TNPSC INDIAN POLITY – NATIONAL SONG – தேசிய பாடல் – போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இந்திய தேசிய பாடலை பற்றிய விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய பாடலான “வந்தே மாதரம்” பாடலை, வங்கமொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி, தனது “ஆனந்தமடம்” என்ற நாவலில் 1882-ம் ஆண்டு வெளியிட்டார்
இப்பாடலை எழுதிய ஆண்டு = 1870
இவர் இப்பாடலை முதன்முதலில் சம்ஸ்கிருத மொழியில் எழுதினார். பின்னர் வங்கமொழியிலும் எழுதப்பட்டது
இப்பாடலை முதன் முதலில் பாடியவர் = ரபிந்த்ரநாத் தாகூர்
1896-ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற “இந்திய தேசிய காங்கிரஸ்” மாநாட்டில் இப்பாடலை தாகூர் முதன்முதலாக பாடினார்
சுதந்திரத்திற்கு முன்பாகவே, 1937-ல் “காங்கிரஸ் பணிக்குழு” இப்பாடலின் முதல் இரண்டு வரியை தேசிய பாடலாக ஏற்றது
இப்பாடல் “துர்கா தேவி”க்காக அமைக்கப்பட்டது
ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் இப்பாடலை, “வங்கத்தின் தேசிய கீதம்” என வருணித்தார். அவர் இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
இப்பாடலையும், பாடல் இடம்பெற்ற நாவலையும் ஆங்கிலேய அரசு தடை செய்தது
இப்பாடலை தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 24 ஜனவரி 195௦
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர், ராஜேந்திர பிரசாத், “இந்தியாவின் தேசிய கீதத்திற்கு இணையான கவுரவத்தையும், மரியாதையும் கொண்டுள்ளது இப்பாடல்” என்றார்
ஆனால் தேசியப் பாடல் பற்றி இந்தியாவின் அரசியல் அமைப்பில் எங்கும் குறிப்புகள் இல்லை
இப்பாடலுக்கு இசை அமைத்தவர்கள் = ஹேமந்த முகர்ஜி, ஜதுநாத் பட்டாச்சார்யா
தேசியப் பாடலை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் = நரேஷ் சந்திர சென் குப்தா
19௦1-ல் கலக்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் மீண்டும் இப்பாடல் பாடப்பட்டது. பாடியவர் = தக்கினா சரண் சென்
19௦5 வங்கப் பிரிவினையின் பொழுது வங்காளம் முழுவதும் இப்பாடல் ஒலித்தது
19௦7-ல், “பிக்காஜி காமா” முதலில் உருவாக்கிய இந்திய தேசிய கொடியில் “வந்தே மாதரம்” என்ற வாசகம் இடம் பெற்றது. அவர் இக்கொடியை ஜெர்மனியின் ஸ்டக்கரட் நகரில் பறக்கவிட்டார்.
தற்போது நாம் கேட்கும் வந்தே மாதரம் பாடலுக்கு இசை அமைத்தவர் = வி.டி.பளுஸ்கர்