TNPSC INDIAN POLITY – NATIONAL SONG – தேசிய பாடல்

TNPSC INDIAN POLITY – NATIONAL SONG – தேசிய பாடல்

 

TNPSC INDIAN POLITY

TNPSC INDIAN POLITY – NATIONAL SONG – தேசிய பாடல் – போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இந்திய தேசிய பாடலை பற்றிய விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

 

  • இந்தியாவின் தேசிய பாடலான “வந்தே மாதரம்” பாடலை, வங்கமொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி, தனது “ஆனந்தமடம்” என்ற நாவலில் 1882-ம் ஆண்டு வெளியிட்டார்
  • இப்பாடலை எழுதிய ஆண்டு = 1870
  • இவர் இப்பாடலை முதன்முதலில் சம்ஸ்கிருத மொழியில் எழுதினார். பின்னர் வங்கமொழியிலும் எழுதப்பட்டது

TNPSC INDIAN POLITY

  • இப்பாடலை முதன் முதலில் பாடியவர் = ரபிந்த்ரநாத் தாகூர்
  • 1896-ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற “இந்திய தேசிய காங்கிரஸ்” மாநாட்டில் இப்பாடலை தாகூர் முதன்முதலாக பாடினார்

TNPSC INDIAN POLITY

  • சுதந்திரத்திற்கு முன்பாகவே, 1937-ல் “காங்கிரஸ் பணிக்குழு” இப்பாடலின் முதல் இரண்டு வரியை தேசிய பாடலாக ஏற்றது
  • இப்பாடல் “துர்கா தேவி”க்காக அமைக்கப்பட்டது
  • ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் இப்பாடலை, “வங்கத்தின் தேசிய கீதம்” என வருணித்தார். அவர் இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
  • இப்பாடலையும், பாடல் இடம்பெற்ற நாவலையும் ஆங்கிலேய அரசு தடை செய்தது
  • இப்பாடலை தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 24 ஜனவரி 195௦
  • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர், ராஜேந்திர பிரசாத், “இந்தியாவின் தேசிய கீதத்திற்கு இணையான கவுரவத்தையும், மரியாதையும் கொண்டுள்ளது இப்பாடல்” என்றார்
  • ஆனால் தேசியப் பாடல் பற்றி இந்தியாவின் அரசியல் அமைப்பில் எங்கும் குறிப்புகள் இல்லை
  • இப்பாடலுக்கு இசை அமைத்தவர்கள் = ஹேமந்த முகர்ஜி, ஜதுநாத் பட்டாச்சார்யா
  • தேசியப் பாடலை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் = நரேஷ் சந்திர சென் குப்தா

TNPSC INDIAN POLITY

  • 19௦1-ல் கலக்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் மீண்டும் இப்பாடல் பாடப்பட்டது. பாடியவர் = தக்கினா சரண் சென்
  • 19௦5 வங்கப் பிரிவினையின் பொழுது வங்காளம் முழுவதும் இப்பாடல் ஒலித்தது
  • 19௦7-ல், “பிக்காஜி காமா” முதலில் உருவாக்கிய இந்திய தேசிய கொடியில் “வந்தே மாதரம்” என்ற வாசகம் இடம் பெற்றது. அவர் இக்கொடியை ஜெர்மனியின் ஸ்டக்கரட் நகரில் பறக்கவிட்டார்.
  • தற்போது நாம் கேட்கும் வந்தே மாதரம் பாடலுக்கு இசை அமைத்தவர் = வி.டி.பளுஸ்கர்

 

Leave a Reply