இன்பத்தமிழ்
பாடல்:
தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இனபத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்! – பாரதிதாசன் |
ஆசிரியர் குறிப்பு:
- இப்பாடலை இயற்றியவர் “பாவேந்தர் பாரதிதாசன்” ஆவார்
- இவரின் இயற்பெயர் = பாரதிதாசன்
- பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்
- தம் கவிதைகளில், “பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு” முதலான புரட்சிகரமான கருத்துக்களை உள்வாங்கிப் பாடியுள்ளார்.
சிறப்பு பெயர்:
- புரட்சிக்கவிஞர் (அறிஞர் அண்ணா)
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்க்கை கவிஞர்
சொல்லும் பொருளும்:
- நிருமித்த = உருவாக்கிய
- விளைவு = விளைச்சல்
- சமூகம் = மக்கள் குழு
- அசதி = சோர்வு
குறிப்பு:
- பாவேந்தர் பாரதிதாசன் பற்றி “மேலும் அறிந்து கொள்ள”