Tnpsc New Syllabus Tamil Study Material 6th Std – kasi-anandan

கவிஞர் காசி ஆனந்தன்

பாடல்:

தமிழே உயிரே வணக்கம்

தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்

அமிழ்தே நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்

தமிழே உன்னை நினைக்கும்

தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்

          – கவிஞர் காசி ஆனந்தன்

 

ஆசிரியர் குறிப்பு:

  • இயற் பெயர் = காத்தமுத்து சிவானந்தன்
  • பிறப்பு = இலங்கையின் மட்டக்களப்பு, 1938ம் ஆண்டு
  • இலங்கையில் சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து பலமுறை சிறை சென்றவர்
  • வாகன எண் தகடுகளில் சிங்கள எழுத்துக்கள் இருக்கக் கூடாது எனப் போராடி சிறை சென்றவர்
  • இவர் இலங்கையின் 5 சிறைகளில் சுமார் 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்
  • இவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஆவார்
  • இவர் இலங்கை தமிழ் ஈழத்தின் உயரிய விருதான, “மாமனிதர் விருதை” பெற்றுள்ளார்

சிறப்பு பெயர்:

  • உணர்சிக் கவிஞர்
  • ஈழத்துக் எழுசிக் கவிஞர்

கவிதை படைப்புகள்:

  • தெருப்புலவர்
  • உயிர் தமிழுக்கு
  • தமிழன் கனவு
  • காசி ஆனந்தன் கவிதைகள்
  • சுவர்க்கவிகள்

சிறுகதை படைப்புகள்:

  • காசி ஆனந்தால் கதைகள்
  • நறுக்குகள்

 

2 thoughts on “Tnpsc New Syllabus Tamil Study Material 6th Std – kasi-anandan”

  1. வணக்கம் ஐயா,
    இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களுக்கு புதிய பாடத்திட்டங்களும் தேவை அதையும் கருத்தில் கொள்ளவும். தயவுசெய்து புதுப்பிக்கவும் என்று கேட்டுக்கொள்கின்றோம்..
    நன்றி ஐயா,

    1. கண்டிப்பாக புதுப்பிக்கப்படும். நன்றி.

Leave a Reply