TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 11, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஆம்பிபியன் படைப்பிரிவு:
அந்தமான் நிகோபார் தீவுகளின் பிர்ச்ச்குஞ்ச் ராணுவ நிலையத்தில் உள்ள இந்திய இராணுவத்தின் “ஆம்பிபியன் படைபிரிவினை”, அந்தமான் நிகோபார் கமாண்டோ படைத் தளபதி பார்வையிட்டார் (Commander-in-Chief Andaman and Nicobar Command (CINCAN) Lieutenant General Ajai Singh visited the Amphibian Brigade at Birchgunj Military Station)
ராணுவ வீரர்களை அணைத்து நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
வேளாண் பொருட்கள் பங்குச்சந்தை குறியீடுகள்:
தேசிய பொருட்கள் மற்றும் பங்குப் பரிமாற்றம் (NCDEX), விவசாயத்தை மையமாகக் கொண்ட இரண்டு பொருட்களின் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.
வேளாண் பொருட்களில் இந்தியாவின் முதல் துறை குறியீடுகள் இவையாகும். அவை GAUREX and SOYDEX
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போட்டி:
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிலம்பம் செய்து முதல் இடத்தை இந்தியாவை சேர்ந்த கணேசன் சந்திரஹாசன் பெற்றார்.
இரண்டாம் இடத்தை விக்னேஷ் சதீஷ் என்பவரும், மூன்றாவது இடத்தை சரண்ராஜ் என்பவரும் வென்றனர்.
உலகளாவிய மன்னிப்பு தினம்:
மக்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கும், அவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு குற்ற உணர்ச்சியையும் வேதனையையும் சுமப்பதை நிறுத்த உலகளாவிய மன்னிப்பு நாள் (Global Forgiveness Day) நிறுவப்பட்டது
உலகளாவிய மன்னிப்பு தினம், உலகம் முழுவதும் ஜூலை 7 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் 1994 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக மக்கள்தொகை தினம்:
உலக மக்கள்தொகை தினம் (World Population Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
உலக மக்கள்தொகை தினம் ஆரம்பிக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டு.
1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, உலக ,மக்கள் தொகை 5 பில்லியனை தொட்டது.
இந்த ஆண்டிற்கான கரு = ‘the impact of the Covid-19 pandemic on fertility
புவிசார் குறியீட்டினை பெற்ற “பசில் மாம்பழம்” ஏற்றுமதி:
மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தின் புகழ் பெற்ற “பசில் மாம்பழம்” (GI certified Fazil Mango of West Bengal), முதல் முறையாக பக்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில உள்ள ஆஸ்திரேலியாவின் “ஆஸ்லே பார்டி”, 2௦21 மகளிர் ஒற்றையர் விம்பிள்டன் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த கரோலின ப்ளிஸ்கோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1980 க்கு பிறகு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை இவராவார்.
விம்பிள்டன் ஆட்டத்தை வெல்லும் 3-வது ஆஸ்திரேலிய வீராங்கனை இவராவார்.
உ.பி. மக்கள் தொகை வரைவு மசோதா:
உத்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டக் கமிசன் சார்பில், “உத்திரப்பிரதேச மக்கள்தொகை (கட்டுப்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் நலன்) மசோதா 2௦21” (Uttar Pradesh Population (Control, Stabilization and Welfare) Bill, 2021) என்ற வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை, அரசின் மானியம், அரசின் சலுகைகள் கிடைக்காது
வெட்டில் எத்தனை பேர் இருந்தாலும் குடும்ப அட்டையில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர் போன்ற பல்வேறு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடற்படை தளங்கள் மீது டிரோன் பறக்க தடை:
இந்திய கடற்படைக்கு சொந்தமான அணைத்து இடங்ளிலும், 3 கிலோமீட்டர் சுற்றுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதியை மீறி பறக்கும் எந்த ரிமோட் விமானங்களையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள, ‘கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை’யின் நிர்வாக அறங்காவலராகவும், ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கும் மூத்த டாக்டருமான பி.கே.வாரியர், தன் 100வது வயதில் இன்று காலமானார்.
பன்னியம்பள்ளி கிருஷ்ணவாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே கோட்டக்கல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. 100 வயதான பி.கே.வாரியர் கோட்டக்கலில் உள்ள அவரது கைலாசமந்திரம் இல்லத்தில் காலமானார்.