப்பட்ட தினம் | ஜூலை 22, 1947 |
வரைவு குழு அமைக்கப்பட்ட தினம் | ஆகஸ்ட் 29, 1947 |
முதல் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது | பிப்ரவரி 1948 |
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் | நவம்பர் 26, 1949 |
தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட தினம் | ஜனவரி 24, 1950 |
தேசிய பாடல் அங்கீகரிக்கப்பட்ட தினம் | ஜனவரி 24, 1950 |
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் | ஜனவரி 24, 1950 |
அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்ட தினம் | ஜனவரி 24, 1950 |
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினம் | ஜனவரி 26, 1950 |