TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR

TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR

TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR / தேசிய நாட்காட்டி

  • இந்தியாவின் தேசிய காலெண்டர் அல்லது நாட்காட்டி = சாலிவாகன சகா காலெண்டர் (அல்லது) நாட்காட்டி (அ) இந்து நாட்காட்டி (அ) மகாசக்கரத் வருடம்

TNPSC INDIAN POLITY

  • இந்திய அரசு, இந்திய கெஜட், அகில இந்திய வானொலி போன்ற அரசு நிகழ்வுகளில் இந்த நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது
  • சகா வருடத்துடன் 78 ஆண்டுகளை கூட்டினால் ஆங்கில நாட்காட்டி வருடம் கிடைக்கும். அல்லது ஆங்கில நாட்காட்டி வருடத்தில் இருந்து 78 வருடத்தை கழித்தால்,சகா ஆண்டு கிடைக்கும்

TNPSC INDIAN POLITY

  • சகா வருடத்தை துவக்கியவர், சாதவாகன வம்சத்தை சேர்ந்த மன்னர் சாலிவாகனர் எனக்கூறுவர்
  • சகா வருடத்திற்கும், சாலிவாகன மன்னனுக்கும் இடையேயான தொடர்பை கூறிய முதல் நூல் = கன்னட இலக்கியமான உத்பத்காவியா. இதனை இயற்றியவர் சோமராஜா
  • “நாட்காட்டி சீர்திருத்த குழுவின்” (Calendar Reforms Committee) பரிந்துரையின் அடிப்படையில் “சகா நாட்காட்டியை” இந்திய அரசு தேசிய நாட்காட்டியாக அறிவித்தது. இதன் தலைவராக இருந்தவர் = மேகநாத் சாகா
  • தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 1957 மார்ச் 22 (அ) சகா வருடம் 1879, சைத்ரா மாதம் 1-ம் தேதி

நாட்காட்டி அமைப்பு

  • சகா நாட்காட்டின் முதல் மாதம் = சைத்ரா
  • சைத்ரா மாதம் 3௦ நாட்களை கொண்டது, அது கிரேகேரிய நாட்காட்டி படி மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது.
  • லீப் ஆண்டில் சைத்ரா மாதம் 31 நாட்களையும், மார்ச் 21-ம் தேதியும் துவங்கும்

வ.எண்

மாதத்தின் பெயர்  நீளம் துவங்கும் நாள் (கிரிகேரிய நாட்காட்டி படி)

1

சைத்ரா 30 / 31

மார்ச் 22 / 21

2

வைசாகா 31 ஏப்ரல் 21
3 ஜெயிஸ்தா 31

மே 22

4

அசதா 31 ஜூன் 22

5

ஷ்ரவணா 31 ஜூலை 23
6 பத்ரா 31

ஆகஸ்ட் 23

7 அஷ்வின் 30

செப்டம்பர் 23

8

கார்த்திகா 30 அக்டோபர் 23
9 அக்ராஹயனா 30

நவம்பர் 22

10

பவுஷா 30 டிசம்பர் 22
11 மகா 30

ஜனவரி 21

12 பல்குனா 30

பிப்ரவரி 2௦

சகா நாட்காட்டியில் வார நாட்கள்

TNPSC INDIAN POLITY

  • 0 = ரவிவாரா – ஞாயிறு
  • 1 = சோமவாரா – திங்கள்
  • 2 = மங்கலவாரா – செவ்வாய்
  • 3 = புதவாரா – புதன்
  • 4 = பிரகஸ்பதிவாரா – வியாழன்
  • 5 = சுக்ரவாரா – வெள்ளி
  • 6 = சனிவாரா – சனி

குறிப்பு

TNPSC INDIAN POLITY

  • சகா நாட்காட்டியை, இந்தோனேசியாவில் உள்ள ஜாவா, பாலி தீவுகளில் உள்ள இந்துக்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்
  • இந்தியாவில் நான்கு வகை காலெண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது
    • விக்ரம் நாட்காட்டி = கி.மு 57 வருடத்தை கொண்டு இது உருவாக்கப்பட்டது. இதனை தொடங்கியவர் விக்கிரமாதித்திய அரசன்
    • சகா நாட்காட்டி = சாலிவாகன மன்னர் துவக்கியது. கி.மு 78 வருடத்தில் அடிப்படையில் உருவானது
    • ஹிஜ்ரி நாட்காட்டி = முஸ்லிம்கள் பயன்படுத்தும் நாட்காட்டி
    • கிரிகேரியன் நாட்காட்டி = நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நாட்காட்டி

Leave a Reply