TNPSC POLITY TAMIL – NATIONAL ANIMAL

TNPSC POLITY TAMIL – NATIONAL ANIMAL

TNPSC POLITY TAMIL – NATIONAL ANIMAL  / இந்தியாவின் தேசிய விலங்கு

TNPSC POLITY TAMIL – NATIONAL ANIMAL , நம் தேசிய விலங்கான புலியை பற்றி போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் விவரங்கள் இங்கு தொகுது வழங்கப்பட்டுள்ளது.

TNPSC POLITY TAMIL - NATIONAL ANIMAL

  • இந்தியாவின் தேசிய விலங்கு = புலி (ராயல் வங்கப் புலி)
  • 1972-க்கு முன்னர் இந்தியாவின் தேசிய விலங்காக “சிங்கமே” இருந்தது
  • 1972-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி, புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது
  • இதன் அறிவியல் பெயர் = Panthera Tigris
  • வங்கப் புலியானது உடலில் கோடுகளில் அதிகளவில் கொண்டுள்ளது. கருமையான கோடுகளை கொண்டுள்ள தடிமனான மஞ்சள் நிற ரோமங்களை கொண்டுள்ளது.
  • வலிமை, திறன், மகத்தான ஆற்றல் ஆகியவற்றின் கூட்டான உருவமாக உள்ளதால், புலி தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது
  • புலியினத்தை பாதுகாக்க “Project Tiger” திட்டத்தை இந்திய அரசு 1973-ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டு வந்தது

TNPSC POLITY TAMIL - NATIONAL ANIMAL

  • அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க 1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் நமது பாரத பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது
  • வங்கப்புலியின் சராசரி ஆயுட்காலம் = 8 – 1௦ ஆண்டுகள்
  • அதிகபட்ச ஆயுட்காலம் = 15 ஆண்டுகள்

பொதுப் பெயர்

ராயல் வங்கப்புலி
அறிவியல் பெயர்

பாந்தெரா டைக்ரிஸ்

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

1972-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி
இருப்பிடம்

இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர்

வாழிடம்

காடுகள், பசும்புல்வெளி, மாங்க்ரூவ் காடுகள்
சராசரி எடை

ஆண் – 22௦ கிலோ

பெண் – 140 கிலோ

சராசரி நீளம்

ஆண் – 3 மீட்டர்

பெண் – 2.6 மீட்டர்

சராசரி வேகம்

6௦ கி.மீ / மணி
தற்போதைய எண்ணிக்கை

25௦௦ (2௦16 ஆண்டுவரை)

புலிகள் அழிவதற்கான காரணம்:

  • அதிகப் பணத்துக்காக வேட்டைக்காரர்களால் கொல்லப்படுதல்
  • பெருகிவரும் மக்கள் தொகையால் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுவதால் உண்ண தாவரங்கள் இன்றி மான் போன்ற புலிகளுக்கான இரைகள் அழிந்து புலிகள்  வாழ்விடம்,  உணவு , நீர் ஏதுமின்றி மாண்டுபோதல்
  • எல்லை மனிதர்களுடனான போராட்டத்தில் மனிதனால் கொல்லப்படுதல்
  • வாழ்விடம் துண்டாடப்படுதல் அல்லது  தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடத்தினால் ஒரு குழுவுக்குள்ளேயே ஏற்படும்  இனப்பெருக்கத்தின் குறைவான விகிதம் மற்றும் மரபின குறைபாடுகள்

குறிப்பு:

  • நாட்டின் வடமேற்கு பகுதியை தவிர ராயல் வங்கப் புலி, நாடு முழுவதும் உள்ளது.
  • மேலும் நேபால், பூட்டான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் உள்ளது
  • புலியினத்தில் உள்ள புலிகளிலே, ஆப்ரிக்க கண்டதை விட்டு வெளியே உள்ள ஒரே புலி இனம், இந்தியாவில் உள்ள ராயல் வங்கப் புலி இனம் மட்டுமே.
  • “ப்ராஜெக்ட் புலி” திட்டத்தின் கீழ் இதுவரை 51 புலிகள் சரணாலயம் நாடு முழுவதும் ஏற்படுத்தப் பட்டுள்ளது (2௦2௦ வரை)
  • முதல் புலிகள் சரணாலயம் = கார்பெட் தேசிய பூங்கா (1973)

TNPSC POLITY TAMIL - NATIONAL ANIMAL

  • தற்போதைய நிலையில், இந்தியாவில திக புலிகள் உள்ள மாநிலம் = மத்தியப் பிரதேசம்
  • பூனை இனத்திலேயே மிகப்பெரிய விலங்கு புலிகள் தான்
  • வங்கதேசம், தென்கொரியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்காக புலியே உள்ளது

TNPSC POLITY TAMIL - NATIONAL ANIMAL

  • “இந்தியாவின் புலிகள் தலைநகர்” (Tiger Capital of India) = நாக்பூர்

 

Leave a Reply